12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.

  2. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  3. புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  4. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  5. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

  6. கீழ்வரும் கூற்றுகளின் பிழைகளைத் திருத்துக
    அ) கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட அண்டத்தை கருப்பை நாளத்திற்கு இடமாற்றம் செய்யும் முறை ZIFT ஆகும்.
    ஆ) 8 கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை GIFT எனப்படும்.
    இ) மல்டிலோட்  375 என்பது ஒரு ஹார்மோன் வெளிவிடு IUD ஆகும்.

  7. லையோனைசேஷன் என்றால் என்ன?

  8. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  9. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  10. மரபணு குறியீடு ‘உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது’. – காரணங்கள் கூறு.

  11. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.

  12. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  13. மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி.

  14. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி– வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக.

  15. டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை?

  16. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்கு.

  17. நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல்திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும், அவற்றின் பயன்களையும் கூறு.

  18. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது?

  19. ரோஸி எவ்வாறு இயல்பான பசுவினின்று வேறுபடுகின்றது என்பதை விளக்குக.

  20. எலைசா தொழில் நுட்பம் எதிர்பொருள் தூண்டி – எதிர்பொருள் வினை அடிப்படையிலானது. இதே தொழில் நுட்பத்தைக் கொண்டு மரபுக்குறைபாடான ஃபினைல் கீட்டோனூரியாவை மூலக்கூறு நோய்க் கண்டறிதலால் செய்ய இயலுமா?

  21. வாழிடம் என்றால் என்ன?

  22. புதிய சூழலுக்கு இணங்கல் என்றால் என்ன?

  23. மண்ணின் ஊடுருவும் திறன் என்றால் என்ன?

  24. கீழ்க்கண்டவற்றை வரையறு.
    அ) ஓரிடத் தன்மை (endemism)
    ஆ) சிற்றினச் செழுமை (Species richness)

  25. ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?

  26. செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.

  27. விரிவாக்கம் செய்க.
    அ) CFC
    ஆ) AQI
    இ) PAN

  28. உலக வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் விளைவுகளை விவாதி. அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

  29. குறிப்பு வரைக.
    அ) மிகை உணவூட்டம்
    ஆ) பாசிப் பெருக்கம்

  30. கருவியலுக்கு ஹாப்மீஸ்டரின் பங்களிப்பை குறிப்பிடுக.

  31. நகல்கள் என்றால் என்ன?

  32. ‘அபாய நிலை மற்றும் அரிதான தாவர சிற்றினங்கள் பெருகுவதற்கு திசு வளர்ப்பு சிறந்த முறையாகும்’. விவாதி.

  33. மண்முட்டு பதியம் மற்றும் காற்று பதியம் வேறுபடுத்துக.

  34. உண்மை பெருக்கம் அல்லது தூய்கால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?

  35. பிற்கலப்பு என்றால் என்ன?

  36. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய் து F1 ஐ பெறுக. பின்பு F1 ஆண் பழப் பூச்சியை இரட்டை ஒடுங்கு பெண் பழப் பூச்சியுடன் கலப்பு செய்க.
    i) எந்த வகையான பிணைப்பை காணமுடியும்
    ii) சரியான மரபணு வகைய கலப்பிணை வரைக .
    iii) F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?

  37. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியுக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

  38. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?

  39. செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.

  40. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

  41. புவி வாழிடம் மற்றும் செயல் வாழிடம் வேறுப்படுத்துக.

  42. கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை ஏதேனும் ஒரு காரணம் தருக.

  43. மணற்பாங்கான மண் சாகுபடிக்கு உகந்ததல்ல - ஏன் என விளக்குக.

  44. நிகர முதல்நிலை உற்பத்தி திறனை விட மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன் மிகவும் திறன் வாய்ந்தது. விவாதி

  45. சூழல்மண்டலத்திலிருந்து அனைத்து உற்பத்தியாளர்களையும் நீக்கிவிட்டால் என்ன நடைபெறும்? 

  46. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப்படும் நான்கு தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக.

  47. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும் இரண்டாம்நிலை அறிமுகப்படுத்துதலையும் வேறுபடுத்துக.

  48. சோற்றுக்கற்றாழையின் ஒப்பனைப் பயன்பாட்டை எழுது.

  49. மரச்சாமான்கள் ( நாற்காலி போன்றவை ) செய்ய உகந்த கட்டை எது என்பதை விவாதி.

  50. இயற்கை வேளாண்மையின் வரையறையைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment