Important Question Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:40:00 Hrs
Total Marks : 200

    Section - A

    33 x 1 = 33
  1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

    (a)

    1915

    (b)

    1916

    (c)

    1917

    (d)

    1918

  2. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

    (a)

    1825

    (b)

    1835

    (c)

    1845

    (d)

    1855

  3. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    வில்லியம் ஜோன்ஸ்

    (b)

    சார்லஸ் வில்கின்ஸ்

    (c)

    மாக்ஸ் முல்லர்

    (d)

    அரவிந்த கோஷ்

  4. "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    சுபாஷ் சந்திர போஸ்

    (d)

    பாரதியார்

  5. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) பாலகங்காதர திலகர்  1. இந்தியாவின் குரல்
    (ஆ) தாதாபாய் நெளரோஜி 2. மெட்ராஸ் டைம்ஸ்
    (இ) மெக்காலே 3. கேசரி
    (ஈ) வில்லியம் டிக்பை 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
    (a)
    D
    2 4 1 3
    (b)
    D
    3 1 4 2
    (c)
    D
    1 3 2 4
    (d)
    D
    4 2 3 1
  6. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843

    (b)

    அடிமைமுறை ஒழிப்பு - 1859

    (c)

    சென்னைவாசிகள் சங்கம் - 1852

    (d)

    இண்டிகோ கலகம் - 1835

  7. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  8. “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    M.K. காந்தி

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  9. “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    கோபால கிருஷ்ண கோகலே

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    எம்.ஜி. ரானடே

  10. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
    காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

    (a)

    கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று காரணம் இரண்டும் தவறு

  11. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

    (a)

    1, 2

    (b)

    1, 3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  12. இந்தியாவில் ஆங்கிலம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது?

    (a)

    1935

    (b)

    1980

    (c)

    1835

    (d)

    1947

  13. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  14. "இந்திய தேசிய காங்கிரசின் தந்தை" என்று அழைக்கப்பட்டவர் யார் என்று கூறுக?

    (a)

    A.O ஹீயும்

    (b)

    காந்தி

    (c)

    அம்பேத்கர் 

    (d)

    ஜின்னா

  15. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

    (a)

    பி.பி.வாடியா

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    லாலா லஜபதிராய்

    (d)

    சி.ஆர்.தாஸ்

  16. 1905-இல் ஜப்பான் எந்த நாட்டை வீழ்த்தியது?

    (a)

    இந்தியா 

    (b)

    ரஷ்யா 

    (c)

    அமெரிக்கா 

    (d)

    இங்கிலாந்து 

  17. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

    (a)

    பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்

    (b)

    தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்

    (c)

    சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்

    (d)

    சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்

  18. 1929 டிசம்பர் 31 இல் எங்கு முதலில் தேசியக் கோடி ஏற்றப்பட்டது?

    (a)

    டெல்லி

    (b)

    மும்பை

    (c)

    லாகூர்

    (d)

    லக்னோ

  19. கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
    (i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
    (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
    (iii) இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைணைக்கு வந்தது.
    (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    (a)

    i,ii மற்றும் iii 

    (b)

    i,iii மற்றும் iv

    (c)

    i,iii மற்றும் iv 

    (d)

    i,ii மற்றும் iv 

  20. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?

    (a)

    1908

    (b)

    1907

    (c)

    1009

    (d)

    1911

  21. இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்________.

    (a)

    இராஜாஜி

    (b)

    ராம்சே மெக்டொனால்டு

    (c)

    முகமது இக்பால்

    (d)

    சர் வாசிர் ஹசன்

  22. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1922

  23. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

    (a)

    இரங்கூன்

    (b)

    மலேயா

    (c)

    இம்பால்

    (d)

    சிங்கப்பூர்

  24. முத்துதுறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?

    (a)

    சீனா

    (b)

    பங்காள தேசம்

    (c)

    இந்தியா

    (d)

    ஜப்பான்

  25. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

    (a)

    மார்ச் 22, 1949

    (b)

    ஜனவரி 26, 1946

    (c)

    டிசம்பர் 9, 1946

    (d)

    டிசம்பர் 13, 1946

  26. இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மை சிற்பி யார்?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    வல்லபாய் பட்டேல்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    B.R. அம்பேதகர்

  27. 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

    (a)

    5

    (b)

    7

    (c)

    6

    (d)

    225

  28. துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?

    (a)

    ஜியோவனி அவுரிஸ்பா

    (b)

    மேனுவல் கிரைசாலொரஸ்

    (c)

    ரோஜர் பேக்கன்

    (d)

    கொலம்பஸ்

  29. பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன்  மற்றும்  குடிமக்கள்  உரிமைகள்  பிரகடனம்  பெண்களைத்  தவிர்த்துவிட்டதால்  அதன் மேல்  ____ அதிருப்தி கொண்டிருந்தார்.

    (a)

    ஒலிம்பே  டி கோஜெஸ்

    (b)

    மேரி அன்டாய்னெட்

    (c)

    ரோஜெட் டி லிஸ்லி

    (d)

    ரோபஸ்பியர் 

  30. நெப்போலியன் போன பார்ட்டின் மருமகனான லூயி நெப்போலியன் சூடிக் கொண்ட பட்டம் _______  என்பதாகும்.

