பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 32

    பகுதி I

    32 x 1 = 32
  1. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  2. கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
    காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

  3. கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
    காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  4. கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
    காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

    (a)

    கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

  5. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

    (a)

    பி.பி.வாடியா

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    லாலா லஜபதிராய்

    (d)

    சி.ஆர்.தாஸ்

  6. ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
    (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
    (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
    (3) செளரி செளரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
    (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

    (a)

    2, 1, 4, 3

    (b)

    1, 3, 2, 4

    (c)

    2, 4, 1, 3

    (d)

    3, 2, 4, 1

  7. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
    காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

    (a)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  8. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

    (a)

    புலின் தாஸ் 

    (b)

    சச்சின் சன்யால்

    (c)

    ஜதீந்திரநாத்  தாஸ்

    (d)

    பிரித்தி வதேதார்

  9. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

    (a)

    எம்.என். ராய்

    (b)

    பகத் சிங்

    (c)

    எஸ்.ஏ. டாங்கே 

    (d)

    ராம் பிரசாத் பிஸ்மில்

  10. சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
    கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என நம்பினர்.
    கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
    கூற்று III : ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.

    (a)

    I மற்றும் II

    (b)

    I மற்றும் III

    (c)

    II மற்றும் III

    (d)

    அனைத்தும்

  11. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
    காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

    (a)

    கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று மற்றும் காரணம் தவறு

    (d)

    கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

  12. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

    (a)

    1938

    (b)

    1939

    (c)

    1940

    (d)

    1942

  13. இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

    (a)

    செங்கோட்டை, புதுடெல்லி

    (b)

    பினாங்

    (c)

    வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா

    (d)

    சிங்கப்பூர்

  14. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
    (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
    (ii) நேருவின் தலைமையிலான இடைக்காலஅரசாங்கம்
    (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    ii,i,iii 

    (b)

    i,ii,iii 

    (c)

    iii,ii,i 

    (d)

    ii,iii,i 

  15. கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாண்பாடுகளையும் கொண்டிருந்தது.
    காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு காரணம் சரி.

  16. நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

    (a)

    1961

    (b)

    1972

    (c)

    1976

    (d)

    1978

  17. கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?

    (a)

    மறுமலர்ச்சி

    (b)

    சமயச் சீர்திருத்தம்

    (c)

    புவியியல் கண்டுபிடிப்பு

    (d)

    வர்த்தகப் புரட்சி

  18. கூற்று: கலிலியோ கலிலி தேவாலய விரோத போக்குக்காக கிறித்தவ திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
    காரணம்: சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  19. இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட  ஆண்டு எது?

    (a)

    1519

    (b)

    1532

    (c)

    1533

    (d)

    1534

  20. கூற்று:  ஜார்ஜியா தவிர ஏனைய காலனிகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பொறுத்து  கொள்ளமுடியாதச்  சட்டங்கள்  நீக்கப்பட வேண்டுமெனக்கோரினர்.
    காரணம்: அதுவரையிலும் ஆங்கிலப் பொருட்களைப் புறக்கணிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி, காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு, காரணம் சரி.

  21. பாஸ்டில் சிறை தகர்ப்பு  _____  இல்  நடந்தது. 

    (a)

    1798, ஜூன் 5

    (b)

    1789, ஜூலை 14

    (c)

    1789, நவம்பர் 11

    (d)

    1789, மே 1

  22. நெப்போலியன் முதன்முறை நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட இடம் _______ ஆகும்.

    (a)

    எல்பா    

    (b)

    செயின்ட் ஹெலனா

    (c)

    கார்சிகா 

    (d)

    வாட்டர்லூ

  23. மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ என்ற நூலை _______  ஆண்டில் வெளியிட்டனர் .

    (a)

    1842

    (b)

    1848

    (c)

    1867

    (d)

    1871

  24. “இரு உலகங்களின் நாயகன்” என  கொண்டாடப்பட்டவர் ________  ஆவார். 

    (a)

    சார்லஸ் ஆல்பிரட்

    (b)

    பிஸ்மார்க்

    (c)

    மூன்றாம் நெப்போலியன்

    (d)

    கரிபால்டி

  25. 'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.

    (a)

    ஜான் A. ஹாப்சன் 

    (b)

    கார்ல் மார்க்ஸ்

    (c)

    ஃபிஷர்

    (d)

    கௌர்னே

  26. கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.

    (a)

    விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர் 

    (b)

    இரத்த ஞாயிறு -  இரண்டாம் நிக்கோலஸ் 

    (c)

    ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம்  நிக்கோலஸ் 

    (d)

    பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை -  மூன்றாம்  அலெக்ஸாண்டர்

  27. கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
    காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி  காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி ஆனால் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி  காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு காரணம் சரி  

  28. அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆக்ஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் _______ ஆவார்.

    (a)

    மெக்ஆர்தர்

    (b)

    ஜசன்ஹோவர் 

    (c)

    ஜெனரல் டி  கால் 

    (d)

    ஜார்ஜ் மார்ஷல்

  29. பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது ______.

    (a)

    பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக

    (b)

    பிரான்சுக்கென தனி செல்வாக்கின் கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக

    (c)

    சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும் பொருட்டு

    (d)

    ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக

  30. 'பனிப் போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர் ________.

    (a)

    பெர்னாட் பரூச்

    (b)

    ஜார்ஜ் ஆர்வெல்

    (c)

    ஜார்ஜ் கென்னன்

    (d)

    சர்ச்சில்

  31. “மூன்றாம் உலகம்” எனும் பதத்தை உருவாக்கியவர் _______  ஆவார்.

    (a)

    ஆல்பிரட் சாவே

    (b)

    மார்ஷல்

    (c)

    மோலோடோவ் 

    (d)

    ஹாரி ட்ரூமன்

  32. கிளாஸ்நாஸ்ட் குறிப்பது _______.

    (a)

    ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை

    (b)

    சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப்படுத்தப்படுவதை

    (c)

    சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை

    (d)

    பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு பயிற்சி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard History Practise 1 Mark Book back Questions (New Syllabus) 2020

Write your Comment