ஐரோப்பாவில் அமைதியின்மை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூற்று: மக்கள் உரிமை சாசன இயக்கம் ஒரு கலவரமோ, புரட்சியோ அல்ல .
    காரணம்: அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கமாகும்.

    (a)

    கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி.

  2. கோட் டெ லா நேச்சர் என்ற நூலின் ஆசிரியர் _______  ஆவார் .

    (a)

    சார்லஸ் ஃபூரியர்

    (b)

    எட்டியன்-கேப்ரியல் மோராலி

    (c)

    செயின்ட் சீமோன்

    (d)

    பகுனின்

  3. கூற்று: தேசியவாதத்திற்கு 1848ஆம் ஆண்டு தனித்துவமான வெற்றிகள் கிடைத்த ஆண்டாகும்.
    காரணம்: சர்வாதிகாரம் மறைந்தது போன்ற பிம்பம் சிறிது காலத்திற்குத் தோன்றியது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  4. “இரு உலகங்களின் நாயகன்” என  கொண்டாடப்பட்டவர் ________  ஆவார். 

    (a)

    சார்லஸ் ஆல்பிரட்

    (b)

    பிஸ்மார்க்

    (c)

    மூன்றாம் நெப்போலியன்

    (d)

    கரிபால்டி

  5. _______  இடையே ஏழு வாரப் போர் நடந்தது.

    (a)

    டென்மார்க் , பிரஷ்யா

    (b)

    பியட்மாண் ட்-சார்டினியா , ஆஸ்திரியா

    (c)

    பிரான்ஸ், பிரஷ்யா

    (d)

    ஆஸ்திரியா , பிரஷ்யா

  6. 5 x 2 = 10
  7. கார்பொனாரி இத்தாலிய ஐக்கியத்திற்கு செய்த தொண்டுகளை முன்வைத்து குறிப்பு வரைக.

  8. ஃபிராங்கோயஸ் பபேஃப்  என்பவர் யார்?

  9. ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம்  யாது?

  10. போலியான  பொருளாதார  பகட்டுக்  காலம்  பற்றி  நீவிர்  அறிவதை  கூறுக.

  11. அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் 1873ஆம் ஆண்டின் முக்கியத்துவம் யாது?

  12. 5 x 3 = 15
  13. பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் – தெளிவுபடுத்துக.

  14. “சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.

  15. பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதை எடுத்தெழுதுக.

  16. இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.

  17. பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் நீண்டகால பெருமந்த காலத்தில் உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக.

  18. 4 x 5 = 20
  19. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.

  20. 1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.

  21. இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?

  22. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - ஐரோப்பாவில் அமைதியின்மை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Europe in Turmoil Model Question Paper )

Write your Comment