நிலைமின்னியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

    (a)

    A1 மற்றும் A2

    (b)

    B1 மற்றும் B2

    (c)

    இரு திசைகளிலும் 

    (d)

    சமநிலையில் இருக்காது 

  2. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?

    (a)

    புள்ளி மின்துகள் 

    (b)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி 

    (c)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

    (d)

    சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு 

  3. மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியன் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

    (a)

    D < C < B < A

    (b)

    A < B = C < D

    (c)

    C < A = B < D

    (d)

    D > C > B > A

  4. A மற்றும் B ஆகிய இரு புள்ளிகள் முறையே 7 V மற்றும் -4 V மின்னழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்தச் செய்யப்படும் வேலை _________.

    (a)

    8.80 × 10-17 J

    (b)

    -8.80 × 10-17 J

    (c)

    4.40 × 10-17 J

    (d)

    5.80 × 10-17 J

  5. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

    (a)

    மின் தேக்குத்திறன்

    (b)

    மின்துகள்

    (c)

    மின்னழுத்த வேறுபாடு

    (d)

    ஆற்றல் அடர்த்தி

  6. 4 x 2 = 8
  7. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

  8. மின்புலம் – வரையறு.

  9. நிலை மின்னழுத்தம் – வரையறு.

  10. மின்பாயம் – வரையறு.

  11. 4 x 3 = 12
  12. ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

  13. உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும் கொண்ட பொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

  14. கூலூம் விதி மற்றும் அதன் பல்வேறு தன்மைகள் குறித்து விரிவாகக் கூறுக.

  15. கூலூம் விதியிலிருந்து காஸ் விதியைப் பெறுக

  16. 1 x 5 = 5
  17. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 5 cm பக்கம் கொண்ட இரு சதுரக் தட்டுகளை 1mm இடைவெளியில் கொண்டுள்ளது.
    (அ) மின்தேக்கியின் மின்தேக்குதுத்திறனைக் கணக்கிடு.
    (ஆ) 10 V மின்கலம் ஒன்றை அதனுடன் இணைத்தால், ஒரு தட்டில் சேமிக்கப்படும் மின்துகள்களின், மின்னூட்ட மதிப்பைக் கணக்கிடுக.(\({ \varepsilon }_{ 0 }\) = 8.85 x 10-12N-1m-2C2)

*****************************************

Reviews & Comments about 12th Standard இயற்பியல் - நிலைமின்னியல் Book Back Questions ( 12th Standard Physics - Electrostatics Book Back Questions )

Write your Comment