பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  2. வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்_____ 

    (a)

    2 x 108 Vm-1

    (b)

    3 x 108 Vm-1

    (c)

    2 x 108 Vm-1

    (d)

    2 x 104 Vm-1

  3. மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

    (a)

    1A

    (b)

    2A

    (c)

    3A

    (d)

    4A

  4. பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளில் ஒன்று நீக்கப்பட்டால் அதன் மொத்த மின்தடையானது __________ 

    (a)

    இரு மடங்களாக 

    (b)

    குறைதல் 

    (c)

    அதிகரித்தல் 

    (d)

    மாறாமல் 

  5. \(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.

    (a)

    -0.1 J

    (b)

    -0.8 J

    (c)

    0.1 J

    (d)

    0.8 J

  6. ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு_____ .

    (a)

    0.76 W

    (b)

    0.89 W

    (c)

    0.46 W

    (d)

    0.67 W

  7. ஒரு மின்மாற்றியின் சுருளிச்சுற்று (Armature) ன் சுழற்சி கோண திசைவேகம் இரண்டு மடங்கானால் தூண்டப்படும் மின்னியக்கு விசை ______ ஆகும்.

    (a)

    இருமடங்கு 

    (b)

    நான்கு மடங்கு 

    (c)

    மாறாது 

    (d)

    பாதியாகும் 

  8. \(\vec v = v\vec i\)என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y - அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.

    (a)

    –y திசையில்

    (b)

    –x திசையில்

    (c)

    +z திசையில்

    (d)

    –z திசையில்

  9. குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த அலை________ 

    (a)

    UV கதிர் 

    (b)

    x - கதிர்

    (c)

    γ - கதிர்

    (d)

    அகச்சிவப்பு

  10. காற்றில், ஒளியின் திசைவேகம் மற்றும் அலைநீளம் முறையே Va மற்றும் λa. இதே போன்று தண்ணீரில் Vw மற்றும் λw எனில், தண்ணீரின் ஒளிவிலகல் எண் என்ன?

    (a)

    \(\frac { { V }_{ w } }{ { V }_{ a } } \)

    (b)

    \(\frac { V_{ a } }{ { V }_{ w } } \)

    (c)

    \(\frac { { \lambda }_{ w } }{ { \lambda }_{ a } } \)

    (d)

    \(\frac { { V }_{ a }{ \lambda }_{ a } }{ { V }_{ w }{ \lambda }_{ w } } \)

  11. 520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ∴போட்டான்களை  வெளிவிடுகிறது. 460nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளிமூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015  ∴போட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும்  முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _________

    (a)

    1:00

    (b)

    1.02

    (c)

    1.5

    (d)

    0.98

  12. ஹைட்ரஜன் அணுவில் முதல் மூன்று சுற்றுப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்________.

    (a)

    1:2:3

    (b)

    2:4:6

    (c)

    1:4:9

    (d)

    1:3:5

  13. சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

    (a)

    விரவல்

    (b)

    மறு இணைப்பு 

    (c)

    ஒளி வோல்டா செயல்பாடு

    (d)

    ஊர்தியின் பாய்வு

  14. ஒரு தகவல்தொடர்பு அமைப்பில், சைகையானது இரைச்சலால் பாதிக்கப்படுவது____ 

    (a)

    பரப்பியல் 

    (b)

    பண்பேற்றியல் 

    (c)

    வழித்தடத்தில் 

    (d)

    ஏற்பியல் 

  15. ஈர்ப்பு அலைகளை  கருத்தியலாக முன்மொழிந்தவர் ______.

    (a)

    கான்ராட்  ரோன்ட்ஜென் 

    (b)

    மேரி கியூரி

    (c)

    ஆல்பர்ட்  ஐன்ஸ்டீன் 

    (d)

    எட்வார்டு பர்செல்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. விடுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன் என்றால் என்ன? அவை எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன ?

  18. ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?

  19. மின் சுற்றில் உருவாக்கப்படும் வெப்பத்தை பாதிக்கும் காரணிகள் எவை?

  20. வட்ட வரிச்சுருள் என்றல் என்ன?

  21. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  22. ஐசோடோப்புகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு ஒன்று தருக.

  23. பின்வரும் லாஜிக் கேட்டுகளில் மின்சுற்று குறியீடு, லாஜிக்செயல்பாடு, உண்மை அட்டவணை மற்றும் பூலியன் சமன்பாடுகளை தருக.
    i) AND கேட்டு
    ii) OR கேட் டு
    iii) NOT கேட்டு
    iv) NAND கேட்டு
    v) NOR கேட்டு மற்றும்
    vi) EX-OR கேட்டு

  24. பரப்புகை இழப்புகளுக்குப் பொறுப்பான காரணிகளைக் கூறுக.

  25. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழிநுட்பம் வேறுபடுத்துக?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின் கோவையைப் பெறுக.

  28. ஏன் கடத்திகளுக்கான மின்தடை வெப்பநிலை எண் ∝ மேற்குறியுடையது?

  29. ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு, மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க.

  30. மின் மற்றும் இயந்திர அளவுகளுக்கிடையேயான ஒப்புமைகளைக் கூறு. 

  31. மின்காந்த அலைகளின் மூலங்களைப் பற்றி விளக்கவும்.

  32. ஹைட்ரஜன் அணுவின் 5வது சுற்றுப்பாதையின்
    (i) கோண உந்தம் மற்றும்
    (ii) அதிலுள்ள எலக்ட்ரானின் திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிடுக.
    (h = 6.6 × 10–34 Js, m = 9.1 × 10–31 kg)

  33. பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டரின் நிலை சிறப்பியல்புகளை வரைந்து உள்ளீடு மற்றும் வெளியீடு சிறப்பியல்புகளின் முக்கியமான கருத்துகளைத் தருக.

  34. ஒரு பரப்பும் விண்ணலைக்கம்பியின் உயரம் 40m மற்றும் ஏற்கும் விண்ணலைக்கம்பி 30m உயரம் உள்ளது. அவற்றிற்கிடையே நேர்க்கோட்டு பார்வை தகவல்தொடர்பிற்கான பெருமத்தொலைவு யாது? புவியின் ஆரம் 6.4×106 m.

  35. எந்திரவியலின் ஏதேனும் இரு நன்மைகள் மற்றும் தீமைகளைக் குறிப்பிடுக?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 μH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 μF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன?

    2. தரப்பட்டுள்ள மின்சுற்றில் இரண்டு நல்லியல்பு டையோடுகள் படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. மின்தடை R1 வழியே பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.

    1. காந்தத்திருப்புத்திறன் \(\vec { { p }_{ m } } \) கொண்ட சட்ட காந்தமொன்று நான்கு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதாவது முதலில் காந்தத்தின் அச்சைப்பொறுத்து இரண்டு துண்டுகளாகவும் பின்பு ஒவ்வொரு துண்டும், மேலும் இரண்டு துண்டுகளாகவும் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு துண்டின் காந்தத்திருப்புத்திறனையும் காண்க.

    2. எலக்ட்ரானின் அலை  இயல்பினை  விவரிக்கும்  டேவிசன் -ஜெர்மர்  சோதனையை  சுருக்கமாக  விவரி.

    1. படத்தில் உள்ள வீஸ்ட்டோன் சமனச்சுற்றை சமநிலைப்படுத்த வேடனும். 15ᘯ உடன் இணைக்கப்பட வேடனா கூடுதல் மின்தடையை தீர்மானி 

    2. சோடிய ஆவி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியின்  அலைநீளம் வெற்றிடத்தில் 5893Å. இந்த ஒளி 1.33 ஒளிவில்கல் எண் கொண்ட நீரின் வழியே செல்லும்போது பினவருவனவற்றைக் காண்க.
      (அ) அலைநீளம்,
      (ஆ) திசைவேகம் மற்றும்
      (இ) அதிர்வெண்

    1. பின்வரும் மின்சுற்றில்,

      (i) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் மின்னியக்கு விசை
      (ii) இணைப்பு தொகுப்பின் தொகுபயன் அகமின்தடை
      (iii) மொத்த மின்னோட்டம்
      (iv) புறமின்தடையாக்கியின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு
      (v) ஒவ்வொரு மின்கலத்தின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றை கண்டுபிடி.

    2. (அ) ஹைட்ரஜன் அணு ஒன்று அலை நீளம் 97.5 nm கொண்ட கதிர்வீச்சினால் கிளர்வுற செய்யப்படுகிறது. அக்கிளர்வு நிலையின் முதன்மைக் குவாண்டம் எண்ணைக் கணக்கிடுக.
      (ஆ) வெளிவிடு நிறமாலையில் வரிகளின் மொத்த எண்ணிக்கை \(\frac { n(n-1) }{ 2 } \) என்று காட்டுக. மேலும் வெளிவிடு நிறமாலையில் சாத்தியமாகும் வரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

    1. ஒரு மின் அனுப்பீட்டில் 2300v உள்ளீடு திறன் இறக்கு மின்மாற்றியைக் கொண்டு பெறப்படுகிறது. அதன் முதன்மை சுற்றுகள் 4000 சுற்றுகள் எனில் வெளியீடு திறன் 230v க்கு துணைச்சுருள் சுற்றுகள் என்ன?

    2. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று மின்னேற்றம் அடையும் பொழுது ஆம்பியர் சுற்று விதியின் இடப்பெயர்ச்சி மின்னூட்டம் விதியில் சேருவதற்கான வழிமுறையை எழுக

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Physics - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment