Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. பெண் இனச்செல் நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அது நிகழும் ஒரு பறவையின் பெயரையும் குறிப்பிடுக.

  2. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  3. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  4. முதிர்ந்த விந்தணுவின் படம் வரைந்து பாகங்கள் குறி

  5. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  6. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  7. பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி - ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  8. தாவரத்திசு வளர்ப்பின் பயன்பாடுகளை எழுதுக

  9. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?

  10. சாதாரண மனிதனுக்கும் இன்னும் எட்டாக் கனியாகவே இன்டர்ஃபெரான்கள் விளங்குகின்றன. ஏன்? எந்தெந்த நோய்களுக்கான சிகிச்சையில் இவை பெரிதும் உதவுகின்றன?

  11. நடத்தையியல் என்றால் என்ன?

  12. செந்தரவுப் புத்தகம் என்றால் என்ன? அதனுடைய நோக்கத்தைக் குறிப்பிடவும்.

  13. ஒலி மாசுபாட்டின் மூலங்கள் யாவை?

  14. திறந்த மலர் மகரந்தச் சேர்க்கை (Chasmogamy) என்றால் என்ன?

  15. புறத்தோற்ற வகையம் என்றால் என்ன?

  16. ஊடுகடத்தல் மரபியல் வரையறு

  17. குரோமோசோம் கோட்டபாட்டை வரையரைசெய்க 

  18. அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் ஒரு இயற்கை மரபணுப் பொறியாளராக செயல்படுகிறது. இக்கூற்றிற்கு சாதகமான காரணங்கள் தருக.

  19. MS ஊடகத்தில் காணப்படும் சிறு மூலக்கூறுகள் யாவை?

  20. பின்வரும் பாதிஒட்டுண்ணி (அ) பகுதி ஒட்டுண்ணி வகைக்கு எ.கா தருக.
    a) தண்டு வாழ் பகுதி ஒட்டுண்ணி : ___________, ____________
    b) வேர் வாழ் பகுதி ஒட்டுண்ணி : ___________

  21. நிலைத்த உயிரித்தொகுப்பு என்றால் என்ன?

  22. மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் குறிக்கோள்கள் யாவை?

  23. இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  24. தமிழகத்தில் வெண்டைக்காய் விளையுமிடங்கள் கூறு.

  25. நறுமணப் பொருட்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Biology - full Portion Two Marks Question Paper )

Write your Comment