" /> -->

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  (a)

  −190 V

  (b)

  −10 V

  (c)

  10 V

  (d)

  190 V

 2. ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

  (a)

  2 A

  (b)

  18 A

  (c)

  12 A

  (d)

  1 A

 3. ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  (a)

  1/2

  (b)

  1/\(\sqrt2\)

  (c)

  1

  (d)

  \(\sqrt3\)/2

 4. ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

  (a)

  600 V

  (b)

  4000 V

  (c)

  400 V

  (d)

  1 V

 5. ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)

  (a)

  \(\frac 14\)

  (b)

  \(\frac {\sqrt 3}4\)

  (c)

  \(\frac 12\)

  (d)

  \(\frac 18\)

 6. \(\frac {20}{ \pi^ 2 }\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது

  (a)

  50 μF

  (b)

  0.5 μF

  (c)

  500 μF

  (d)

  5 μF

 7. கம்பிச்சுருளுக்குள் காந்தம் இயங்கும் போது சுருளின் மின்னோட்டம் _____________________

  (a)

  அதிகரிக்கும் 

  (b)

  குறையும் 

  (c)

  மாறாது 

  (d)

  சுழி 

 8. மின்னியக்கு விசை என்றால் என்ன?

  (a)

  விசை 

  (b)

  மின்னழுத்தம் 

  (c)

  மின்னோட்டம் 

  (d)

  பாயம்

 9. மாறுதிசை மின்னோட்டம் பயன்படாதது _________________

  (a)

  வெப்பமூட்டி 

  (b)

  பல்பு 

  (c)

  காந்தமாக்கல் மற்றும் மின்முலாம் பூசுதல்

  (d)

  அனைத்தும் 

 10. ஒரு AC சுற்றில் மாறுதிசை மின்னழுத்தம் v = 200 \(\sqrt { 2 } \) sin 100t ஆனது 1μF மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டால் Irms  மதிப்பு ___________________

  (a)

  10 mA

  (b)

  100mA

  (c)

  200mA

  (d)

  20mA

 11. 5 x 1 = 5
 12. RLC சுற்றின் ஒத்திசைவுக்கான நிபந்தனை ______________________

  ()

  XL = XC

 13. மின்மாற்றியின் பயனுறு திறன் வரம்பு  ______________________

  ()

  96 - 99%

 14. மின்தேக்கியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ______________________

  ()

  VE = Qm2 / 2C

 15. மின்தூண்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் ___________________ 

  ()

  VB = Li2 / 2

 16. தொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாடுகளின் பெருக்கம் _____________________ ஆல் குறிக்கப்படும்.

  ()

  Q காரணி 

 17. 10 x 2 = 20
 18. மின்காந்தத்தூண்டல் என்றால் என்ன ?

 19. லென்ஸ் விதியைக் கூறுக

 20. தூண்டப்பட்ட மின்னியக்கு விசையை உருவாக்கும் வழிகளைக் கூறுக.

 21. தன் மின்தூண்டல் என்றால் என்ன?

 22. பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?

 23. AC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப் பட்டியலிடுக.

 24. ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பை வரையறு

 25. மின் ஒத்ததிர்வு – வரையறு

 26. Q – காரணி – வரையறு

 27. திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.

 28. 5 x 3 = 15
 29. லென்ஸ் விதியைப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை கண்டறிவதை விளக்குக.

 30. பாரடே மின்காந்தத்தூண்டல் விதியிலிருந்து இயக்க மின்னியக்குவிசையின் சமன்பாட்டைத் தருவி.

 31. போகால்ட் மின்னோட்டத்தின் பயன்களைத் தருக

 32. ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன் இயற்பியல் முக்கியத்துவம் யாது?

 33. மின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்குக.

 34. 2 x 5 = 10
 35. 600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது
  (i) புலத்திற்கு குத்தாக
  (ii) புலத்திற்கு இணையாக மற்றும்
  (iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக

 36. ஒரு தொடர் RLC சுற்றில், திறன் காரணி எப்போது பெருமமாகும் ?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - Electromagnetic Induction And Alternating Current Model Question Paper )

Write your Comment