All Chapter 1 Mark

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 88
    Answer The Following Question:
    88 x 1 = 88
  1. கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை
    காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.

  2. கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
    காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப் பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை.

  3. பகுதி I  பகுதி II 
    அ. பிளாஸ்மோடியம்  ii. ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஆ. அமீபா  ii. ஸ்போரோசோயிட்டுகள் 
    இ. பிளாஸ்மோடியம்  iii. போலிக்காலிஸ்பேர்கள் 
    ஈ. எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள்  iv. மீரோசோயிட்டுகள் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii 

    (b)

    அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i

    (c)

    அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii 

    (d)

    அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii

  4. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  5. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  6. குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் ______.

    (a)

    ஈஸ்ட்ரோஜன் 

    (b)

    FSH 

    (c)

    புரோலாக்டின் 

    (d)

    ஆக்ஸிடோசின் 

  7. குழந்தை பிறப்பின்போது, கருப்பையின் எப்பகுதி வலுவான சுருக்கங்களை ஏற்படுத்தும்.

    (a)

    எண்டோமெட்ரியம் 

    (b)

    மையோமெட்ரியம் 

    (c)

    பெரிமெட்ரியம் 

    (d)

    குவிமுகடு 

  8. பொருத்துக 

    1 அம்னியான்  சிறுநீர்ப்பையின் ஒரு பகுதியாகிறது.
    2. கோரியான்  ii  இரத்த செல்களின் மூலாதாரம் 
    3. கரு உணவுப்பை  iii  தாய்சேய் இணைப்புத்திசு 
    4. ஆலன்டாயில்  iv  கரு வெப்பநிலை பராமரிப்பு 
    (a)

    I-iv, II-iii,III-ii,IV-i

    (b)

    I-i,II-ii,III-iii,IV-iv

    (c)

    I-ii,II-iii,III-iv,IV-i

    (d)

    I-iii,II-iv,III-i,IV-ii

  9. கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை

    (a)

    ஹார்மோன் வழி கருத்தடைகள் - விந்து செல்கள் உள் நுழைவதை தடைசெய்யும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலைத் தடைசெய்யும்

    (b)

    விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தை தடைசெய்யும் 

    (c)

    தடுப்பு முறைகள் - கருவுறுதலைத் தடைசெய்யும் 

    (d)

    உள் கருப்பை சாதனங்கள் - விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்.

  10. வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.

      வரிசை I   வரிசைII
    தாமிரம் வெளிவிடு IUD i. LNG - 20
    ஹார்மோன் வெளிவிடு IUD ii. லிப்பள் வளைய IUD
    C. மருந்தில்லா IUD iii  சாஹெலி
    மாத்திரைகள் iv  Multiload - 375
    (a)

    A (iv), B (ii), C (i), D (iii)

    (b)

    A (iv), B (i), C (iii), D (ii)

    (c)

    A (i), B (iv), C (ii), D (iii)

    (d)

    A (iv), B (i), C (ii), D (iii)

  11. பாலூட்டுவதால் இயல்பான அண்ட செல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க ______ மாதமாகும்.

    (a)

    4

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  12. கல்லீரல் செயலிழப்பை உண்டாக்குவது 

    (a)

    AIDS 

    (b)

    ஹிபாடிடிஸ் B 

    (c)

    கிளாமிடியாசிஸ் 

    (d)

    வெட்டை நோய் 

  13. மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விருப்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலம்.

    (a)

    நேர்மறை இனமேம்பாட்டியல்

    (b)

    எதிர்மறை இனமேம்பாட்டியல்

    (c)

    நேர்மறை சூழ்நிலை மேம்பாட்டியல்

    (d)

    நேர்மறை புறத்தோற்ற மேம்பாட்டியல்

  14. ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.

