முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    பகுதி I

    30 x 1 = 30
  1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1825

    (b)

    1835

    (c)

    1845

    (d)

    1855

  2. “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    M.K. காந்தி

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  3. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  4. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு; காரணம் சரி

  5. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  6. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

    (a)

    திலகர்

    (b)

    கோகலே

    (c)

    W.C. பானர்ஜி

    (d)

    M.G. ரானடே

  7. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

    (a)

    பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்

    (b)

    தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்

    (c)

    சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்

    (d)

    சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்

  8. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

    (a)

    இராஜாஜி

    (b)

    சித்தரஞ்சன் தாஸ்

    (c)

    மோதிலால் நேரு

    (d)

    சத்யமூர்த்தி

  9. முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

    (a)

    மதராஸ் – அரக்கோணம்

    (b)

    பம்பாய் - பூனா 

    (c)

    பம்பாய் - தானே 

    (d)

    கொல்கத்தா - ஹீக்ளி 

  10. இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்________.

    (a)

    இராஜாஜி

    (b)

    ராம்சே மெக்டொனால்டு

    (c)

    முகமது இக்பால்

    (d)

    சர் வாசிர் ஹசன்

  11. தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

    (a)

    மார்ச் 23, 1940

    (b)

    ஆகஸ்ட் 8, 1940

    (c)

    அக்டோபர் 17, 1940

    (d)

    ஆகஸ்ட் 9, 1942

  12. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

    (a)

    உஷா மேத்தா

    (b)

    பிரீத்தி வதேதார்

    (c)

    ஆசப் அலி

    (d)

    கேப்டன் லட்சுமி

  13. 1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மௌலானா அபுல்கலாம் ஆசாம்.

    (c)

    ராஜேந்திர பிரசாத்

    (d)

    வல்லபாய் படேல் 

  14. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
    (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
    (ii) நேருவின் தலைமையிலான இடைக்காலஅரசாங்கம்
    (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    ii,i,iii 

    (b)

    i,ii,iii 

    (c)

    iii,ii,i 

    (d)

    ii,iii,i 

  15. பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

    (a)

    அமேதி

    (b)

    பம்பாய்

    (c)

    நாக்பூர் 

    (d)

    மகவ் 

  16. இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

    (a)

    1951

    (b)

    1952

    (c)

    1976

    (d)

    1978

  17. தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

    (a)

    1951

    (b)

    1961

    (c)

    1971

    (d)

    1972

  18. பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?

    (a)

    பகுத்தறிவுவாதம்

    (b)

    ஐயுறவுவாதம்

    (c)

    அரசில்லா நிலை

    (d)

    தனித்துவம் 

  19. மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?

    (a)

    சாண்டா மரியா    

    (b)

    பிண்ட்டா

    (c)

    நினா    

    (d)

    விட்டோரியா

  20. கூற்று: 1770 இல்  இங்கிலாந்து  தேயிலையைத்  தவிர ஏனைய  பொருட்களின்  மீதான  வரிகளை  ரத்து  செய்தது.
    காரணம்:  காலனி  நாடுகளின்  மீது  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும்  உரிமை  ஆங்கிலேய  பாராளுமன்றத்திற்கு  உண்டு  என்பதை  உறுதிப்படுத்தவே  தேயிலையின்  மீதான  வரி  தக்கவைத்துக்  கொள்ளப்பட்டது.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி, காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி, ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை.

    (c)

    கூற்று  சரி, காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு, காரணம் சரி.

  21. கூற்று: வளர்ந்து  கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
    காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென  அவர்கள்  விரும்பினர்.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி.காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு. காரணம் சரி.

  22. ______  நகரம்  'காட்டன்பொலிஸ்'எனும்  புனைப்  பெயரைப்  பெற்றது.

    (a)

    மான்செஸ்டர்

    (b)

    லங்காசயர்

    (c)

    லிவர்பூல் 

    (d)

    கிளாஸ்கோ

  23. இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு ________. 

    (a)

    1815

    (b)

    1822

    (c)

    1824

    (d)

    1827

  24. கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
    காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  25. 'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.

    (a)

    ஜான் A. ஹாப்சன் 

    (b)

    கார்ல் மார்க்ஸ்

    (c)

    ஃபிஷர்

    (d)

    கௌர்னே

  26. கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை
    காரணம்: நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  27. கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
    காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.

    (a)

    கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி 

  28. மஞ்சு வம்சத்தின் காலம் ______ ஆண்டு வரை நீடித்தது.

    (a)

    1908

    (b)

    1911

    (c)

    1912

    (d)

    1916

  29. “மூன்றாம் உலகம்” எனும் பதத்தை உருவாக்கியவர் _______  ஆவார்.

    (a)

    ஆல்பிரட் சாவே

    (b)

    மார்ஷல்

    (c)

    மோலோடோவ் 

    (d)

    ஹாரி ட்ரூமன்

  30. சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.

    (a)

    நவம்பர் 17, 1991

    (b)

    டிசம்பர் 8, 1991

    (c)

    மே 1, 1991

    (d)

    அக்டோபர் 17, 1991

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு முக்கிய 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment