Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
  20 x 3 = 60
 1. படத்தில் இரு புள்ளி மின்துகள்கள் q1 மற்றும் q2 நிலையாக உள்ளன.

  அவை 1 m இடைவெளியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. பின்வரும் நேர்வுகளுக்கு அவற்றுக்கு இடையே செயல்படும் விசையை கணக்கிடுக.
  (அ) q1 = +2 μC மற்றும் q2 = +3 μC
  (ஆ) q1 = +2 μC மற்றும் q2 = -3 μC
  (இ) q1= +2 μC மற்றும் q2 = -3 μC நீரில் (εr = 80) வைக்கப்படும்போது

 2. மின் இருமுனை ஒன்றின் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டின் மின்புலத்திற்கான கோவையில் முக்கிய தெரிவுகளை எழுதுக

 3. மின்காப்பு பெற்ற மின்தேக்கியின் உள்ளே தூண்டப்படும் நிகழ்வை விவரி

 4. ஒரு மின்னிழை பல்பு (filament bulb) (500W, 100V) என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மின்னழுத்த 230V வேறுபாட்டு (power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R-யாதை தொடரிணைப்பில் இணைக்கப்படுகிறது. மேலும் பல்பு அனைத்து முழு நிறைவாக செயல்படுகிறது. இதனுடைய மின்திறன் 500W இருக்கும்போது மின்தடை R-யின் மதிப்பு என்ன?

 5. கால்வனோ மீட்டரின் தகுதியொப்பெண் வரையறு? கால்வனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் இவ்விரண்டில் ஏதற்கு மின்தடை அதிகம்?

 6. மின்காந்த தூண்டலின் முக்கியத்துவத்தைக் கூறு.

 7. பூமியில் வளிமண்டலம் இல்லாமல் போனால் அவற்றின் பரப்பு வெப்பநிலை இப்போது உள்ள வெப்ப நிலையை விட குறையுமா அல்லது அதிகரிக்குமா?

 8. குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிர்வடையும் 'q' மின்னூட்டம் எவ்வாறு மின்காந்த அலையினை தோற்றுவிக்கும்?

 9. 150 cm குவியத்தூரம் கொண்ட கண்ணாடியால் செய்யப்பட்ட லென்ஸின் திறனைக் காண்க

 10. ஃபிளிண்ட் கண்ணாடியின் வழியே செல்லும் சிவப்பு, பச்சை மற்றும் ஊதா ஒளிகளின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.613, 1.620 மற்றும்1.632 ஆகும். இம்மதிப்புகளைக் கொண் டு ஃபிளிண்ட் கண்ணாடியின் நிறப்பிரிகை திறனைக் காண்க

 11. எளிய நுண்ணோக்கி ஒன்றினை விவரித்து, அண்மைப்புள்ளி குவியப்படுத்தல் மற்றும் இயல்புநிலைக் குவியப்படுத்துதலில் ஏற்படும் உருப்பெருக்கங்களுக்கான சமன்பாடுகளைப் பெறுக.

 12. m  நிறையுள்ள  துகளுடன்  தொடர்புடைய  டி  ப்ராய் அலைநீளத்திற்கான λ  சமன்பாட்டை  துகளின்  இயக்க  ஆற்றல்  K மூலம்  எழுதுக. 

 13. ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை தொடர்களை விளக்குக.

 14. அணுக்கரு நிலையாகவும் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் இயங்குவதாகவும் கருத்தில் கொண்டு போர் அணுமாதிரியின் சமன்பா டுகள் தருவிக்கப்பட்டுள்ளன. அணுக்கருவும் இயக்கத்தில் உள்ளதாகக் கருதினால், அத்தகைய அமைப்பில் ஆற்றலின் கோவையைத் தருவிக்கவும்.

 15. ஒரு நல்லியல்பு டையோடு மற்றும் ஒரு 5Ω மின்தடையும் தொடரினைப்பில் ஒரு 15V மின்னழுத்த மூலத்துடன் பின் வரும் படத்தில் உள்வாறு இணைக்கப்படுள்ளன எனில் டையோடின் வழியாக பாயும் மின்னோட்டத்தை கணக்கிடுக?

 16. பொது உமிழ்ப்பான் நிலையில் ஒரு ட்ரான்சிஸ்டரின் வெளியீட்டு சிறப்பியல்பு படத்தில் தரப்பட்டுள்ளது. VCE = 15 V எனில் I -யின் மதிப்பை கணக்கீடுக. மேலும் VCE மதிப்பு 10 V ஆக மாற்றப்படும் பொது I-யின் மதிப்பை கணக்கிடுக.

 17. சூரியமின்கலம் வேலை செய்யும் தத்துவத்தை விவரி. அதன் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.

 18. பண்பேற்றம் என்றால் என்ன? பண்பேற்றத்தின் வகைகளைத் தேவையான படங்களுடன் விளக்குக.

 19. கம்பியில்லா தகவல்தொடர்பில் பண்பேற்றமானது வின்கலைக்கம்பியின் அளவைக் குறைக்க உதவுகிறது - விளக்குக.

 20. ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Physics - Full Portion Three Marks Question Paper )

Write your Comment