    (a)

    மீன்கள்

    (b)

    ஊர்வன

    (c)

    பறவைகள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  15. ஹீமாபிலியா ஜீன்களுக்கு தாங்கிகளாக விளங்குகின்ற பெண்கள் _________ %

    (a)

    100

    (b)

    50

    (c)

    70

    (d)

    25

  16. XO பெண்களின் அறிகுறி 

    (a)

    குறைவான மார்பக வளர்ச்சி 

    (b)

    சவ்வுகளுடைய கழுத்து 

    (c)

    பிளவுற்ற உதடு 

    (d)

    கண்களுக்கிடையேயான இடைவெளி 

  17. ஒரு ஓபரான் என்பது ______.

    (a)

    மரபணு வெளிப்பாட்டை தடைசெய்யும் புரதம்

    (b)

    மரபணு வெளிப்பாட்டைத் தூண்டும் புரதம்

    (c)

    தொடர்புடைய செயல்களை உடைய அமைப்பு மரபணுக்களின் தொகுப்பு

    (d)

    பிற மரபணுக்களின் வெளிப்பாட்டைத் தூண்டும் அல்லது தடைசெய்யும் மரபணு

  18. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

    (a)

    லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் 

    (b)

    அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

    (c)

    அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

    (d)

    ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

  19. DNA வில் 5' என்பது குறிப்பது 

    (a)

    சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் (OH) ஹைட்ராக்சைல் தொகுப்பு இணைந்துள்ளது.

    (b)

    சர்க்கரையிலுள்ள ஒரு கார்பன் அணுவுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

    (c)

    நைட்ரஜனுடன் பாஸ்பேட் தொகுப்பு இணைந்துள்ளது.

    (d)

    பாஸ்பரஸூடன் நைட்ரஜன் தொகுப்பு இணைந்துள்ளது.

  20. DNA மற்றும் ஹிஸ்டோனின் மின் ஆற்றல் 

    (a)

    இரண்டு நேர்மின்னாற்றல் 

    (b)

    இரண்டும் எதிர்மின்னாற்றல் 

    (c)

    எதிர் மற்றும் நேர்மின்னாற்றல் 

    (d)

    பூஜ்யம் 

  21. 'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் ______.

    (a)

    சார்லஸ் டார்வின்

    (b)

    லாமார்க்

    (c)

    வீஸ்மான்

    (d)

    ஹியூகோ டி விரிஸ்

  22. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    மூதாதைத் தன்மை

    (b)

    ஆன்ட்டோஜெனி

    (c)

    பைலோஜெனி (இன வரலாறு)

    (d)

    தொல்லுயிரியல்

  23. ஆப்ரிக்க புல்வெளிகளில் வாழ்ந்த மனிதன் 

    (a)

    ராமாபித்திகஸ் 

    (b)

    சிவாபித்திகஸ் 

    (c)

    அஸ்ட்ரோபித்திகஸ் 

    (d)

    டிரையோபித்திகஸ் 

  24. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த விலங்குகளின் உணவுப்பழக்கத்தை அறிய உதவுவது ________ 

    (a)

    அச்சுக்குள் 

    (b)

    வார்ப்புகள் 

    (c)

    கேப்ரோலைட்டுகள் 

    (d)

    கல்லாக்கப்பட்ட படிவங்கள் 

  25. _______ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

    (a)

    அபின்

    (b)

    மது

    (c)

    புகையிலை

    (d)

    கோகெய்ன்

  26. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.

    (a)

    நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

    (b)

    மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்

    (c)

    நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்

    (d)

    பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்

  27. பகுதி I  பகுதி II 
    1. நிமோனியா  அ  தாடை தசைகள் விறைத்தல் 
    2. டெட்டனஸ்  ஆ  குடல் 
    3. டைஃபாய்டு  இ  நிணநீர் முடிச்சுகள் 
    4. புபோனிக் பிளேக்  ஈ  நுரையீரல் 
    (a)

    1-ஈ,2-அ,3-ஆ,4-இ 

    (b)

    1-அ,2-இ,3-ஈ,3-ஆ 

    (c)

    1-இ,2-ஆ,3-அ,4-ஈ 

    (d)

    1-அ,2-இ,3-ஆ,4-ஈ 

  28. பகுதி I  பகுதி II 
    1. சுவாச நோய்கள்  அ  மைய நரம்பு மண்டலம் 
    2. தோல் நோய்கள்  இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் 
    3. உள்ளுறுப்பு நோய்கள்  இ  சுவாசப் பாதை 
    4. நரம்பு நோய்கள்  ஈ  தோல் மற்றும் தோலின் கீழ் அடுக்கு 
    (a)

    1-இ,2-ஈ,3-ஆ,4-அ 

    (b)

    1-ஈ,2-இ,3-அ,4-ஆ 

    (c)

    1-அ,2-ஆ,3-இ,4-ஈ 

    (d)

    1-ஆ,2-அ,3-ஈ,4-இ 

  29. இன்ட ர்பெரான்களை பற்றிய உண்மையான கருத்து எது?

    (a)

    செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ் எதிர்பொருள்

    (b)

    வைரஸ் செல்களின் இரட்டிப்பாதலை தடுக்கின்றது

    (c)

    இது ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கானது.

    (d)

    இது தொ ற்றுகளை ஏற்படுத்தும்

  30. எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?

    (a)

    நினைவாற்றல் செல்கள்

    (b)

    பேசா பில்கள்

    (c)

    பிளாஸ்மா செல்கள்

    (d)

    கொல்லி செல்கள்

  31. கீழ்கண்டவற்றுள் எது நைட்ரஜன் நிலைப்படுத்துதலில் பங்கேற்பதில்லை?

    (a)

    சூடோமோனாஸ்

    (b)

    அசோட்டோபாக்டர் 

    (c)

    அனபீனா

    (d)

    நாஸ்டாக்

  32. கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடாத நிகழ்வினை தேர்ந்தெடு.

    (a)

    ஆல்கஹாலிக் நொதித்தல் 

    (b)

    லாக்டேட் நொதித்தல் 

    (c)

    விலங்குகளில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

    (d)

    தாவரங்களில் நடைபெறும் காற்றுச் சுவாசம்

  33. திராட்சை ரசம் பல்வேறு வகை சக்காரோமைசஸ் செரிவிசியே மூலம் நொதிக்கப்பட்டு மாற்றப்படுவது

    (a)

    ஆல்கஹால்

    (b)

    கள்

    (c)

    வினிகர்

    (d)

    எத்தனால்

  34. குளோரினுக்கு எதிர்ப்பு திறன் பெற்றுள்ள நுண்ணுயிரிகள்

    (a)

    டீகுளோரோமோனாஸ் அரோமேட்டிக்கா

    (b)

    பெனிரோகேட் கிரைசோபோரியம் 

    (c)

    பைட்டோபித்தோரா பால்மிவோரா

    (d)

    கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் ஜியார்டியா

  35. பாலிமெரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை _______.

    (a)

    இயல்பு திரிபு, இணைப்பு இழைப்பதப்படுத்துதல், உற்பத்தி

    (b)

    உற்பத்தி, இணைப்பு, இயல்புதிரிபு

    (c)

    இணைப்பு, உற்பத்தி, இயல்புதிரிபு

    (d)

    செயலிழப்பு, இயல்புதிரிபு இணைப்பு

  36. கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.

    (a)

    உள் நுழைத்த டி.என்.ஏ வை பெற்றுக்கொள்ளும் செல்லில் ஒட்டுவதற்கு உதவுகின்றது.

    (b)

    இது தேர்வு செய்யும் குறியாளராகச் செயல்படுகின்றது.

    (c)

    இது வைரஸில் இருந்து பிரிக்கப்படுகின்றது

    (d)

    உயர் வெப்ப நிலையிலும் செயல்படுகின்றது.

  37. பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

    (a)

    விலங்கு நகலாக்கம் 

    (b)

    PCR 

    (c)

    எலைசா 

    (d)

    டி.என்.ஏ மறுசேர்க்கை 

  38. கருநிலை தண்டு செல்கள் கருக்கோளத்தின் எப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

    (a)

    நடுப்பகுதி திசு 

    (b)

    மேற்பகுதி திசு 

    (c)

    உள்பகுதி திசு 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  39. வெப்பநிலையில் ஏற்படும் மறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் ______ என அழைக்கப்படும்.

    (a)

    எக்டோதெர்ம்கள் 

    (b)

    மிகைவெப்ப வேறுபாட்டு உயிரிகள்

    (c)

    எண்டோதெர்ம்கள்

    (d)

    ஸ்டீனோதெர்ம்கள்

  40. நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    ஸ்டீனோதெர்மல்

    (b)

    யூரிதெர்மல்

    (c)

    கட்டாட்ராமஸ்

    (d)

    அனாட்ராமஸ்

  41. பகுதி 1 பகுதி 2
    வாண்ட்ஹாஃப்  விதி   குளிர் பகுதியில் வாழும் உயிரினங்கள் அதிக உடல் எடையை கொண்டுள்ளன.
    ii  ஆலென் விதி  குறைவான வெப்பநிலையில் வாழும் உயிரினகள் அதிக முதுகெலும்புகளைக் கொண்டுள்ளன.
    iii  பெர்க்மானின் விதி  ஒவ்வொரு 10C வெப்பநிலை உயர்வுக்கும் வளர்சிதை மாற்ற வீதம் இரட்டிப்பாகிறது.
    iv  ஜோர்டானின் விதி  குளிரான பகுதிகளில் வாழும் மாறா உடல் வெப்பம் கொண்ட விலங்குகளின் கால்கள் மற்றும் காதுகள் சிறியதாக காணப்படுகின்றன.
    (a)

    i-d,ii-b,iii-a,iv-c

    (b)

    i-a,ii-c,iii-b,iv-d

    (c)

    i-c,ii-d,iii-a,iv-b

    (d)

    i-b,ii-a,iii-c,iv-d

  42. தார் பாலைவனத்தின் முக்கியமான விலங்கினம் எது?

    (a)

    இந்திய முள்வால் பல்லிகள் 

    (b)

    பை சுண்டெலி 

    (c)

    கங்காரு எலி 

    (d)

    மறிமான்கள் 

  43. பின்வருவனவற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?

    (a)

    மேற்கு தொடர்ச்சி மலை

    (b)

    இந்திய - கங்கை சமவெளி

    (c)

    கிழக்கு இமயமலை தொடர்

    (d)

    அ மற்றும் இ

  44. வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறவைகள்

    (c)

    இருவாழ்விகள்

    (d)

    முட்தோலிகள்

  45. ஒரு சிங்கத்தின் தனிப்பட்ட வாழிட பரப்பின் தேவை _________ ச.கி.மீ. ஆகும்.

    (a)

    100

    (b)

    150

    (c)

    200

    (d)

    250

  46. மொத்த நிலப்பரப்பு அல்லது புவியில் உள்ள அனைத்து வாழிடங்களுக் கிடையேயான வேறுபாடுகளை குறிப்பது _________ பல்வகைத் தன்மையாகும்.

    (a)

    பீட்டா

    (b)

    ஆல்பா

    (c)

    காமா

    (d)

    மரபியல்

  47. 1992இல் நடந்த ரியோ உச்சி மாநாட்டின் "செயல்திட்டம் 21" எதனுடன் தொடர்புடையது?

    (a)

    நிலையான வளர்ச்சி

    (b)

    மக்கள்தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எதிர்த்துப் போராடுவது

    (c)

    பசுமை இல்லா வாயுக்களின் வெளிப்பாட்டை குறைக்கும் விதிமுறைகள்

    (d)

    சுத்தமான ஆற்றலுக்காக, வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை பரிமாற்றுதல்.

  48. குடிநீரில் அதிக அளவு புளுரைடு  ______ ஐ ஏற்படுத்துகிறது.

    (a)

    நுரையீரல் நோய்

    (b)

    குடல் தொற்றுகள்

    (c)

    புளுரோஸிஸ்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  49. அசாதாரணமான இதய துடிப்பு ________ 

    (a)

    எம்பைசிமா 

    (b)

    அரித்மியா 

    (c)

    அன்ஜைனா

    (d)

    இரத்தக்குழலடைப்பு 

  50. CPCB ன் கணிப்பின்படி மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை _________ 

    (a)

    351

    (b)

    302

    (c)

    310

    (d)

    312

  51. ஊடு கடத்தும் திசு காணப்படுவது ______.

