12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது 

    (a)

    5

    (b)

    12

    (c)

    6

    (d)

    3

  2. பாலினச் சமமின்மைப் பட்டியலில் 187 நாடுகளில் நம்நாடு_______ இடத்தை பெற்றுள்ளது.

    (a)

    135

    (b)

    153

    (c)

    115

    (d)

    151

  3. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

    (a)

    டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.

    (b)

    டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

    (c)

    டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3 முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோட்டுகளை இணைக்கும்.

    (d)

    ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

  4. பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

    (a)

    விலங்கு நகலாக்கம் 

    (b)

    PCR 

    (c)

    எலைசா 

    (d)

    டி.என்.ஏ மறுசேர்க்கை 

  5. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.

    (a)

    WWF

    (b)

    IUCN

    (c)

    ZSI

    (d)

    UNEP

  6. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றகளில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்

    (a)

    25 AB, 25 ab, 25 Ab, 25 aB

    (b)

    10 AB, 10 ab

    (c)

    45 AB, 45 ab

    (d)

    45 AB, 45 ab, 5 Ab, 5 aB

  7. பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?
    1. முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர்  சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
    2. முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
    3. முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம் .
    4. முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.

    (a)

    1 மற்றும் 2

    (b)

    2 மற்றும் 3

    (c)

    3 மற்றும் 4

    (d)

    1 மற்றும் 4

  8. முப்புள்ளி சோதனைக்  கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரை ய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால்

    (a)

    ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (b)

    இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (c)

    பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

    (d)

    மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

  9. ஒரே ககுரோமோசோமில்  G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
    வரிசையை எழுதுக.

    (a)

    G H S L

    (b)

    S H G L

    (c)

    S G H L

    (d)

    H S L G

  10. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தா ல், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

    (a)

    900 cM

    (b)

    90 cM

    (c)

    9 cM

    (d)

    0.9 cM

  11. பின்வருவனவற்றில் எது ஒட்டுண்ணி வாழ்க்கையுடன் தொடர்பற்றது.

    (a)

    அக்கேஷியா, டுரான்தா, கஸ்குட்டா 

    (b)

    பெலனோஃபோரா, ஒரபாங்கி, ரெஃப்லீசியா போன்றவை உயர் தாவரங்களின் மீது காணப்படுதல்.

    (c)

    குடுவைத்தாவரம் பூச்சியுடன் 

    (d)

    விஸ்கம் மற்றும் லோரான்தஸ் - தண்டு ஒட்டுண்ணி 

  12. பின்வரும் கூற்று (அ) அறிக்கையை வாசித்து சரியான விடையை தேர்வு செய்து (A) மற்றும் (B) யில் நிரப்புக.
    தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் __________ (A) _________ மற்றும் உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பன் _______ (B) ______.
    சரியான ஒன்றை தேர்வு செய்க.

    (a)
    பழுப்பு கார்பன்  கருமை கார்பன் 
    (b)
    சாம்பல் கார்பன்  பசுமைக் கார்பன் 
    (c)
    கருமை கார்பன்  சாம்பல் கார்பன் 
    (d)
    பசுமை கார்பன்  நீல கார்பன் 
  13. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?

    (a)

    செஸ்பேனியா மற்றும் அக்கேசியா

    (b)

    சொலானம் மற்றும் குரோட்டலேரியா

    (c)

    கிளைட்டோரியா மற்றும் பிகோனியா

    (d)

    தேக்கு மற்றும் சந்தனம்

  14. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

    (a)

    சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (b)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (c)

    சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (d)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

  15. குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?

    (a)

    மஞ்சள் 

    (b)

    மிளாகாய் 

    (c)

    ஏலக்காய் 

    (d)

    புளி 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. தன் கருவுறுதல் என்றால் என்ன?

  18. விந்துக்குழல் தடை, கருக்குழல் தடை வேறுபடுத்துக.

  19. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  20. PCR-ன் ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை முன்னோடிகள் தேவைப்படுகின்றன? PCRல் மற்றும் டி.என்.ஏ பாலிமரேஸ் பங்கு யாது? PCR சுற்றில் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் எந்த உயிரின மூலத்திலிருந்து பெறப்படுகிறது?

  21. கீழ்க்கண்டவற்றை வரையறு.
    அ) ஓரிடத் தன்மை (endemism)
    ஆ) சிற்றினச் செழுமை (Species richness)

  22. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.

  23. மறுவேறுபாடுறுதல் (Re differentiation) மற்றும் வேறுபாடிழத்தல் (De differentiation) வேறுபடுத்துக.

  24. கடலின் ஆழமான அடுக்குகளில் பசும்பாசிகள் பொதுவாகக் காணப்படுவதில்லை ஏதேனும் ஒரு காரணம் தருக.

  25. இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் கூறு?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. மூல இனச்செல் அடுக்குகள் யாவை? அவற்றிலிருந்து உருவாகும் உறுப்புகள் யாவை?

  28. மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
    ஆஸ்ட்ரலோபித்திகஸ் → ஹோமோ எரக்டஸ்  → ஹோமோ சேப்பியன்ஸ் → ராமாபித்திகஸ்  → ஹோமோ ஹாபிலிஸ்.

  29. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  30. உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.

  31. ஈரப்பதம் என்றால் என்ன?அதன் வகைகளை பற்றி எழுதுக.

  32. வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்குவது ஏன் அவசியம்?

  33. ட்ரைக்கோடெர்மா (பூஞ்சை) அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கிறது. ஏன்? அமன்சாலிசம் என்றால் என்ன?

  34. அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

  35. ஓசோன் அடுக்கை நம்மால் பார்க்க முடியுமா?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.

    2. இந்தியாவில் உயிரிய பல்வகைத்த தன்மையின் பரிணாமத்தை விவரி.

    1. நீர் மாசுபாட்டினால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை?

    2. இருவிதையிலை மற்றும் ஒருவிதையிலை விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக.

    1. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளிக்கொணர்க.

    2. இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிக்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.

    1. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

    2. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
      நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

    1. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

    2. நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment