இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை?

    (a)

    ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்ததத்தின் நீதியற்ற தன்மை

    (b)

    பன்னாட்டு சங்கத்தின் தோல்வி

    (c)

    1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்

    (d)

    காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்

  2. கெல்லாக்-பிரையாண்ட் ஒப்பந்தம் _____ஆண்டில் கையெழுத்தானது.

    (a)

    1927

    (b)

    1928

    (c)

    1929

    (d)

    1930

  3. கூற்று: ஆயுதக்குறைப்பு மாநாடு பன்னாட்டு சங்கத்தால் ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
    காரணம்: பிரான்சுக்கு சமமாக ஜெர்மனி தளவாடங்களை கொண்டிருக்க முயல்வது பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக தோன்றியது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி  காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும், காரணமும் சரி ஆனால் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி  காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு காரணம் சரி  

  4. சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?

    (a)

    1931

    (b)

    1932

    (c)

    1933

    (d)

    1934

  5. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருத்தது.

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    ஸ்பெயின் 

    (c)

    ஜெர்மனி

    (d)

    ஆஸ்திரியா

  6. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் சரத்துகளின்படி ஜனவரி 1935இல் _______ பகுதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முடிவானது.

    (a)

    சூடட்டன்லாந்து 

    (b)

    ரைன்லாந்து 

    (c)

    சார் 

    (d)

    அல்சேஸ் 

  7. கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
    காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.

    (a)

    கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி 

  8. ஜெர்மனி 1939இல் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ______ நாட்டோடு ஏற்படுத்திக் கொண்டது.

    (a)

    ஆஸ்திரியா

    (b)

    இத்தாலி 

    (c)

    ரஷ்யா

    (d)

    பிரிட்டன் 

  9. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்குவதற்குத் திட்டம் வகுத்தவர் _______ஆவார்.

    (a)

    யாமமோடோ

    (b)

    ஸ்கூஸ்னிக் 

    (c)

    இரண்டாம் கெய்சர் வில்லியம்

    (d)

    ஹிரோஹிடோ

  10. குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அறிமுகப்பபடுத்திய கடன்-குத்தகை முறை ______ வகையில் உதவிபுரிந்ததது.

    (a)

    பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல்

    (b)

    யூதர்களை ஹிட்லரின் படைகள் கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்

    (c)

    தோழமை நாடுகளின் வளங்களைப் பெருக்கி, அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் வழங்குதல் 

    (d)

    இரண்டாம் உலகப்போரில் காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் 

  11. அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆக்ஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் _______ ஆவார்.

    (a)

    மெக்ஆர்தர்

    (b)

    ஜசன்ஹோவர் 

    (c)

    ஜெனரல் டி  கால் 

    (d)

    ஜார்ஜ் மார்ஷல்

  12. ஜப்பானிய கடற்படையை அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படை தோற்கடித்தமை ______ போரிலாகும்.

    (a)

    பிரிட்டன் 

    (b)

    குவாடல்கனல்

    (c)

    எல் அலாமின்

    (d)

    மிட்வே

  13. ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச் சந்தித்தது  _______ என்னுமிடத்தில் ஆகும்.

    (a)

    போட்ஸ்டாம் 

    (b)

    எல் அலாமின்

    (c)

    ஸ்டாலின்கிராட் 

    (d)

    மிட்வே

  14. கீழ்க்காண்பனவற்றுள் போட்ஸ்டாம் மாநாட்டின் அறிவிப்புகளில் அடங்காத ஒன்று எது?

    (a)

    கிழக்கு பிரஷ்யா இரு பகுதிகளாகப்  பிரிக்கப்பட வேண்டும்: அதில் வடக்குப் பகுதி சோவியத் நாட்டையும், தென் பகுதி போலந்தையும் சென்று சேரும்.

    (b)

    முன்பு சுதந்திர நகரமாக இருந்த டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சேர்க்கப்பபடும்.

    (c)

    ஜெர்மனி நான்கு தொழில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியும் முறையே சோவியத் நாடு, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், ஆகியவைகளின் கட்டுப்பாட்டில் விடப்படும்.

    (d)

    ட்ரிஸ்டியை A மண்டலம் என்றும் B மண்டலம் என்றும் பிரிப்பதென்றானது. A மண்டலம் இத்தாலிக்கு கொடுக்கப்படவும், B மண்டலம் யுகோஸ்லோவியாவிற்கு வழங்கப்படவும் முடிவு செய்யப்பட்டது.

  15. கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போரின் விளைவுகளில் சேராத ஒன்று எது?

    (a)

    இரண்டாம் உலகப்போர் ஐரோப்பாவிலிருந்த பல முடியரசுகளுக்கு மரண அடி கொடுத்தது.

    (b)

    பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஒரு பொதுநல அடிப்படை கொண்ட  நாட்டை உருவாக்கியது.

    (c)

    பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியை வழங்கியது .

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடும், சோவியத் நாடும் இரு வல்லரசுகளாக உருவெடுத்தன.

  16. கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?

    ஜெனரல் டி கால் பிரான்ஸ் 
    ஹேல் செலாஸி எத்தியோப்பியா 
    ஜெனரல்  படோக்லியோ  ஜப்பான்
    அட்மிரல் யாம்மோடோ  இத்தாலி 
    (a)

    (1) மற்றும் (2)

    (b)

    (2) மற்றும் (3)

    (c)

    (3) மற்றும் (4)

    (d)

    அனைத்தும் 

  17. பிரான்ஸ் இரண்டாம் அபினிப் போரில் பங்கெடுத்தது ______.

    (a)

    பிரிட்டனுக்கு உதவிபுரிவதற்காக

    (b)

    பிரான்சுக்கென தனி செல்வாக்கின் கோளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக

    (c)

    சமய செயல்பாடுகளுக்கு அனுமதிகோரும் பொருட்டு

    (d)

    ஓபிய வணிகத்தில் ஈடுபடும் உரிமையை பிரான்ஸ் நாட்டினர் நிலைநாட்டுவதற்காக

  18. மஞ்சு வம்சத்தின் காலம் ______ ஆண்டு வரை நீடித்தது.

    (a)

    1908

    (b)

    1911

    (c)

    1912

    (d)

    1916

  19. ஸ்பானிய-அமெரிக்கப் போர் ______ சர்ச்சையை முன்னிறுத்தி 1898 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

    (a)

    கியூபா

    (b)

    பிலிப்பைன்ஸ் 

    (c)

    போர்டோ ரிக்கோ

    (d)

    படாவியா

  20. கூற்று: பிலிப்பைன்ஸ் 4 ஜூலை 1946ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.
    காரணம்: அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆதிக்கத்தின் கீழான தென் கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பில் பிலிப்பைன்ஸ் இணைந்தது.

    (a)

    கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

    (c)

    கூற்று சரி . காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு . காரணம் சரி .

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies One Mark Question with Answer )

Write your Comment