விலங்கியல் - பரிணாமம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    25 x 1 = 25
  1. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.

    (a)

    காற்றில்

    (b)

    நிலத்தில்

    (c)

    நீரில்

    (d)

    மலைப்பகுதியில்

  2. 'இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம்' என்ற நூலை வெளியிட்டவர் ______.

    (a)

    சார்லஸ் டார்வின்

    (b)

    லாமார்க்

    (c)

    வீஸ்மான்

    (d)

    ஹியூகோ டி விரிஸ்

  3. கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு?

    (a)

    திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு

    (b)

    இயற்கைத் தேர்வுக் கோட்பாடு

    (c)

    முயன்று பெற்றபண்பு மரபுப்பண்பாதல் கோட்பாடு

    (d)

    வளர்கரு பிளாசக் கோட்பாடு

  4. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    (a)

    பரவல் முறை தகவமைப்பு

    (b)

    குவி பரிணாமம்

    (c)

    விரி பரிணாமம்

    (d)

    மாறுபாடுகள்

  5. 'தொழிற்சாலை மெலானிக்கம்' என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது?

    (a)

    இயற்கைத் தேர்வு

    (b)

    தூண்டப்பட்ட தீடீர்மாற்றம்

    (c)

    இனப்பெருக்கத் தனிமைப்படுத்துதல்

    (d)

    புவியியல் தனிமைப்படுத்துதல்.

  6. வளர்கரு பி்ளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

    (a)

    டார்வின்

    (b)

    ஆகஸ்ட் வீஸ்மேன்

    (c)

    லாமார்க்

    (d)

    ஆல்ஃப்ரட் வாலாஸ்

  7. புதைப்படிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது?

    (a)

    வெப்பப் பாறைகள்

    (b)

    உருமாறும் பாறைகள்

    (c)

    எரிமலைப் பாறைகள்

    (d)

    படிவுப் பாறைகள்

  8. ஊர்வன இனத்தின் பொற்காலம்

    (a)

    மீசோசோயிக் பெருங்காலம்

    (b)

    சீனோசோயிக் பெருங்காலம்

    (c)

    பேலியோசோயிக் பெருங்காலம்

    (d)

    புரோட்டிரோசோயிக் பெருங்காலம்

  9. எந்தக் காலம் ‘மீன்களின் காலம்’ என அழைக்கப்படுகிறது?

    (a)

    பெர்மியன்

    (b)

    டிரையாசிக்

    (c)

    டிவோனியன்

    (d)

    ஆர்டோவிசியன்

  10. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு _____.

    (a)

    650 - 800 க.செ.மீ

    (b)

    1200 க.செ.மீ

    (c)

    900 க.செ.மீ

    (d)

    1400 க.செ.மீ

  11. டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம் ______.

    (a)

    சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்

    (b)

    ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்

    (c)

    நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி

    (d)

    இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்

  12. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது?

    (a)

    உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது

    (b)

    திடீர்மாற்றம் இல்லாத நிலையில் 

    (c)

    வலசை போதல் இல்லாத நிலையில்

    (d)

    இனக்கூட்டத்தின் அளவு பெரியதாக இருந்தால்.

  13. உயிர்வழித் தோற்றக் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?

    (a)

    தாமஸ் ஹக்சிலி 

    (b)

    ஹென்றி பாஸ்டியன் 

    (c)

    ஒப்பாரின் 

    (d)

    ஹால்டேன் 

  14. சரியான கூற்றைக் கண்டறி 

    (a)

    பூனையின் கால்களும் திமிங்கலத்தின் துடுப்புகளும் அமைப்பொத்த உறுப்புகள் ஆகும்.

    (b)

    பறவைகளின் இறக்கைகளும் பூச்சிகளின் இறக்கைகளும் தகவமைப்புப் பரவலுக்கு உதாரணமாகும்.

    (c)

    குழந்தைகளில் வால் ஒரு எச்ச உறுப்பாகும்.

    (d)

    நிக்டேட்டிங் சவ்வு ஒரு முது மரபு உறுப்புகள் மீட்சிக்கு உதாரணம் ஆகும்.

  15. இது ஒரு எச்ச உறுப்பு அல்ல?

    (a)

    வால் முள்ளெலும்பு 

    (b)

    அறிவுப் பற்கள் 

    (c)

    ஆண்களின் மார்பகம் 

    (d)

    மனிதக் கருவிலுள்ள வால் 

  16. பரிமாணத்தை பற்றி அறிய உதவுவது 

    (a)

    DNA 

    (b)

    rRNA 

    (c)

    சைட்டோகுரோம் 

    (d)

    அனைத்தும் 

  17. இவர்கள் புதிய லாமார்க்கியன்கள் அல்லர்  

    (a)

    ஹெயின்ரிச் 

    (b)

    கோப் 

    (c)

    அஸ்பார்ன் 

    (d)

    அனைத்தும் 

  18. இவர்கள் புதிய லாமார்க்கியன்கள் அல்லர் 

    (a)

    வாலஸ் 

    (b)

    வீஸ்மேன் 

    (c)

    ஹெக்கல் 

    (d)

    ஸ்பென்சர் 

  19. இவரின் டார்வீனின் கருத்துகளில் இயற்கைத் தேர்வு கருத்துக்கள் கண்டறியப்படவில்லை 

    (a)

    பிஷர் 

    (b)

    மேயர் 

    (c)

    ஹக்ஸ்லே 

    (d)

    வாலஸ் 

  20. காலாபாகஸ் தீவுகளில் காணப்பட்ட டார்வீனின் குருவிகளின் அலகின் அளவும் விதைகளின் அளவும் ________ தேர்விற்கு உதாரணம் ஆகும்.

    (a)

    நிலைப்படுத்துதல் 

    (b)

    இலக்கு நோக்கிய 

    (c)

    உடைப்பு முறை 

    (d)

    தொகுப்பு முறை 

  21. ________ டிரையோத்திகஸிலிருந்து பரிணாமம் பெற்றது.

    (a)

    ராமாபித்திகஸ் 

    (b)

    சிவாபித்திகஸ் 

    (c)

    இரண்டும் 

    (d)

    ஒன்றுமில்லை 

  22. மீன்களின் காலம் 

    (a)

    டிவோனியன் 

    (b)

    மிச்சிப்பியன் 

    (c)

    கேம்பிரியன் 

    (d)

    ஆர்டோவிசியன் 

  23. மனித குரங்குகளிருந்து மனித தோன்றிய காலம் 

    (a)

    பிளியோசீன் 

    (b)

    மியோசீன் 

    (c)

    ஒலிகோசீன் 

    (d)

    பேலியோசீன் 

  24. _______ பெருங்காலம் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது 

    (a)

    பேலியோசோயிக் 

    (b)

    மீசோசோயிக் 

    (c)

    சீனோசோயிக் 

    (d)

    முன்கேம்பிரியன் 

  25. பாலூட்டிகளின் சிறு காலம் ________ 

    (a)

    மீயோசீன் 

    (b)

    பிளியோசீன் 

    (c)

    பிளிஸ்டோசீன் 

    (d)

    ஹோலோசீன் 

*****************************************

Reviews & Comments about 12th Standard விலங்கியல் - பரிணாமம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Biology Zoology - Evolution One Marks Question And Answer )

Write your Comment