" /> -->

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. ஒரு உருளை வடிவ சட்டக்காந்தம் ஒரு வரிச்சுருளின் அச்சின் வழியே வைக்கப்பட்டுள்ளது. காந்தமானது அதன் அச்சைப் பொருத்து சுழற்றப்பட்டால், சுருளில் மின்னோட்டம் தூண்டப்படுமா என்பதைக் காண்க.

 2. ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.

 3. சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 40378.7 nT கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க [g = 10 m s-2 எனக் கொள்க].

 4. மின்தூண்டி மற்றும் மின்தேக்ன்தேக்கி மின்மறுப்பை வரையறு. அதன் அலகுகளைத் தருக.

 5. ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப் பெறுக. அதன் சிறப்பு நேர்வுகளை விவரி.

 6. மின்காந்த தூண்டலின் முக்கியத்துவத்தைக் கூறு.

 7. சுழல் மின்னோட்டத்தின் குறைபாடுகள் யாவை? எவ்வாறு தவிர்க்கலாம்?

 8. மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.

 9. ஒரு AC சுற்றின் கட்ட வெக்டார் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது.

 10. மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு. 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Three Marks Questions )

Write your Comment