முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

    (a)

    A1 மற்றும் A2

    (b)

    B1 மற்றும் B2

    (c)

    இரு திசைகளிலும் 

    (d)

    சமநிலையில் இருக்காது 

  2. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

    (a)

    Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

    (b)

    Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

    (c)

    C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

    (d)

    Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

  3. q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை ______.

    (a)

    முன்பை விடக் குறைவாக இருக்கும் 

    (b)

    அதேயளவு இருக்கும் 

    (c)

    முன்பை விட அதிகமாக இருக்கும் 

    (d)

    சுழி 

  4. பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

    (a)

    1.5 Ω

    (b)

    2.5 Ω

    (c)

    3.5 Ω

    (d)

    4.5 Ω

  5. சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

    (a)

    வட்ட வடிவம்

    (b)

    அரைவட்ட வடிவம்

    (c)

    சதுர வடிவம்

    (d)

    இவை அனைத்தும்

  6. 5 x 2 = 10
  7. மின்புலக் கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது நிறுவுக.

  8. புள்ளி மின் துகளின் தொகுப்பிற்கான மின் இருமுனை திருப்புத்திறனின் பொதுவான வரையறை தருக.

  9. மின்னழுத்தமானியின் தத்துவத்தை கூறு.

  10. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?

  11. பயட் –சாவர்ட் விதியைக் கூறு

  12. 5 x 3 = 15
  13. ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

  14. பல்வேறு மின்துகள் அமைப்புகளுக்கான மின்புலக் கோடுகள் பின்வரும் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.


    (i) படம் (அ) வில் உள்ள q1 மற்றும் q2 ஆகிய இரு மின்துகள்களின் குறியீடுகளை அடை யாளம் கண்டு,\(\left| \frac { { q }_{ 1 } }{ { q }_{ 2 } } \right| \) ன் விகிதத்தைக் காண்க.
    (ii) படம் (ஆ) வில் உள்ள இரு நே ர் மின்துகள்களின் மின்னூட்ட விகிதத்தைக் கணக்கிடுக. மேலும் A, B, C ஆகிய புள்ளிகளில் மின்புலத்தின் வலிமையைக் கணக்கிடுக.
    (iii) படம் (இ) ல் மூன்று மின்துகள்களின் மின்புலக் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. q2 = - 20 nC எனில், q1 மற்றும் q3 ன் மின்னூட்ட மதிப்புகளைக் கணக்கிடுக.

  15. பின்வரும் மின்சுற்றில் தொகுபயன் மின்தடையைக் காண்க. மேலும் I, I1 மற்றும் I2 ஆகிய மின்னோட்டங்களையும் கண்டுபிடி.

  16. 100 சுற்றுகள் கொண்ட டேஞ்சன்ட் கால்வனோ  மீ்ட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் விட்டம் 0.24m. புவிகாந்தப்புலத்தின் கிடைத்தள கூறின் மதிப்பு 25 × 10-6 T என்ற நிலையில், 60˚ விலக்கத்தை ஏற்படுத்தும் மின்னோட்டதைக் கணக்கிடுக.

  17. கால்வனோமீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும் வோல்ட்மீட்டராக எவ்வாறு மாற்றுவது என்பதை விவரிக்கவும்.

  18. 4 x 5 = 20
  19. படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன.
    (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு.
    (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும் போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

  20. 20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும்? (Fused)

  21. 0.8 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் சட்ட காந்தமானது வைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தம் காந்தப்புலத்துடன் 30˚ கோணத்தை ஏற்படுத்தும்படி ஒருங்கமைந்து, 0.2 Nm திருப்புவிசையை உணர்கிறதெனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
    (i) சட்ட காந்தத்தின் காந்தத்திருப்புத்திறன்
    (ii) மிகவும் உறுதியான ஒருங்கமைப்பில் (Most stable configuration) இருந்து மிகவும் உறுதியற்ற (Most unstable configuration) ஒருங்கமைப்பிற்கு சட்ட காந்தத்தை நகர்த்துவதற்கு அளிக்கப்படும் விசையினால் செய்யப்பட்ட வேலை மற்றும் செலுத்தப்படும் காந்தப்புலத்தால் செய்யப்படும் வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக

  22. ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cos θ1 - cos θ2) என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard இயற்பியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics First Mid Term Model Question Paper )

Write your Comment