மின்காந்த அலைகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம் ______.

    (a)

    [L T−1]

    (b)

    [L2 T-2]

    (c)

    [L−1 T]

    (d)

    [L-2 T2]

  2. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

    (a)

    மைக்ரோ அலை

    (b)

    காமாக்கதிர் வீச்சு

    (c)

    X -கதிர்கள்

    (d)

    அகச்சிவப்புக்கதிர்கள்

  3. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம் 

    (a)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { k } \)

    (b)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { k } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

    (c)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

    (d)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { i } \)

  4. \(\vec v = v\vec i\)என்ற திசைவேகத்துடன் மின்காந்த அலை ஒரு ஊடகத்தில் பரவுகின்றது. இவ்வலையின் மாறுதிசை மின்புலம் +y-அச்சின் திசையில் இருந்தால், அதன் மாறுதிசை காந்தப்புலம் _________ இருக்கும்.

    (a)

    –y திசையில்

    (b)

    –x திசையில்

    (c)

    +z திசையில்

    (d)

    –z திசையில்

  5. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

    (a)

    α - கதிர்கள்

    (b)

    β - கதிர்கள்

    (c)

    \(\gamma\) - கதிர்கள்

    (d)

    இவை அனைத்தும்

  6. 3 x 2 = 6
  7. இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?

  8. மின்காந்த அலைகள் என்றால் என்ன?

  9. சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. 200 V மின்னழுத்த வேறுபாட்டிலுள்ள இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளைக் கருதுக. தகடுகளுக்கு இடைப்பட்டத் தொலைவு மற்றும் தகடுகளின் பரப்பு முறையே 1 mm மற்றும் 20 cm2 எனில், மைக்ரோவினாடியில் (μs) பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் காண்க.

  12. மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

  13. மின்காந்த அலையை தோற்றுவிக்கும் மற்றும் கண்டறியும் ஹெர்ட்ஸ் ஆய்வினை சுருக்கமாக விவரி.

  14. 2 x 5 = 10
  15. 10-6s நேர அளவு கொண்ட ஒளித்துடிப்பு ஒன்று தொடக்கத்தில் ஒய்வு நிலையில் உள்ள சிறிய பொருளினால் முழுவதும் உட்கவரப்படுகிறது. ஒளித்துடிப்பின் திறன் 60 x 10-3 W எனில், அச்சிறிய பொருளின் இறுதி உந்தத்தைக் கணக்கிடுக.

  16. x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10-5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard இயற்பியல் மின்காந்த அலைகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Electromagnetic Waves Model Question Paper )

Write your Comment