Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. x – ஆயத் தொலைவின் சார்பாக மட்டும் குறிக்கப்படும் மின்னழுத்தம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. x ன் சார்பாக மின்புலத்தை வரைந்து காட்டுக

  2. புள்ளி மின்துகள்களாலான அமைப்பின் மின்புலத்திற்கான கோவையை வருவி

  3. மின்னணுவியலை விருப்பமாக கொண்ட மாணவி ஒரு வானொலிப்பெட்டியை உருவாக்குகிறார். அந்த மின்சுற்றுக்கு ஒரு 150 Ω மின்தடை தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் 220 Ω, 79 Ω மற்றும் 92 Ω மின்தடைகள் மட்டுமே உள்ளன எனில் அவர் இம்மின்தடைகளை எவ்வாறு இணைத்து தேவையான மதிப்புடைய மின்தடையை பெறுவார்?

  4. மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையைக் காணும் முறையை விவரி.

  5. மின் தடையாக்கிகள் தொடரிணைப்பிலும் பக்க இணைப்பிலும் உள்ள போது தொகுபயன் மின்தடைகள் 10 ᘯ மற்றும் 2.4ᘯ எனில், தனித்தனியான மின்தடைகள் என்ன?

  6. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

  7. குறுக்குவெட்டுப்பரப்பு 0.1 cm2 கொண்ட வட்டக்கம்பிச்சுருள் ஒன்று 0.2 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருள் வழியே பாயும் மின்னோட்டம் 3 A மேலும் கம்பிச்சுருளின் பரப்பு காந்தப்புலத்திற்கு செங்குத்தாக உள்ளபோது பின்வருவனவற்றைக் காண்க.
    (அ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்ததிருப்புவிசை
    (ஆ) கம்பிச் சுருளின் மீது செயல்படும் மொத்த விசை
    (இ) காநாந்தப்புலத்தினால் கம்பிச்சுருளில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின் மீதும் செயல்படும் சராசரி விசை (கம்பிச்சுருள் செய்யப்பட்டுள்ள பொருளின் கட்டுறா எலக்ட்ரான் அடர்த்தி 1028 m-3 எனக் கொள்க)

  8. காந்தப்புலக் கோடுகளின் பண்புகள் யாவை?

  9. N சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருளை இறுக சுட்டி ஒரு சுருளை உண்டாக்கி அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆரத்தை a மற்றும் b எனக் கொள்க. அந்த சுருளில் I என்ற மின்னோட்டம் பாயும் போது அதன் நடுவிலிருந்து உருவாகும் காந்தப்புலத்தை கணக்கிடு.

  10. 600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது
    (i) புலத்திற்கு குத்தாக
    (ii) புலத்திற்கு இணையாக மற்றும்
    (iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக

  11. ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சமன்பாடு i = 77 sin314 t ஆகும். அதன் பெரும மதிப்பு அதிர்வெண், அலைவுநேரம் மற்றும் t = 2 ms - இல் கணநேர மதிப்பு ஆகியவற்றைக் காண்க.

  12. ஒப்புமை உட்புகுதிறன் 900 கொண்ட ஒரு இரும்பு உள்ளகத்தின் மீது வரிச்சுருள்கள் S1 மற்றும் S2 சுற்றப்பட்டுள்ளன. அவை முறையே 4 cm2 மற்றும் 0.04 m என்ற சம குறுக்குப்பரப்பும் மற்றும் சம நீளமும் கொண்டுள்ளன. S1 இல் உள்ள சுற்றுகள் 200 மற்றும் S2 இல் உள்ள சுற்றுகள் 800 எனில், சுருள்களுக்கு இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக. வரிச்சுருள் S1 இல் மின்னோட்டம் 2 A இல் இருந்து 8 A ஆக 0.04 நொடியில் அதிகரிக்கப்படுகிறது. வரிச்சுருள் S2 இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் கணக்கிடுக.

  13. R = 20 ᘯ, L = 1.5H மற்றும் c = 35μF தொடராக இணைக்கப்பட RLC சுற்றுடன் மாறுபடும் அதிர்வெண் 200 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் அதிர்வெண் சுற்றின் அதிர்வெண்ணுக்குச் சமமாகும் போது ஒரு முழுச்சுற்றில் மின்சுற்று மாற்றப்படும் சராசரி திறன் என்ன?

  14. ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச் சுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை முறையே 500 மற்றும் 5000, உள்ளீடு மின்னழுத்தம் 220 V எனில் வெளியீடு மின்னழுத்தம் என்ன?

  15. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

  16. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் 560 nm மற்றும் 420 nm அலைநீளங்களையுடைய இரண்டு ஒளி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. மையப் பொலிவுப் பட்டையிலிருந்து இரண்டு அலைநீளங்களின் பொலிவுப் பட்டைகளும் ஒன்றினையும் சிறுமத்த தொலைவைக் காண்க. கொடுக்கப்பட்டவை, D = 1 m மற்றும் d = 3 mm.

  17. யங் இரட்டைப்பிளவு ஆய்வில் 2 mm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ள இரட்டைப் பிளவுகள் λ0 = 750 nm மற்றும் λ = 900 nm அலைநீளங்களைக் கொண்ட கூட்டு ஒளியினால் ஒளியூட்டப்பட்டு இரட்டைப் பிளவுகளில் இருந்து 2 m தொலைவில் உள்ள திரையில் குறுக்கீட்டுப் பட்டைகள் தோன்றுகின்றன. பொதுவான மையப் பொலிவுப்பட்டையிலிருந்து ஒரு குறுக்கீட்டுப்பட்டை அமைப்பின் பொலிவுப்பட்டையும், மற்றொரு குறுக்கீட்டுப் பட்டை அமைப்பின் பொலிவுப்பட்டையுடன் ஒன்றிணையும் குறைந்தபட்சத் தொலைவைக் கணக்கிடுக.

  18. எலக்ட்ரானின் அலை  இயல்பினை  விவரிக்கும்  டேவிசன் -ஜெர்மர்  சோதனையை  சுருக்கமாக  விவரி.

  19. பின்வரும்  தகவல்களை பயன்படுத்தி  \(_{ 2 }^{ 4 }{ He }\) அணுக்கருவின்  பிணைப்பு ஆற்றலைக் கணக்கிடுக: ஹீலியம் அணுவின் அணு நிறை M4(He) = 4.00260 u மற்றும் ஹைட்ரஜன் அணுவின் நிறை mH = 1.00785 u 

  20. ஒரு டிரான்சிஸ்டரின் α = 0.99 மற்றும் VBE = 0.7V என பின்வரும் மின்சுற்றில் தரப்பட்டுள்ளது. எனில், ஏற்பான் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Physics - Full Portion Five Marks Question Paper )

Write your Comment