" /> -->

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. 1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு _________ 

  (a)

  கிழக்கு ஜெர்மனி

  (b)

  செக்கோஸ்லோவாக்கியா

  (c)

  கிரீஸ்

  (d)

  துருக்கி

 2. கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
  காரணம்: கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டுசேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 3. 'பனிப் போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர்

  (a)

  பெர்னாட் பரூச்

  (b)

  ஜார்ஜ் ஆர்வெல்

  (c)

  ஜார்ஜ் கென்னன்

  (d)

  சர்ச்சில்

 4. கூற்று: மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம்” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தா ர்.
  காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கா ன சூழ்ச்சியே ஆகும்.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 5. மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _________ 

  (a)

  ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

  (b)

  முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது

  (c)

  ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது

  (d)

  சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது

 6. ட்ரூமன் கோட்பாடு ________  பரிந்துரைத்தது

  (a)

  கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

  (b)

  காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது 

  (c)

  கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது

  (d)

  அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது

 7. கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படிஒழுங்கு செய்யவும்.
  1) வார்சா உடன் படிக்கை
  2) சென்டோ 
  3) சீட்டோ 
  4) நேட்டோ 

  (a)

  4 2 3 1

  (b)

  1 3 2 4

  (c)

  4 3 2 1

  (d)

  1 2 3 4

 8. ________  பாக்தாத் உடன் படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.

  (a)

  மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது

  (b)

  அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச் சுரண்டுவது

  (c)

  கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை த் தடுப்பது

  (d)

  ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது

 9. லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை _________  எதிர்த்தது

  (a)

  துருக்கி

  (b)

  ஈராக்

  (c)

  இந்தியா

  (d)

  பாகிஸ்தான் 

 10. “மூன்றாம் உலகம்” எனும் பதத்தை ________  உருவாக்கியவர் ஆவார்.

  (a)

  ஆல்பிரட் சாவே

  (b)

  மார்ஷல்

  (c)

  மோலோடோவ் 

  (d)

  ஹாரி ட்ரூமன்

 11. பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க.

  அ. இந்தோனே சியா 1. ஜவகர்லா ல் நேரு
  ஆ. எகிப்து 2. டிட்டோ
  இ. கானா 3. குவாமி நுக்ருமா
  ஈ. யுகோஸ் லோவியா     4. கமால் அப்துல் நாசர்
  உ. இந்தியா  5. சுகர்னோ 
  (a)
  5 3 4 2 1
  (b)
  1 3 2 4 5
  (c)
  5 4 3 2 1
  (d)
  1 2 3 4 5
 12. அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு _________ ல் நடைபெற்றது

  (a)

  பெல்கிரேடு

  (b)

  பெய்ஜிங்

  (c)

  பாண்டுங்  

  (d)

  பாலி

 13. கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
  காரணம்: மற்றொ ரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண் டியதன் அவசியத்தை தலைவர்க ள் உணர்ந்தனர்

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 14. ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல்  _______  உருவானது.

  (a)

  100 உறுப்பினர்களுடன்

  (b)

  72 உறுப்பினர்களுடன்

  (c)

  51 உறுப்பினர்களுடன்

  (d)

  126 உறுப்பினர்களுடன்

 15. பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
  கூற்று I: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்பபோரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெ ற்றது.
  கூற்று II: ப னிப்போர் காலக்கட்டத்தில், போர்க ள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
  கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது

  (a)

  I,II

  (b)

  II,III

  (c)

  I, III

  (d)

  மேற்கூறப்பட்ட அனைத்தும்

 16. சூயஸ் கால்வாய் செங்கடலை _________  இணைக்கிறது.

  (a)

  ஏடன் வளைகுடாவுடன்

  (b)

  காம்பே வளைகுடாவுடன்

  (c)

  மத்தியதரைக் கடலுடன்

  (d)

  அரபிக் கடலுடன்

 17. ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வேலை ________  சேர்ந்த வராவார்.

  (a)

  பர்மா  

  (b)

  ஜப்பான்

  (c)

  சிங்கப்பூர்

  (d)

  நார்வே

 18. கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
  காரணம்: பிரிட்டனின் வெளியே ற்றம் 'பிரெக்ஸிட்' (Brexit) என அழைக்கப்படுகிறது

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 19. கிளாஸ்நாஸ்ட் குறிப்பது ________ 

  (a)

  ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை

  (b)

  சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப்படுத்தப்படுவதை

  (c)

  சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை

  (d)

  பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை

 20. சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.

  (a)

  நவம்பர் 17, 1991

  (b)

  டிசம்பர் 8, 1991

  (c)

  மே 1, 1991

  (d)

  அக்டோபர் 17, 1991

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - The World after World War II One Mark Question with Answer )

Write your Comment