புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு  ______  என  மறுபெயர் சூட்டப்பட்டது.  

    (a)

    வாஷிங்டன் 

    (b)

    நியூயார்க்

    (c)

    சிக்காகோ 

    (d)

    ஆம்ஸ்டர்டாம்

  2. டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு  இட்டுச் சென்ற எதிர்ப்புக்கு தலைமையேற்ற  பிரபு  _____  ஆவார்.

    (a)

    மார்ட் 

    (b)

    டாண்டன் 

    (c)

    லஃபாயட்

    (d)

    மிராபு

  3. கூற்று: வளர்ந்து  கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
    காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென  அவர்கள்  விரும்பினர்.

    (a)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. காரணம்  கூற்றை  விளக்குகிறது.

    (b)

    கூற்று, காரணம்  இரண்டும்  சரி. ஆனால்  காரணம்  கூற்றை  விளக்கவில்லை

    (c)

    கூற்று  சரி.காரணம்  தவறு

    (d)

    கூற்று  தவறு. காரணம் சரி.

  4. பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன்  மற்றும்  குடிமக்கள்  உரிமைகள்  பிரகடனம்  பெண்களைத்  தவிர்த்துவிட்டதால்  அதன் மேல்  ____ அதிருப்தி கொண்டிருந்தார்.

    (a)

    ஒலிம்பே  டி கோஜெஸ்

    (b)

    மேரி அன்டாய்னெட்

    (c)

    ரோஜெட் டி லிஸ்லி

    (d)

    ரோபஸ்பியர் 

  5. பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக  இருந்தது _____.

    (a)

    வெர்செய்ல்ஸ் 

    (b)

    தெளலன் 

    (c)

    மார்செய்ல்ஸ் 

    (d)

    டியூலெர்ஸ் 

  6. 5 x 2 = 10
  7. மனிதன்  மற்றும்  குடிமக்களின்  உரிமைப்  பிரகடனத்தின்  சாரம்சத்தை  அடிக்கோடிட்டுக்  காட்டவும்.

  8. இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக. 

  9. தொழிற்புரட்சியின்  சிறப்புக்கூறுகளை  முன்னிலைப்படுத்திக்  காட்டவும். 

  10. சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்?

  11. பீட்டர்லூ படுகொலையின்  பின்னணி  யாது?

  12. 5 x 3 = 15
  13. 1783 இல்  கையெழுத்திடப்பட்ட  பாரிஸ்  உடன்படிக்கையின்  முக்கிய  சரத்துக்களை  விவாதிக்கவும்.

  14. அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

  15. "1789 ஆம் ஆண்டு  புரட்சிக்கு  நீண்ட  காலத்திற்கு  முன்னதாகவே  கருத்துக்களின்  களத்தில் ஒரு புரட்சி  நடந்தது " - விளக்குக.

  16. தென்அமெரிக்காவில்  முதன்முதலாகப்  பிரேசிலில்  அரசியலமைப்பு  சார்ந்த  முடியாட்சி  அரசு  அமைந்ததற்கான  சூழ்நிலைகளை  எடுத்துரைக்கவும்.

  17. தொழிற்புரட்சியின்  இரண்டாம்  கட்டத்தில்  ஜெர்மனியில்  நடந்தது  என்ன?

  18. 4 x 5 = 20
  19. அமெரிக்க  விடுதலைப்  போருக்கான  காரணங்கள், அதன்  போக்கு, விளைவுகள்  குறித்து  விவாதிக்கவும்.

  20. பாஸ்டில்  சிறை  தகர்ப்பு முதல்  ரோபஸ்பியர்  கொல்லப்பட்டது வரையிலுமான  பிரெஞ்சுப்  புரட்சியின்  போக்கினை  வரைக.

  21. "அமெரிக்க  புரட்சியும்  பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை  உறுதிப்படுத்தவும்.

  22. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை  ஏற்படுத்தி  உள்ளது?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - புரட்சிகளின் காலம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - The Age of Revolutions Model Question Paper )

Write your Comment