" /> -->

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலகட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலகட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

  (a)

  எலகட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது.

  (b)

  மின்னோட்டம் தூண்டப்படுகிறது

  (c)

  abcd

  (d)

  adcb

 2. மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  (a)

  0.2 H

  (b)

  0.4 H

  (c)

  0.8 H

  (d)

  0.1 H

 3. ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  (a)

  1/2

  (b)

  1/\(\sqrt2\)

  (c)

  1

  (d)

  \(\sqrt3\)/2

 4. ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் மின்னூட்டத்தின் மதிப்பு

  (a)

  \(\frac Q 2\)

  (b)

  \(\frac Q {\sqrt 3}\)

  (c)

  \(\frac Q {\sqrt 2}\)

  (d)

  Q

 5. \(\frac {20}{ \pi^ 2 }\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது

  (a)

  50 μF

  (b)

  0.5 μF

  (c)

  500 μF

  (d)

  5 μF

 6. 5 x 2 = 10
 7. ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.

 8. ஏற்று மற்றும் இறக்கு மின்மாற்றிகள் என்றால் என்ன?

 9. Q – காரணி – வரையறு

 10. திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.

 11. LC அலைவுகள் என்றால் என்ன?

 12. 5 x 3 = 15
 13. 3 m2 பரப்பு  கொண்ட வட்ட விண்ணலைக்கம்பி (Circular Antenna) ஒன்று மதுரை யில் உள்ள ஒரு இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. விண்ணலைக் கம்பியின் பரப்பின் தளம் புவிகாந்தப்புலத் திசைக்கு 47° சாய்வா க உள்ளது. அந்த இடத்தில் புவிகாந்தப்புலத்தின் மதிப்பு 40773.9 nT எனில், விண்ணலைக் கம்பியுடன் தொடர்புடைய  காந்தப்பாயத்தை கணக்கிடுக.

 14. ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.

 15. சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 40378.7 nT கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க [g = 10 m s-2 எனக் கொள்க].

 16. ஒரு மூடிய சுற்றில் கம்பிச்சுருள் மற்றும் காந்தம் இடையே உள்ள சார்பு இயக்கம், கம்பிச்சுருளில் மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது என்ற உண்மையை நிறுவுக.

 17. ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன் இயற்பியல் முக்கியத்துவம் யாது?

 18. 4 x 5 = 20
 19. 600 சுற்றுகள் மற்றும் 70 cm2 பரப்பு கொண்ட செவ்வக கம்பிச்சுருள் ஒன்று 0.4 T என்ற காந்தப்புலத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து சுழலுகிறது. கம்பிச்சுருள் நிமிடத்திற்கு 500 சுழற்சிகள் நிறைவு செய்தால், கம்பிச்சுருளின் தளமானது
  (i) புலத்திற்கு குத்தாக
  (ii) புலத்திற்கு இணையாக மற்றும்
  (iii) புலத்துடன் 60° கோணம் சாய்வாக உள்ளபோது தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் கணக்கிடுக

 20. ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சமன்பாடு i=77sin314டீ ஆகும். அதன் பெரும மதிப்பு அதிர்வெண், அலைவுநேரம் மற்றும் t=2 ms-இல் கணநேர மதிப்பு ஆகியவற்றைக் காண்க.

 21. ஒரு மின்தூண்டிச் சுற்றில் உள்ள மின்னோட்டம் 0.3 sin (200t – 40°) A ஆகும். மின்தூண்டல் எண் 40mH எனில், அதன் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கா ன சமன்பாட்டை எழுதுக.

 22. ஒரு செமீ நீளத்தில் 400 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருள் 2A மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு மற்றும் 100 சுற்றுகள் கொண்ட கம்பிச்சுருள் ஒன்று வரிச்சுருளின் உள்ளே பொது அச்சுள்ள (co-axial) வகையில் வைக்கப்படுகிறது. வரிச்சுருளின் காந்தப்புலத்தில் கம்பிச்சுருள் உள்ளவாறு வைக்கப்படுகிறது. 0.04 விநாடியில் வரிச்சுருளில் செல்லும் மின்னோட்டத்தின் திசை திருப்பப்பட்டால், கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள்

Write your Comment