    (a)

    சூலின் சூல்துளைப் பகுதி

    (b)

    மகரந்தச்சுவர்

    (c)

    சூலகத்தின் சூலகத்தண்டு பகுதி

    (d)

    சூலுறை

  52. விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?

    (a)

    விதை உள்ளுறை

    (b)

    முளைவேர்

    (c)

    விதையிலை மேல்தண்டு

    (d)

    விதைத்தழும்பு

  53. ஸ்டீவார்டு நவீன முறையில் ________ தாவரத்தை புளோயம் பாரங்கைமா செல்களில் இருந்து உருவாக்கினார்.

    (a)

    பீட்ருட் 

    (b)

    காரட் 

    (c)

    சொலானம் 

    (d)

    முள்ளங்கி 

  54. மாலஸில் _______ போத்துகள் உள்ளன.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு 

    (c)

    இலை 

    (d)

    மலர் 

  55. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது

    (a)

    aaBB

    (b)

    AaBB

    (c)

    AABB

    (d)

    aabb

  56. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

    (a)

    இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

    (b)

    F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

    (c)

    F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

    (d)

    இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

  57. மனிதனின் உயரம் மற்றும் தோலின் நிறம் எதனை மரபணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது?

    (a)

    இரண்டு ஜோடி மரபணுக்கள்

    (b)

    மூன்று ஜோடி மரபணுக்கள்

    (c)

    ஐந்து ஜோடி மரபணுக்கள்

    (d)

    ஒரு ஜோடி மரபணுக்கள்

  58. F1 சந்ததியை ஏதேனும் ஒரு பெற்றோருடன் செய்யும் கலப்பு _____ எனப்படும்

    (a)

    சோதனைக் கலப்பு

    (b)

    பிற் கலப்பு

    (c)

    F1 கலப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  59. பட்டியல் I பட்டியல் II
    அ) இரு மடியத்துடன் ஒரு
    இணை குரோமோசோம்கள்
    அதிகமாகக் காணப்படுவது
    i) மோனோசோமி
    ஆ) இருமடியத்துடன் ஒரு
    குரோமோசோம் அதிகமாகக்
    காணப்படுவது
    ii) டெட்ராசோமி
    இ) இருமடியத்தில் ஒரு
    குரோமோசோம்
    குறைவாகக் காணப்படுதல்
    iii) ட்ரைசோமி
    ஈ) இருமடியத்திலிருந்து
    இரண்டு தனித்தனி
    குரோமோசோம் குறைவாகக்
    காணப்படுதல்
    iv) இரட்டை மானோசோமி
    (a)

    அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv

    (b)

    அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i

    (c)

    அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv

    (d)

    அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv

  60. ஒரு செல்லில் ஒருமடிய குரோமோசோமின்  எண்ணிக்கை 18 எனில், இரட்டை மானோசோமி  மற்றும் ட்ரைசோமி நிலையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை ____.

    (a)

    34 மற்றும் 37

    (b)

    34 மற்றும் 35

    (c)

    37 மற்றும் 35

    (d)

    17 மற்றும் 19

  61. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது ______.

    (a)

    மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.

    (b)

    மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.

    (c)

    நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல் 

    (d)

    ஆ மற்றும் இ 

  62. மரபணுப் பொறியியல் ______.

    (a)

    செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.

    (b)

    ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல் 

    (c)

    நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி 

    (d)

    ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல் 

  63. பயோ டெக்னலாஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர் 

    (a)

    வெய்ஸ்னர் 

    (b)

    கார்ல் பிரான்டில் 

    (c)

    சாங்கர் 

    (d)

    கார்ல் எரிக்கி 

  64. பின்வருவனவற்றுள் எது உயிர் தொழில் நுட்ப முறையினால் உருவாக்கும் பொருட்கள் 

    (a)

    உயிரி எதிர்ப்பொருள் 

    (b)

    தடுப்பூசி மருந்து 

    (c)

    நொதிகள் 

    (d)

    இவையனைத்தும் 

  65. கீழ்கண்டவற்றைப் பொருத்துக 

    பகுதி - அ பகுதி - ஆ
    1) முழுஆக்குத்திறன் A) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறுதல்
    2) வேறுபாடிழத்தல்  B) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
    3) பிரிகூறு  C) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
    4) வேறுபாடுறுதல் D) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்
    (a)
    1 2 3 4
    C A D B
    (b)
    1 2 3 4
    A C B D
    (c)
    1 2 3 4
    B A D C
    (d)
    1 2 3 4
    D B C A
  66. உறைகுளிர்பாதுகாப்பு என்பது தாவர செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதுகாக்கும் செயல்முறைகளுக்கு ____.

    (a)

    ஈதரைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தவது 

    (b)

    திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக உயர் வெப்பநிலைக்கு உட்படுத்துவது 

    (c)

    திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலையான -196oC க்கு உட்படுத்துவது.

    (d)

    திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்துவது

  67. மாசெரோஸைம் என்னும் நொதி 

    (a)

    இலைத் திசுக்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யும்  

    (b)

    செல்சுவரைத் கரைத்து புரோட்டோபிளாஸ்ட்டுகளை வெளியேற்றும் 

    (c)

    உட்கருவைக் கரைக்கும்

    (d)

    நடுவாமெல்லவைக் கரைக்கும் 

  68. ஓடுகின்ற குழாய் நீரைக் கொண்டு எதனை நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம்?

    (a)

    வளர்ப்பு அறை 

    (b)

    வளர் ஊடகம் 

    (c)

    பிரிகூறு 

    (d)

    கருவிகள் 

  69. ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
    i. குழும சூழ்நிலையியல் 
    ii. சுயச் சூழ்நிலையியல் 
    iii. சிற்றினச் சூழ்நிலையியல் 
    iv. கூட்டு சூழ்நிலையியல் 

    (a)

    i மட்டும் 

    (b)

    ii மட்டும் 

    (c)

    i மற்றும் iv மட்டும் 

    (d)

    ii மற்றும் iii மட்டும் 

  70. நிரல் I-ல் மண்ணின் அளவும், நிரல் II-ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றில் நிரல் I மற்றும் நிரல் II-ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.

    நிரல் I நிரல் II
    I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை i) வண்டல் மண்
    II) 0.002 மி.மீ க்கு குறைவாக ii) களிமண்
    III) 0.002 முதல் 0.02 மி.மீ வரை  iii) மணல் 
    IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை iv) பசலை மண் 
    (a)
    I II III IV
    ii iii iv i
    (b)
    I II III IV
    iv i iii ii
    (c)
    I II III IV
    iii ii i iv
    (d)

    எதுவுமில்லை 

  71. பின்வரும் படத்தில் குத்துயர தாவரக் கூட்டங்களில் குறிப்பிடப்படாத தாவரக்கூட்டத்தின் பெயரைக் கண்டுபிடி.

    (a)

    பிரையோபைட்டுகள் 

    (b)

    ஜின்மோஸ்பெர்ம்கள் (அ) ஊசியிலைக்காடுகள் 

    (c)

    வெப்பமண்டல மழைக்காடுகள்

    (d)

    வெப்பமண்டலக் காடுகள் 

  72. வேர்மூடிகளுக்கு பதிலாக வேர் பைகள் அமைந்திருந்தலுக்கு எடுத்துக்காட்டு _____________

    (a)

    ஆகாயத்தாமரை 

    (b)

    நிலம்போ 

    (c)

    போட்டமோகீட்டான் 

    (d)

    செரட்டோஃபில்லம் 

  73. குளச் சூழல்மண்டலம்  ஒரு _______.

    (a)

    தன்னிறைவில்லா மற்றும் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் தகுதி பெற்றது 

    (b)

    பகுதி தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் 

    (c)

    தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் தகுதி பெற்றதல்ல.

    (d)

    தன்னிறைவு மற்றும் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் தகுதி பெற்றவை 

  74. கீழ்கண்ட எந்த சூழல் மண்டலம் அதிகப்படியான முதல்நிலை உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது?

    (a)

    குளச் சூழல்மண்டலம் 

    (b)

    ஏரி சூழல்மண்டலம் 

    (c)

    புல்வெளி சூழல்மண்டலம் 

    (d)

    வனச் சூழல்மண்டலம் 

  75. குளிர் மண்டலக் கலப்புக்காடு, வெப்பமண்டல மழைக்காடுகள், வெப்பமண்டல இலையுதிர்க்காடுகள் முதலியன 

    (a)

    உச்ச நிலை குழுமம் 

    (b)

    மூன்றாம்  நிலை குழுமம் 

    (c)

    முதல்  நிலை குழுமம் 

    (d)

    இரண்டாம்  நிலை குழுமம் 

  76. பின்வருவனவற்றுள் எது பாஸ்பரஸை கொண்டிருப்பதில்லை.

    (a)

    பாஸ்போலிப்பிடுகள் 

    (b)

    DNA, RNA 

    (c)

    ATP, NADP

    (d)

    சுவாசம் 

  77. பசுமை இல்ல விளைவினை அதிக அளவில் குறைப்பது கீழ்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக.

    (a)

    வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்

    (b)

    அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பாலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது

    (c)

    மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்

    (d)

    பொது போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துல் ஊக்குவித்தல்

  78. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை
    கூற்று I – தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது.
    கூற்று II – இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.

    (a)

    கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது

    (b)

    கூற்று I மற்றும் II - இரண்டு கூறுகளும் சரியானது

    (c)

    கூற்று I தவறானது மற்றும் கூற்று II சரியானது

    (d)

    கூற்று I மற்றும் II – இரு கூறுகளும் தவறானது

  79. சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு உபாயம் _______ 

    (a)

    உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீடு 

    (b)

    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 

    (c)

    உயிரி கண்காணிப்பு 

    (d)

    GIS 

  80. வேகமாக வளரக்கூடிய எளிதில் தகவமைத்துக் கொள்வதாகவும் உள்ள தாவரம்________ 

    (a)

    ஆக்கிரமிப்பு தாவரம் 

    (b)

    இடவரை தாவரம் 

    (c)

    இடைவரையற்ற தாவரம் 

    (d)

    காட்டுத் தாவரம் 

  81. தெரிவு செய்யப்பட்ட உயர்ரக, பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை ______.

    (a)

    இயற்கைத் தேர்வு

    (b)

    கலப்புறுத்தம்

    (c)

    சடுதிமாற்றம்

    (d)

    உயிரி – உரங்கள்

  82. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கரும்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.

    (a)

    சக்காரம் ரோபோஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (b)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (c)

    சக்காரம் சைனென்ஸ் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்

    (d)

    சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபோஸ்டம்

  83. யூரியா பல்வேறு ________ சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன

    (a)

    பாலூட்டிகள்

    (b)

    பறவைகள்

    (c)

    கணுக்காலிகள்

    (d)

    இருவாழ்விகள்

  84. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் _______ என்னும் முறையின் மூலம் மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்

    (a)

    PCR முறை

    (b)

    DOTS முறை

    (c)

    சிஸ்ஜெனிஸிட்

    (d)

    தொற்று தடைக்காப்பு

  85. வேர்கடலையின் பிறப்பிடம் ______.

    (a)

    பிலிப்பைன்ஸ்

    (b)

    இந்தியா

    (c)

    வட அமெரிக்கா

    (d)

    பிரேசில்

  86.  டாமெரிடைஸ் இண்டிகாவின் பிறப்பிடம் ________.

    (a)

    ஆப்பிரிக்க வெப்பமண்டலப் பகுதி

    (b)

    தென்னிந்தியா, ஸ்ரீலங்கா

    (c)

    தென் அமெரிக்கா , கிரீஸ்

    (d)

    இந்தியா மட்டும்

  87. இந்தியாவின் மிகப் பெரிய காபி உற்பத்தி மாநிலம்_________ 

    (a)

    கேரளா 

    (b)

    கர்நாடகா 

    (c)

    தமிழ்நாடு 

    (d)

    ஆந்திரா 

  88. _______ ஓர் உயிரிப் பூச்சி விரட்டி(Bio pest repellent) 

    (a)

    புளி 

    (b)

    மிளகாய் 

    (c)

    எள் 

    (d)

    வேம்பு 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard Biology All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment