காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு_____.

    (a)

    \(\frac { \mu _{ 0 }I\ }{ 4r } \bigotimes\)

    (b)

    \(\frac { \mu _{ 0 }I​​\odot }{ 4r } \)

    (c)

    \(\frac { \mu _{ 0 }I\otimes }{ 2r } \)

    (d)

    \(\frac { \mu _{ 0 }I​​\odot }{ 2r } \)

  2. l நீளமும் Pm திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு ______.

    (a)

    Pm

    (b)

    \(\frac {3}{π}\)Pm

    (c)

    \(\frac {2}{π}\)Pm

    (d)

    \(\frac12\)Pm

  3. இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நடுவரை (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 10-5 Wb m-2)

    (a)

    3.60 × 10-5 Wb m-2

    (b)

    3.5 × 10-5 Wb m-2

    (c)

    2.56 × 10-4 Wb m-2

    (d)

    2.2 × 10-4 Wb m-2

  4. \(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.

    (a)

    -0.1 J

    (b)

    -0.8 J

    (c)

    0.1 J

    (d)

    0.8 J

  5. q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?

    (a)

    \(\frac {q }{m }\)

    (b)

    \(\frac {2q }{m }\)

    (c)

    \(\frac {q }{2m }\)

    (d)

    \(\frac {q }{4m }\)

  6. 5 x 2 = 10
  7. காந்தப்புலம் என்றால் என்ன?

  8. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

  9. பயட் –சாவர்ட் விதியைக் கூறு

  10. ஆம்பியர் சுற்று விதியைக் கூறு?

  11. காந்தத் தயக்கம் என்றால் என்ன ?

  12. 5 x 3 = 15
  13. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ள காந்த இருமுனை (சட்ட கந்தம்) வைக்கப்பட்டுள்ள பரப்பிலிருந்து வெளிவரும் கந்தப்பாயத்தைக் கணக்கிடுக.

  14. நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.

  15. படத்தில் காட்டியுள்ள மின்னோட்டம் பாயும் நேர்க்கடத்தியை, செங்குத்து இரு சமவெட்டியாக பிரிக்கும் P புள்ளியில் தோன்றும் காந்தப்புலத்தைக் காண்க.

  16. சட்ட காந்தமொன்றின் நடுவரைக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக.

  17. கால்வனோமீட்டர் ஒன்றை அம்மீட்டர் மற்றும் வோல்ட்மீட்டராக எவ்வாறு மாற்றுவது என்பதை விவரிக்கவும்.

  18. 4 x 5 = 20
  19. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

  20. 0.500 T அளவுள்ள சீரான காந்தப்புலத்திற்குச் செங்குத்தாக செல்லும் எலக்ட்ரான் ஒன்று 2.50 mm ஆரமுடைய வட்டப்பாதையை மேற்கொள்கிறது எனில் அதன் வேகத்தைக் காண்க.

  21. 6.0 × 106 N C-1 எண்மதிப்புடைய மின்புலம் E மற்றும் 0.83 T எண் மதிப்புடைய காந்தப்புலம்  B இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக செயல்படும் பகுதியில்  200 மின்னழுத்தத்தால் எலக்ட்ரான் ஒன்று முடுக்கிவிடப்படுகிறது. முடுக்கமடைந்த  எலக்ட்ரான் சுழி விலக்கத்தைக் காட்டுமா? இல்லை எனில் எந்த மின்னழுத்தத்திற்கு அது சுழி விலக்கத்தைக் காட்டும்.

  22. ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cos θ1 - cos θ2) என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment