இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    16 x 1 = 16
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  3. சீம்பாலில் அதிகம் காணப்படுவது _____.

    (a)

    IgE

    (b)

    IgA

    (c)

    IgD

    (d)

    IgM

  4. இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?

    (a)

    Y - குரோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (b)

    Y - குரோமோசோமில் ஒங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (c)

    X - குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

    (d)

    X  - குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

  5. கிளைன் ஃபெல்டர்சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

    (a)

    XYY

    (b)

    XO

    (c)

    XXX

    (d)

    XXY

  6. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?

    (a)

    இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல்

    (c)

    நகலாக்கம்

    (d)

    மொழிபெயர்த்தல்

  7. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.

    (a)

    காற்றில்

    (b)

    நிலத்தில்

    (c)

    நீரில்

    (d)

    மலைப்பகுதியில்

  8. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் ______.

    (a)

    இரத்த சிவப்பணு

    (b)

    லியூக்கோசைட்டுகள்

    (c)

    இரைப்பை

    (d)

    கல்லீரல்

  9. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது ______.

    (a)

    பாக்டீரியா

    (b)

    பூஞ்சை

    (c)

    வைரஸ்

    (d)

    புரோட்டோசோவா

  10. உடனடி வினைக்கு காரணமாக இருப்பது

    (a)

    ஒவ்வாமை எதிர்வினை

    (b)

    நச்சுகளின் சுரப்பு

    (c)

    ஹிஸ்டமைன்களின் சுரப்பு

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  11. புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர் ____.

    (a)

    S.R. காஷ்யப்

    (b)

    P. மகேஸ்வரி

    (c)

    M.S. சுவாமிநாதன்

    (d)

    K.C. மேத்தா

  12. ‘X’ எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச்சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?

    (a)

    நீர்

    (b)

    காற்று

    (c)

    பட்டாம்பூச்சி

    (d)

    வண்டுகள்

  13. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத் தோற்றத்தினைத் தோற்றுவிக்குமேயானால் அது

    (a)

    பிற்கலப்பு

    (b)

    சோதனைக் கலப்பு

    (c)

    இருபண்புக் கலப்பு

    (d)

    சந்ததி வழித்தொடர் ஆய்வு

  14. ஒரு மரபணு மற்றொரு மரபணுக்களை மறைக்கும் செயல் ஆனால் ஒத்த அமைவிடத்தல் காணப்படாமைக்கு

    (a)

    மறைக்கப்பட்ட  

    (b)

    நிரப்பி மட்டும்

    (c)

    மறைக்கப்படும்

    (d)

    இணை ஓங்கு

  15. மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக , பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.

    (a)

    50:50

    (b)

    7 :1: 1:7

    (c)

    96.4: 3.6

    (d)

    1 :7 :7 :1

  16. E.CORI, DNA வை துண்டிக்குமிடம் ____.

    (a)

    AGGGTT

    (b)

    GTATATC

    (c)

    GAATTC

    (d)

    TATAGC

  17. 8 x 2 = 16
  18. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  19. ஹோலாண்டிரிக் மரபணுக்கள் யாவை?

  20. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  21. முழுமை பெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக

  22. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது?

  23. நகல்கள் என்றால் என்ன?

  24. மரபியல் - வரையறு.

  25. சூழ்நிலையியல் - வரையறு 

  26. 6 x 3 = 18
  27. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  28. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  29. டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?

  30. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

  31. விதைப் பந்து என்றால் என்ன?

  32. கலப்புறுத்த முறையின் பல்வேறு வகைகளை எழுதுக.

  33. 4 x 5 = 20
  34. கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  35. காலா-அசார் என்றால் என்ன?

  36. நகலாக்கத்தில் சாதக,பாதகங்களை குறிப்பிடுக.

  37. தகுந்த படத்துடன் சூலின் அமைப்பை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Biology - Term II Model Question Paper )

Write your Comment