கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. முடிவுறு அல்லது முடிவுறா __________ என்பது அதில் உள்ள முடிவுறு அல்லது முடிவுறா உறுப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தாகும்.

    (a)

    முழுமைத்தொகுதி 

    (b)

    முழுமைக்கணிப்பு

    (c)

    தொகுதிப் பண்பளவை

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை 

  2. ஒரு முழுமைத் தொகுதியின் முடிவுறு உட்கணத்தை  ________ என கூறலாம்

    (a)

    கூறு

    (b)

    முழுமைத்தொகுதி

    (c)

    முழுமை 

    (d)

    முழுமைக் கணிப்பு

  3. கூறுகளிலிருந்து கணக்கிடப்பட்ட எந்தவொரு புள்ளியியல் அளவைகளும் _________ எனப்படும்.

    (a)

    தொகுதிபண்பளவை

    (b)

    கூறு பண்பளவை

    (c)

    முடிவுள்ள அளவை 

    (d)

    எண்ணத்தக்கதற்ற அளவை 

  4. _________ என்பது முழுமைத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு சமமான வாய்ப்பை அளிக்கும் ஒன்றாகும்.

    (a)

    பண்பளவை

    (b)

    சமவாய்ப்பு கூறு

    (c)

    புள்ளியியல் அளவை

    (d)

    முழுமைத் தொகுதி

  5. கீழ்க்காண்பவற்றில் எது நிகழ்தகவு கூறெடுப்பு வகையைச் சார்ந்தது.

    (a)

    நோக்கமுள்ள மாதிரித்தேர்வு

    (b)

    கருத்து கணிப்புமுறை

    (c)

    எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு

    (d)

    ஏதுவான முறை

  6.  _________ யில் ஒரு சீரற்ற முழுமைத் தொகுதியானது சீரான துணை முழுமைத் தொகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

    (a)

    நிகழ்தகவு சாரா கூறெடுப்பு முறை

    (b)

    எளிய சமவாய்ப்பு கூறெடுப்பு முறை

    (c)

    படுகை வாய்ப்பு கூறெடுப்பு முறை

    (d)

    முறைப்படுத்திய கூறெடுப்பு முறை

  7. கூறு அளவையைப் பயன்படுத்தி முழுமைத் தொகுதி பண்பளவைக்கான மிக சிறந்த மதிப்பை பெற முற்படும் முறையே ______.

    (a)

    மதிப்பீட்டு முறை

    (b)

    மதிப்பீட்டு அளவை

    (c)

    பிழற்சியான மதிப்பீடு

    (d)

    திட்டப் பிழை

  8. \(P[|\hat { \theta } -\theta |<\varepsilon ]\rightarrow \infty ,\varepsilon >0,\) எனில் \(\hat { \theta } \) என்பது \(\theta \)-ன் ________ உடைய மதிப்பீட்டு அளவையாகும்.

    (a)

    திறன்தன்மை 

    (b)

    நிறைவுத்தன்மை 

    (c)

    பிழையற்ற தன்மை 

    (d)

    நிலைத்தன்மை 

  9. இரண்டாவது வகைப்பிழை என்பது________ஆகும்.

    (a)

    H0 தவறு எனில் ஏற்பது

    (b)

    H0 உண்மை எனில் ஏற்பது

    (c)

    H0 உண்மை எனில் மறுப்பது

    (d)

    H0 தவறு எனில் மறுப்பது

  10. கூறுசராசரியின் திட்டப்பிழையானது _____.

    (a)

    \(\frac { \sigma }{ \sqrt { 2n } } \)

    (b)

    \(\frac { \sigma }{ n } \)

    (c)

    \(\frac { \sigma }{ \sqrt { n } } \)

    (d)

    \(\frac { { \sigma }^{ 2 } }{ \sqrt { n } } \)

  11. 9 x 2 = 18
  12. முழுமைத் தொகுதி என்றால் என்ன?

  13. கூறுஅளவை (Statistic) அல்லது மாதிரிப்பண்பளவை என்றால் என்ன?

