மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:50:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. 230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1, அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் P2 எனில் \(\frac { { P }_{ 2 } }{ { P }_{ 1 } } \) எனும் விகிதம்______ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  3. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.

    (a)

    14 A

    (b)

    8 A

    (c)

    10 A

    (d)

    12 A

  4. ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது____ .

    (a)

    இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

    (b)

    இரண்டின் மின்தடையும் குறையும்

    (c)

    தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்

    (d)

    தாமிரத்தின் மின்தடை குறையும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்

  5. ஜுலின் வெப்ப விதியில், R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு ____ .

    (a)

    நேர்க்கோடு

    (b)

    பரவளையம்

    (c)

    வட்டம்

    (d)

    நீள்வட்டம்

  6. 5 x 2 = 10
  7. மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலார் ஏன்?

  8. ஒரு மின்சுற்றில் திறனுக்கான சமன்பாடு P = VI என்பதை வருவி.

  9. மின்னழுத்தமானியின் தத்துவத்தை கூறு.

  10. ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.

  11. சீபெக் விளைவின் பயன்பாடுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. 0.5 mm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட தாமிரக்கம்பியில் 0.2 A அளவுள்ள மின்னோட்டம் பாய்கிறது. அத்தாமிரக்கம்பியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் அடர்த்தி 8.4 x 1028 m-3 எனில் இக்கட்டுறா எலக்ட்ரான்களின் இழுப்புத் திசைவேகத்தை கணக்கிடுக.

  14. ஒரு கம்பியின் மின்தடை 20 Ω. இக்கம்பி தனது ஆரம்ப நீளத்திலிருந்து எட்டு மடங்கு நீளம் அதிகரிக்குமாறு சீராக நீட்டப்பட்டால், கம்பியின் புதிய மின்தடை என்ன?

  15. பின்வரும் மின்சுற்றில் தொகுபயன் மின்தடையைக் காண்க. மேலும் I, I1 மற்றும் I2 ஆகிய மின்னோட்டங்களையும் கண்டுபிடி.

  16. 200C வெப்பநிலையில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3Ω மற் றும் α = 0.004/oC எனில் 100oC வெப்பநிலையில் அதன் மின்தடையைக் காண்க?

  17. மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?

  18. 4 x 5 = 20
  19. 20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும்? (Fused)

  20. 12 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்தொகுப்பு 3 Ω மின்தடையாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின் சுற்றில் பாயும் மின்னோட்டம் 3.93 A எனில்
    (அ) மின்கலத்தொகுப்பின் மின்முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு மற்றும் அகமின்தடை ஆகியவற்றை கணக்கிடுக.
    (ஆ) மின்கலத் தொகுப்பு அளிக்கும் திறனையும், மின்தடையாக்கி பெறும் திறனையும் கணக்கிடுக.

  21. பின்வரும் மின்சுற்றில் I ன் மதிப்பை கண்டுபிடி.

  22. 4 m நீளமுள்ள மின்னழுத்தமானிக் கம்பியின் மின்தடை 20 Ω. இது 2980 Ω மின் தடை மற்றும் 4 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலம் ஆகியவற்றுடன் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது, எனில் கம்பியின் வழியே மின்னழுத்தத்தை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment