" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

  15 x 1 = 15
 1. 1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)

  (a)

  3 × 10-2 C

  (b)

  4 × 10-2 C

  (c)

  1 × 10-2 C

  (d)

  2 × 10-2 C

 2. Q கூலும் மின்னூட்டத்தினை X cm, தொலைவு நகர்த்த செய்யும் வேலை WJ எனில் மின்னழுத்த வேறுபாடு

  (a)

  \(\frac { W }{ Q } V\)

  (b)

  QWV

  (c)

  \(\frac { Q }{ W } V\)

  (d)

  \(\frac { { Q }^{ 2 } }{ W } V\)

 3. டங்ஸ்டனின் உருகுநிலையானது _________ 

  (a)

  3280o

  (b)

  3580o

  (c)

  3380o

  (d)

  3680o

 4. சீரான மின்னுட்ட அடர்த்தி σ கொண்ட மின்னுட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தட்டுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்கோட்டுப்பாதையில் செல்கிறது. சீரான கந்தபுலத்திற்கு \(\vec { B } \) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்

  (a)

  ε\(_{ \circ }\frac { elB }{ \sigma } \)

  (b)

  ε\(_{ \circ }\frac { lB }{ \sigma l } \)

  (c)

  ε\(_{ \circ }\frac { lB }{ e\sigma } \)

  (d)

  ε\(_{ \circ }\frac { lB }{ \sigma } \)

 5. ஒவ்வொரு கடத்தியும் ஓரலகு நீளத்திற்கு _________ விசையை உணர்ந்தால், ஒவ்வொரு கடத்தியின் வழியாகவும் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியராகும்.

  (a)

  2πx10-7 N

  (b)

  2x10-7N

  (c)

  4πx10-7

  (d)

  2x107N

 6. RLC சுற்றில், L, C, R க்கு குறுக்கே பாயும் மின்னழுத்தம் 50v எனில் LC க்கு குறுக்கே பாயும் மின்னழுத்தம் _________________

  (a)

  50V 

  (b)

  0V 

  (c)

  50 \(\sqrt { 2 } \) 

  (d)

  100 V 

 7. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்

  (a)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

  (b)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

  (c)

  ஒரே கட்டத்தில் உள்ளன மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து இல்லை

  (d)

  ஒரே கட்டத்தில் இல்லை மேலும் ஒன்றுக்கொன்று செங்குத்து

 8. மின்காந்த அலை

  (a)

  ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்

  (b)

  சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்

  (c)

  வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்

  (d)

  ஊடகத்தில் பரவாது

 9. கருமை நிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழி லென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம் =500 nm]

  (a)

  1 m

  (b)

  5 m

  (c)

  3 m

  (d)

  6 m

 10. λ  அலைநீளமுள்ள கதிர்வீச்சினால்  ஒரு உலோகப்  பரப்பு  ஒளியூட்டபடும் போது, அதன்  நிறுத்து  மின்னழுத்தம்  v   ஆகும். 2λ  அலைநீளமுள்ள  ஒளியினால்  அதே  பரப்பு  ஒளியூட்டப்பட்டால், நிறுத்த  மின்னழுத்தம்  \(\frac {V}{4}\) ஆகும் . எனில்  அந்த  உலோகப்பரப்பிற்கான  பயன்தொடக்க  அலைநீளம் 

  (a)

  (b)

  (c)

  \(\frac{5}{2}\) λ

  (d)

  3 λ

 11. Li++, He+ மற்றும் H ஆகியவற்றில் n = 2 லிருந்து n = 1க்கு நகர்வு ஏற்படும் போது உமிழப்படும் அலைநீளங்களின் விகிதம்.

  (a)

  1:2:3

  (b)

  1:4:9

  (c)

  3:2:1

  (d)

  4:9:36

 12. ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழ்ப்படக்காரணம்

  (a)

  மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 

  (b)

  லென்சுகளின் செயல்பட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு

  (c)

  சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்

  (d)

  மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.

 13. தகவல் தொடர்பு அமைப்பின், வெளியீடு திறன் மாற்றியானது ரேடியோ சைகையை ________ ஆக மாற்றுகிறது.

  (a)

  ஒலி 

  (b)

  இயந்திர ஆற்றல் 

  (c)

  இயக்க ஆற்றல் 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 14. FM ஒலிபரப்புகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிர்வெண் விலகல் 

  (a)

  75 kHz 

  (b)

  68 kHz 

  (c)

  80 kHz 

  (d)

  70 kHz 

 15. அணுக்களை ஒன்றுதிரட்டி நானோ பொருளை உருவாக்கும் முறை அழைக்கப்படுவது 

  (a)

  மேலிருந்து –கீழ் அணுகுமுறை 

  (b)

  கீழிலிருந்து –மேல் அணுகுமுறை

  (c)

  குறுக்கு கீழ் அணுகுமுறை 

  (d)

  மூலை  விட்ட அணுகுமுறை 

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  6 x 2 = 12
 17. மின்காப்பு புகுக்கப்படும் மின்தேக்கியின் மின்னோட்டம், மின்னழுத்த வேறுபாடு, மின்புலம் மற்றும் மின்தேக்குத்திறன், ஆற்றல் ஆகியவை மின்கலனில் இணைப்பு இருக்கும் போதும், துண்டிக்கப்பட்ட பின்பும் எவ்வாறு இருக்கும்?

 18. தாம்ஸன் விளைவு என்றால் என்ன?

 19. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

 20. பாயத்தொடர்பை பொருத்து ஒரு ஹென்றி வரையறு.

 21. மின்காந்த அலைகள் என்றால் என்ன?

 22. ஒளி எதிரொளிப்பின் விதிகளை க் கூறுக.

 23. ஒரு உலோகத்தின் ஒளிமின்  வெளியேற்று  ஆற்றல்  என்பதை  வரையறு. அதன்  அலகைத்  தருக.

 24. ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட புரட்டுகளுக்கான காரணம் என்ன?

 25. இயற்கையில் உள்ள 'நானோ' பொருட்களுக்கு ஏதேனும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  6 x 3 = 18
 27. கடத்தியின் உட்புறத்திலிருக்கும் அனைத்து புள்ளிகளிலும் மின்புலம் சுழியாகும். இக்கூற்று திண்மக் கடத்தி மற்றும் உள்ளீடற்ற கூடு வகைக் கடத்தி இரண்டிற்கும் பொருந்தும். மெய்ப்பிக்கவும்

 28. அலுமினியம் மற்றும் தாமிரமானது சமமான நிலமும், கண்டுபிடிக்கப்பட்ட மின்தடையானது சமமாகும். அதனுடைய ஆரங்களின் தகவானது 1:3, அதனுடைய மின்தடை எண்களின் தகவை கணக்கீடு.

 29. மின்னோட்டம் பாயும் முடிவிலா நீளம் கொண்ட நேர்க்கடத்தியால் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

 30. மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பிற்கான கோவையை பெறுக.

 31. மெல்லிய லென்ஸ் ஒன்றிற்கான சமன்பாட்டை வருவித்து, அதிலிருந்து உருப்பெருக்கத்திற்கான கோவையைப் பெறுக.

 32. m  நிறையுள்ள  துகளுடன்  தொடர்புடைய  டி  ப்ராய் அலைநீளத்திற்கான λ  சமன்பாட்டை  துகளின்  இயக்க  ஆற்றல்  K மூலம்  எழுதுக. 

 33. ஆல்பா சிதைவு நிகழ்வினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 34. GaAsP னால் உருவாக்கப்பட்ட LED லிருந்து வெளிப்படும் ஒளியின் அலைநீளத்தைக் கண்டுபிடி. இந்தக் குறைகடத்தியின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி 1.875 eV ஆகும். வெளிப்படும் ஒளியின் நிறத்தையும் குறிப்பிடுக. [h = 6.6 × 10-34 Js எனக் கொள்க]

 35. GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS  இன் சில பயன்பாடுகளை எழுதுக.

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

  2. ஏதேனும் இரு வகையான ரோபோக்களை பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக விளக்குக.

  1. ஐன்ஸ்டீன்  விளக்கத்தின்  உதவியுடன்  சோதனை  அடிப்படையில்  கண்டறியப்பட்ட ஒளிமின்  விளைவின்  கருத்துகளை  விளக்குக.

  2. கதிரியக்கச் செயல்பாடு 1 Ci என்றிருக்கும் ரேடியத்தின் (\(_{ 88 }^{ 226 }{ Ra }\)) நிறை ஏறக்குறைய 1 g எனக் காட்டுக. (T1/2=1600 ஆண்டுகள்)

  1. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

  2. ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடியால் செய்யப்பட்ட லென்ஸ் ஒன்றின் திறன் + 5.0 D இந்த லென்ஸ் ஒன்றில் மூழ்கவைக்கப்படும்போது குவியத்தூரம் 100 cm  கொண்ட விரிக்கும் லென்சாக மாறுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் n இன் மதிப்பு என்ன?

  1. 1 m நீள உலோக ஆரக்கம்பிகளைக் கொண்ட ஒரு மிதிவண்டிச் சக்கரம் புவிகாந்தப்புலத்தில் சுழலுகிறது. சக்கரத்தின் தளமானது புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறு 4X10-5T க்கு குத்தாக உள்ளது. ஆரக் கம்பிகளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை 31.4 mV எனில், சக்கரத்தின் சுற்றும் வீதத்தைக் கணக்கிடுக.

  2. பொது அச்சு கொண்ட இரு நீண்ட வரிச்சுருள்களுக்கிடையே பரிமாற்று மின்தூண்டல் எண்ணிற்கான கோவையை பெறுக.

  1. இரு பொருள்கள் ஒன்றோடொன்று தேய்க்கப்படும்போது அவை ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட 50 nC மின்னூட்டம் உருவாகின்றது. இம் மின்னூட்டத்தை உருவாவாக்க இடம்பெயரச் செய்ய வேண்டிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக

  2. 1500 W மின்திறன் உடைய மின் சூடேற்றியை ஒவ்வொரு நாளும் 45 நிமிடங்களுக்குப் பயன்படுத்தி நீர் கொதிக்க வைக்கப்படுகிறது. 1 யூனிட் மின்கட்டணம் Rs.3.25 எனில் ஒரு மாதத்திற்கு (30 days) செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Physics Half Yearly Model Question Paper )

Write your Comment