    (a)

    இரண்டாம் நெப்போலியன்

    (b)

    மூன்றாம் நெப்போலியன்

    (c)

    ஆர்லியன்ஸின் கோமகன்

    (d)

    நான்காம் நெப்போலியன்

  31. 1879ஆம் ஆண்டில் _______ கட்டண சட்டத்தை இயற்றியது.

    (a)

    ஜெர்மனி

    (b)

    பிரான்ஸ் 

    (c)

    பிரிட்டன் 

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடு  

  32. கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை?

    (a)

    ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்ததத்தின் நீதியற்ற தன்மை

    (b)

    பன்னாட்டு சங்கத்தின் தோல்வி

    (c)

    1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்

    (d)

    காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்

  33. கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான இணைகள் எது?

    ஜெனரல் டி கால் பிரான்ஸ் 
    ஹேல் செலாஸி எத்தியோப்பியா 
    ஜெனரல்  படோக்லியோ  ஜப்பான்
    அட்மிரல் யாம்மோடோ  இத்தாலி 
    (a)

    (1) மற்றும் (2)

    (b)

    (2) மற்றும் (3)

    (c)

    (3) மற்றும் (4)

    (d)

    அனைத்தும் 

  34. Section - B

    22 x 2 = 44
  35. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

  36. இந்தியாவின் பழம் பெருமையை பற்றி அரவிந்த கோஷ் கூறுவது யாது?

  37. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

  38. வங்கப் பிரிவினையில் கர்சனுடைய நோக்கம் யாது?

  39. 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரி?

  40. AITUC - பற்றி சுருக்கமாக எழுதுக?

  41. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

  42. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  43. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?

  44. M. சிங்காரவேலர் பற்றி எழுதுக.

  45. 1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.

  46. ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?

  47. கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

  48. மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.

  49. ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?

  50. இந்திய அரசியல் நிர்ணயசபை எப்படி உருவானது?

  51. இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.

  52. வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.

  53. பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.

  54. ஸோல்வரெயன் (Zollverein) எனப்படுவதன் முக்கியத்துவம்  யாது?

  55. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?

  56. பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933 ஆம்  ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது?

  57. Section - C

    22 x 3 = 66
  58. இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.

  59. தேசியத்தின் எழுச்சியில் சுற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு யாது?

  60. 1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

  61. சமிதிகள் என்றால் என்ன? அவர்களின் பணிகள் யாவை?

  62. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளை பற்றி விவாதிக்கவும்.

  63. தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியைப் பற்றி எழுதுக?

  64. மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.

  65. வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு பற்றி குறிப்பு வரைக?

  66. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  67. கான்பூர் சதிவழக்கு பற்றி சுருக்கமாக எழுதுக?

  68. 1909ஆம் ஆண்டின் மின்டோ-மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

  69. முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.

  70. எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

  71. அச்சு நாடுகள் உடன் இந்திய இராணுவத்தின் பங்கு யாது?

  72. காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதிஆவணத்தில் கையெழுத்திட்டார்?

  73. நேரு அறிமுகப்படுத்திய குறிக்கோள் தீர்மானத்தின் நோக்கம் யாது?

  74. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?

  75. இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல் பயணிகளின் சாதனைகள் என்ன?

  76. "செப்டம்பர் படுகொலைகள்" எதனால்  ஏற்பட்டது?

  77. “சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.

  78. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

  79. நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது - விளக்குக.  

  80. Section - D

    22 x 5 = 110
  81. இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.

  82. தேசியத்தின் எழுச்சியில் தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பை எழுதுக.

  83. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

  84. வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா கைதும், சிறை வாசகமும் பற்றி விவரி?

  85. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

  86. காந்தியடிகள் சமூக சேவைக்காக பெற்ற விருதுகளைப் பற்றி எழுதுக?

  87. டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.

  88. ஒத்துழையாமை இயக்கம் எவ்வாறு நடைபெற்றது?

  89. பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத்தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது?

  90. கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.

  91. இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?

  92. பாகிஸ்தான் யூனியன் உருவானதில் முகமது அலி ஜின்னாவின் பங்கு யாது?

  93. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

  94. கிரிப்ஸின் முன்மொழிவு கருத்துக்களைக் தொகுத்து எழுதுக?

  95. இந்திய வெளியுறவுக் கொள்கையின்அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

  96. இந்திய அரசமைப்பின் உறுப்பு 3 (Article 3) மாநிலம் உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் யாவை?

  97. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.

  98. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?

  99. "அமெரிக்க  புரட்சியும்  பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை  உறுதிப்படுத்தவும்.

  100. 1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.

  101. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

  102. இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.

  103. Section - E

    1 x 10 = 10
  104. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. பம்பாய்
    2. கல்கத்தா
    3. சென்னை
    4. அகமதாபாத்
    5. லக்னோ
    6. கான்பூர்
    7. சூரத்
    8. லாகூர்
    9. பூனா
    10. அலகாபாத்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் ( 12th Standard Tamil Medium History Book Back and Creative Important Question )

Write your Comment