" /> -->

நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  (a)

  4 mC

  (b)

  8 mC

  (c)

  5 mC

  (d)

  7 mC

 3. பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

  (a)

  1 = 4 < 2 < 3

  (b)

  2 = 4 < 3 < 1

  (c)

  2 = 3 < 1 < 4

  (d)

  3 < 1 < 2 < 4

 4. வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  (a)

  10 V

  (b)

  – 20 V

  (c)

  +20 V

  (d)

  -10 V

 5. R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

  (a)

  (b)

  (c)

  (d)

 6. 7 x 2 = 14
 7. மின்னூட்டத்தின் குவாண்டமாக்கல் என்றால் என்ன?

 8. கூலூம் விதியின் வெக்டர் வடிவத்தை எழுதி அதிலுள்ள ஒவ்வொரு குறியீடும் எதைச் சுட்டுகின்றது என்பதைக் கூறுக.

 9. கூலூம் விசைக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கூறுக.

 10. மேற்பொருந்துதல் தத்துவத்தைப் பற்றி சிறு குறிப்பு வரைக

 11. மின்புலம் – வரையறு.

 12. மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.

 13. ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?

 14. 7 x 3 = 21
 15. ஒரு கூலும் மின்னூட்ட மதிப்புடைய எதிர் மின்துகளிலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

 16. ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 7' எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g=10ms-2 என எடுத்துக் கொள்க)

 17. ஹைடிரஜன் அணுவில் உள்ள புரோட்டானுக்கும் எலக்ட்ரானுக்கும் இடையேயான நிலைமின் விசை மற்றும் ஈர்ப்பு விசையைக் கணக்கிடுக. அவற்றின் இடைத்தொலைவு 5.3X10-11m.எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் இவையிரண்டிற்கும் மின்னூட்ட மதிப்பு 1.6X10-19C. எலக்ட்ரானின் நிறை me =9.1X1031 kg மற்றும் புரோட்டானின் நிறை mp=1.6X1027 kg.

 18. ஆரம் 1m கொண்ட வட்டத்திலுள்ள நான்கு புள்ளிகளில் நான்கு சமமான மின்னூட்டம் கொண்டமின்துகள்கள் q1, q2 ,q3 மற்றும் q4 = q = +1 μC வைக்கப்பட்டுள்ளன. மின்துகள் q1 ன் மீது மற்ற அனைத்து மின்துகள்களாலும் செலுத்தப்படும் மொத்த விசையைக் கணக்கிடுக.

 19. பின்வரும் இரு நேர்வுகளுக்கு P மற்றும் Q புள்ளிகளில் மின்புலத்தைக் கணக்கிடுக
  (அ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள +1 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி நேர் மின்துகளால் உருவாகும் மின்புலம்
  (ஆ) ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள -2 μC மின்னூட்டம் கொண்ட புள்ளி எதிர் மின்துகளால் உருவாகும் மின்புலம்

 20. ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலைப் பற்றி விரிவாக எழுதுக. மின்னல் கடத்தியின் தத்துவத்தை விளக்குக.

 21. வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.

 22. 2 x 5 = 10
 23. +q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.

 24. படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன. (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு. (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும்போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் Chapter 1 நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 1 Electrostatics Important Question Paper )

Write your Comment