" /> -->

திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்.

  (a)

  பாலகங்காதர திலகர்

  (b)

  M.K. காந்தி

  (c)

  தாதாபாய் நெளரோஜி

  (d)

  சுபாஷ் சந்திர போஸ்

 2. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?

  (a)

  அமெரிக்கா

  (b)

  இங்கிலாந்து

  (c)

  இரஷ்யா

  (d)

  ஜெர்மனி

 3. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

  (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
  (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
  (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
  (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
  (a)
  3 1 4 2
  (b)
  1 2 3 4
  (c)
  3 4 1 2
  (d)
  1 2 4 3
 4. கேசரி என்ற பத்திரிக்கையை எழுதிய தலைவரின் பெயரைக் எழுதுக.

  (a)

  காந்தி

  (b)

  திலகர்

  (c)

  சுபாஷ்

  (d)

  அம்பேத்கர் 

 5. கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

  (a)

  கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல

  (b)

  கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்

  (c)

  கூற்று தவறு. காரணம் சரி

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 6. காதர் கட்சியைத் தொடங்கியவர் யார்?

  (a)

  லால ஹர்தயாள் 

  (b)

  திலகர் 

  (c)

  லாலா லாஜபதிரை 

  (d)

  சுபாஷ் சந்திரபோஷ் 

 7. கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
  காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

  (a)

  கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி, காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு, காரணம் சரி

 8. சாம்பரான் சத்யாகிரக சோதனை நடைபெற்ற ஆண்டு எது ?

  (a)

  1918

  (b)

  1915

  (c)

  1919

  (d)

  1917

 9. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

  (a)

  எம்.என். ராய்

  (b)

  பகத் சிங்

  (c)

  எஸ்.ஏ. டாங்கே 

  (d)

  ராம் பிரசாத் பிஸ்மில்

 10. தூக்கிலிடுவதற்குப் பதிலாகச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கோரியவர்கள் யாவர்?

  (a)

  பகத்சிங் மற்றும் நண்பர்கள் 

  (b)

  வாஞ்சிநாதன்

  (c)

  சுபாஷ்

  (d)

  யாருமில்லை

 11. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
  காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

  (a)

  கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (b)

  கூற்று சரி, காரணம் தவறு

  (c)

  கூற்று மற்றும் காரணம் தவறு

  (d)

  கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

 12. காங்கிரசின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எண்ணிக்கை யாது?

  (a)

  172

  (b)

  79

  (c)

  75

  (d)

  72

 13. பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்?

  (a)

  ஆகஸ்ட் 15, 1947

  (b)

  ஜனவரி 26, 1950

  (c)

  ஜூன், 1948

  (d)

  டிசம்பர், 1949

 14. முத்துதுறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?

  (a)

  சீனா

  (b)

  பங்காள தேசம்

  (c)

  இந்தியா

  (d)

  ஜப்பான்

 15. தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?

  (a)

  1962, செப்டம்பர் 8

  (b)

  1962, செப்டம்பர் 18

  (c)

  1965, செப்டம்பர் 8

  (d)

  1962, செப்டம்பர் 28

 16. போப்பாண்டவரால் கட்டப்பட்ட  ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?

  (a)

  டோனிடெல்லா

  (b)

  ரபேல்

  (c)

  லியானர்டோ  டாவின்சி

  (d)

  மைக்கேல்  ஆஞ்சிலோ 

 17. கூற்று: 1770இல்  இங்கிலாந்து  தேயிலைத்  தவிர ஏனைய  பொருட்களின்  மீதான  வரிகளை  ரத்து  செய்தது.
  காரணம்:  காலனி  நாடுகளின்  மீது  நேரடியாகவே  அல்லது மறைமுகமாகவே  வரிவிதிக்கும்  உரிமை  ஆங்கிலேய  பாராளுமன்றத்திற்கு  உண்டு  என்பதை  உறுதிப்படுத்தவே  தேயிலையின்  மீதான  வரி  தக்கவைத்துக்  கொள்ளப்பட்டது.

  (a)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை.

  (c)

  கூற்று  சரி.காரணம்  தவறு

  (d)

  கூற்று  தவறு. காரணம் சரி.

 18. ஜெர்மன் தேசத்திற்கு தொடர்  சொற்பொழிவுகளை வழங்கியவர் ________  ஆவார் .

  (a)

  ஜோஹன் வான் ஹெர்டர்

  (b)

  பிரைட்ரிக் ஷெலிகெல்

  (c)

  J.G. ஃபிக்ட்

  (d)

  ஆட்டோ வான் பிஸ்மார்க்

 19.         க்குப் பின்  ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது 

  (a)

  ரஷ்ய-ஜப்பனியப் போர் 

  (b)

  இரண்டாம் அபினிப் போர் 

  (c)

  இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர் 

  (d)

  சீன-ஜப்பானியப் போர் 

 20. சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.

  (a)

  நவம்பர் 17, 1991

  (b)

  டிசம்பர் 8, 1991

  (c)

  மே 1, 1991

  (d)

  அக்டோபர் 17, 1991

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

  7 x 2 = 14
 22. மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?

 23. லக்னோ ஒப்பந்தத்தின் சிறப்பு என்ன?

 24. பி.ஆர். அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?

 25. ஸ்டேன்ஸ் நூற்பு மற்றும் நெசவு ஆலை கோவை பற்றி எழுதுக.

 26. இந்து மகா சபை பற்றி எழுதுக.

 27. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

 28. நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.

 29. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?

 30. இத்தாலியை மெட்டர்னிக்  "வெறும் பூளோக  வெளிப்போட " என  ஏன்  கூறினார்?

 31. பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த ‘மறை முக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

 32. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

  7 x 3 = 21
 33. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?

 34. மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?

 35. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

 36. முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.

 37. இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

 38. இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தையை விவரி?

 39. போர்த்துகீசிய கடல்பயணி பெட்ரோ காப்ரல் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பிடுக.

 40. தென்அமெரிக்காவில்  முதன்முதலாகப்  பிரேசிலில்  அரசியலமைப்பு  சார்ந்த  முடியாட்சி  அரசு  அமைந்தற்கான  சசூழ்நிலைகளை   எடுத்துரைக்கவும்.

 41. பிரிட்ட னிலும், அமெரிக்காவிலும் நீண்டகால பெருமந்த கா லத்தில் உருவான தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றி குறிப்பு வரைக.

 42. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

  2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்ப டுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.

  1. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

  2. "அமெரிக்க  புரட்சியும்  பிரெஞ்சுப்  புரட்சியும்  ஹைட்டியில்  புரட்சி  ஏற்படத்  தூண்டுகோலாய்  அமைந்தன". இக்கூற்றை  உறுதிப்படுத்தவும்.

  1. கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.

  2. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளா க உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

  1. காங்கிரஸ் அமைத்த முதல் அமைசச்சரவைகள் பற்றி விவரி? 

  2. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.

  1. வங்கப்பிரிவின் விளைவுகளைப் பற்றி விவரி?

  2. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  1. மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

  2. கிரிப்ஸின் முன்மொழிவு கருத்துக்களைக் தொகுத்து எழுதுக?

  1. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

  2. சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th History - Revision Model Question Paper 2 )

Write your Comment