வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

    (a)

    முழுவேலை வாய்ப்பு

    (b)

    குறைந்தளவு வேலைவாய்ப்பு

    (c)

    வேலைவாய்ப்பினை

    (d)

    வேலைக்கான வாய்ப்பு

  2. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  3. மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

    (a)

    சுழியம்

    (b)

    ஒன்று

    (c)

    இரண்டு

    (d)

    நேர்மறை

  4.  தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் முதன்மையான இயல்பு _________

    (a)

    குறைந்த அளவு வேலைவாய்ப்பு

    (b)

    பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.

    (c)

    தேவை அதன் அளிப்பை உருவாகின்றது

    (d)

    நிறை குறை போட்டி

  5. J.P சே ஒரு ________

    (a)

    புதிய-தொன்மை பொருளியலாளர்

    (b)

    தொன்மை பொருளியலாளர்

    (c)

    நவீன பொருளியலாளர்

    (d)

    புதிய பொருளியலாளர்

  6. தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

    (a)

    சமநிலை வரவு செலவு

    (b)

    சமமற்ற வரவு செலவு

    (c)

    உபரி வரவு செலவு

    (d)

    பற்றாக்குறை வரவு செலவு

  7. _________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.

    (a)

    மிகக்குறுகிய காலச்

    (b)

    குறுகிய காலச்

    (c)

    மிக நீண்ட காலச்

    (d)

    நீண்ட காலச்

  8.  தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம் _______________ க்கான வெகுமதி

    (a)

    முதலீடு

    (b)

    தேவை

    (c)

    மூலதனம்

    (d)

    சேமிப்பு

  9. கீன்சின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது_________ ஆகும்.

    (a)

    வட்டி வீதம்

    (b)

    விளைவுத் தேவை

    (c)

    தொகுத் தேவை

    (d)

    தொகு அளிப்பு

  10. ஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.

    (a)

    தூண்டப்பட்ட விலைக் கருவி

    (b)

    தானியங்கும் விலைக் கருவி

    (c)

    தூண்டப்பட்ட தேவை

    (d)

    தூண்டப்பட்ட முதலீடு

  11. 5 x 2 = 10
  12. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  13. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.

  14. 'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.

  15. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  16. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  17. 5 x 3 = 15
  18. J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக

  19. கீன்சின் கோட்பாட்டை விளக்குக.

  20. தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக

  21. தொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக

  22. தொன்மையியத்தையும் கீன்சியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

  23. 3 x 5 = 15
  24. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  25. ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  26. தொன்மைக் கோட்பாடு, கீன்சு கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் Chapter 3 வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 3 Introduction To Macro Economics Important Questions )

Write your Comment