  14. திட்டப்பிழை என்றால் என்ன?

  15. முறைபடுத்திய கூறெடுப்பை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  16. எளிய சமவாய்ப்பு கூறெடுப்பின் நன்மைகள் எவையேனும் இரண்டினை எழுதுக.

  17. முறைபடுத்திய கூறெடுப்பின் குறைகள் இரண்டினைக் கூறுக.

  18. புள்ளியியல் அனுமானத்தின் இரண்டு பகுதிகளை எழுதுக?

  19. மாற்று கருதுகோள் - வரையறு.

  20. 400 தனிநபர்களைக் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் சராசரி உயரம் 67.47 அங்குலம் எனில், அக்கூறானது சராசரி உயரம் 67.39 அங்குலமும் திட்ட விலக்கம் 1.30 அங்குலமும் கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக கருதலாமா?

  21. 4 x 3 = 12
  22. கீழ்க்கண்ட கேண்டல்- பாபிங்டன் ஸ்மித் சமவாய்ப்பு எண் அட்டவணையைப் பயன்படுத்தி.

    23 15 75 48 59 01 83 72 59 93 76 24 97 08 86 95 23 03 67 44
    05 54 55 50 43 10 53 74 35 08 90 61 18 37 44 10 96 22 13 43
    14 87 16 03 50 32 40 43 62 23 50 05 10 03 22 11 54 36 08 34
    38 97 67 49 51 94 05 17 58 53 78 80 59 01 94 32 42 87 16 95
    97 31 26 17 18 99 75 53 08 70 94 25 12 58 41 54 88 21 05 13

    1550 முதல் 8000 வரையிலான 4 இலக்க எண் கொண்ட 10 சமவாய்ப்பு மாதிரியை தேர்ந்தெடுக்க.

  23. திட்டவிலக்கம் 10 மற்றும் மாதிரியைப் பொறுத்து திட்டப்பிழை 3 எனில் மாதிரியின் அளவைக் காண்க.

  24. ஒரு கூறின் அளவு 50 உடைய ஒரு மாதிரியின் திட்டவிலக்கம் 6.3. அதற்குரிய முழுமைத்தொகையின் திட்டவிலக்கம் 6 எனில் மாதிரியின் திட்டப்பிழை காண்க.

  25. அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு முழுமைத் தொகுதியிலிருந்து 100 மாணவர்கள் கொண்ட ஒரு மாதிரி தெரிவு செய்யப்படுகிறது. மாணவர்களின் சராசரி உயரம் 162 செ.மீ மற்றும் திட்டவிலக்கம் 8 செ.மீ. முழுமைத்தொகுதியின் சராசரி உயரம் 160 செ.மீ எனில் அதன் திட்டப்பிழையைக் காண்க

  26. 2 x 5 = 10
  27. பருத்தி நூலின் வலிமை (அறும் தன்மை ) அறிய 100 அளவீடுகள் கொண்ட ஒரு தொகுதியினைத் தெரிவு செய்து அவற்றின் சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 7.4 கிராம் மற்றும் 1.2 கிராம் எனில், பருத்தி நூலின் சராசரி வலிமையின் 95% நம்பிக்கை இடைவெளியை காண்க.

  28. (i) 900 பேர் கொண்ட ஒரு கூறின் சராசரி 3.4 செ.மீ ஆகவும், திட்டவிலக்கம் 2.61 செ.மீ ஆகவும் உள்ளது. சராசரி 3.25 செ.மீ மற்றும் திட்ட விலக்கம் 2.62 செ.மீ கொண்ட ஒரு பெரிய முழுமைத் தொகுதியிலிருந்து அக்கூறு எடுக்கப்பட்டதா? என சோதிக்க. 
    (ii) இயல் நிலையில் உள்ள ஒரு முழுமைக் தொகுதியின் சராசரி தெரியாத நிலையில், உண்மை சராசரியின் 95% மற்றும் 98% நம்பிக்கை எல்லைகளை காண்க.

*****************************************

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths Sampling techniques and Statistical Inference Model Question Paper )

Write your Comment