இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

    (a)

    1915

    (b)

    1916

    (c)

    1917

    (d)

    1918

  2. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    வில்லியம் ஜோன்ஸ்

    (b)

    சார்லஸ் வில்கின்ஸ்

    (c)

    மாக்ஸ் முல்லர்

    (d)

    அரவிந்த கோஷ்

  3. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843

    (b)

    அடிமைமுறை ஒழிப்பு - 1859

    (c)

    சென்னைவாசிகள் சங்கம் - 1852

    (d)

    இண்டிகோ கலகம் - 1835

  4. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  5. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.

    (a)

    சுரேந்திரநாத் பானர்ஜி

    (b)

    பத்ருதீன் தியாப்ஜி

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    W.C. பானர்ஜி

  6. “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    கோபால கிருஷ்ண கோகலே

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    எம்.ஜி. ரானடே

  7. கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
    காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

  8. காந்தியின் அரசியல் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஜின்னா

    (b)

    நேரு

    (c)

    கோகலே

    (d)

    சுபாஷ்

  9. கிழக்கு இந்திய கம்பெனி எப்போது தொடங்கப்பட்டது?

    (a)

    1600

    (b)

    1605

    (c)

    1615

    (d)

    1639

  10. ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை முதலில் எந்த நாட்டின் இருந்து தொடங்கப்பட்டது?

    (a)

    இங்கிலாந்து

    (b)

    இந்தியா

    (c)

    இலங்கை

    (d)

    ஜப்பான்

  11. 5 x 2 = 10
  12. தேசியம் என்றால் என்ன?

  13. அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.

  14. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  15. ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?

  16. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

  17. 5 x 3 = 15
  18. மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.

  19. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

  20. மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

  21. தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.

  22. இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.

  23. 3 x 5 = 15
  24. இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.

  25. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  26. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

  27. 1 x 10 = 10
  28. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. பம்பாய்
    2. கல்கத்தா
    3. சென்னை
    4. அகமதாபாத்
    5. லக்னோ
    6. கான்பூர்
    7. சூரத்
    8. லாகூர்
    9. பூனா
    10. அலகாபாத்

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Rise of Nationalism in India Model Question Paper )

Write your Comment