மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 46

    பகுதி I

    23 x 2 = 46
  1. பின்வரும் அணிகளின்  தரம் காண்க.
    \(\left( \begin{matrix} 1 & 4 \\ 2 & 8 \end{matrix} \right) \)

  2. மதிப்பிடுக: \(\int { \frac { { 3x }^{ 2 }+2x+1 }{ x }} \) dx

  3. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { { x }^{ 3 } }{ x+2 } \)dx

  4. பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
    \(\frac { 1 }{ 2{ x }^{ 2 }-9 } \)

  5. பின்வருவனவற்றை இரண்டாம் அடிப்படைத் தேற்றத்தை பயன்படுத்தி மதிப்பிடுக.
    \(\int _{ 0 }^{ 1 }{ { e }^{ 2x } } dx\)

  6. பின்வருவனவற்றை மதிப்பிடுக.
    \(\int _{ 0 }^{ \infty }{ e^{ -mx }{ x }^{ 6 } } \)

  7. ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய்ச் சார்பு MR=20e-x/10\(\left( 1-\frac { x }{ 10 } \right) \) எனில், அதன் தேவைச் சார்பைக் காண்க.

  8. தீர்க்க:
     \(\frac { dy }{ xx }\)=ysin2x

  9. கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
    \(\frac { { d }^{ 2 }y }{ dx^{ 2 } } \)+16y=0

  10. பின்வருவனவற்றிற்கு வகைக்கெழு சமன்பாடுகளைக் காண்க.
    x2+y2=a2

  11. x = 1,2,3,4,5 எனில் y = f(x) = x3+2x+1 என்ற சார்புக்கு முன்நோக்கு வேறுபாட்டின் அட்டவணையை வடிவமைக்கவும்.

  12. சில குடும்ப ங்களில் உள்ள மகிழுந்துகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மகிழ்ந்துகளின் எண்ணிக்கை  0 1 2 3 4
    குடும்பங்களின் எண்ணிக்கை  30 320 380 190 80

    இவ் விவரங்களைக் கொண்டு நிகழ்தகவு நிறை சார்பை மதிப்பிடுக, மேலும் p(xi) ஒரு நிகழ்தகவு நிறை சார்பு என்பதையும் சரிபார்க்க.

  13. தனித்த மற்றும் தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறிகளை வேறுபடுத்தவும்.

  14. நிரூபிக்கவும்: V(aX)=a2V(X) 

  15. 520 பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், 390 தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பாய்சான் வழியினை அனுமானித்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பக்கங்களில் பிழையே இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவு காண்க.

  16. நிறுவனத்தின் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் இயல்நிலை பரவலை பின்பற்றியுள்ளது. இதன் சராசரி $. 50,000 மற்றும் திட்டவிலக்க ம் $. 20,000 எனில்
    (a) $.40,000-க்கும் குறைவாக ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
    (b) $.45,000 மற்றும் $.65,000-க்கும் இடைப்பட்ட நிலையில் ஈட்டுபவர்களின் சதவீதம் என்ன?
    (c) $.70,000/-க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் சதவீதம் என்ன?

  17. ஒரு சேவையகம் வழங்கும் அலைவரிசை ஒரு மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, சராசரியாக நிமிடத்திற்கு 20 பரிவர்த்தனைகள் நடத்தப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. அதன் பரவற்படி 4 எனில் திட்டப்பிழையைக் காண்க.

  18. முறைபடுத்திய கூறெடுப்பின் நிறைகள் இரண்டினைக் கூறுக.

  19. மறுக்கும் பகுதியை - வரையறு.

  20. பருவகால குறியீட்டை வரையறுக்க

  21. வாழ்க்கை குறியீட்டுஎண்ணை பற்றி விளக்குக

  22. புள்ளியியல் தரக் கட்டுப்பாட்டின் பயன்கள் யாவை ?

  23. சமநிலை போக்குவரத்து கணக்கு என்பதன் பொருள் யாது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகக் கணிதம் மாதிரி 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Business Maths Sample 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment