இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி வினாத்தாள்

12th Standard 2019 TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  1825

  (b)

  1835

  (c)

  1845

  (d)

  1855

 2. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

  (a)

  ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843

  (b)

  அடிமைமுறை ஒழிப்பு - 1859

  (c)

  சென்னைவாசிகள் சங்கம் - 1852

  (d)

  இண்டிகோ கலகம் - 1835

 3. “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

  (a)

  பாலகங்காதர திலகர்

  (b)

  கோபால கிருஷ்ண கோகலே

  (c)

  தாதாபாய் நெளரோஜி

  (d)

  எம்.ஜி. ரானடே

 4. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
  காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

  (a)

  கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (b)

  கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (c)

  கூற்று சரி; காரணம் தவறு

  (d)

  கூற்று காரணம் இரண்டும் தவறு

 5. கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு ஆனால் காரணம் சரி

 6. 5 x 2 = 10
 7. தேசியம் என்றால் என்ன?

 8. இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

 9. ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?

 10. இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலை தயார் செய்க.

 11. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

 12. 5 x 3 = 15
 13. மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.

 14. 1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?

 15. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?

 16. மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

 17. இந்திய நிர்வாகச் செலவின விவரங்களைக் கூறுக.

 18. 2 x 5 = 10
 19. இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.

 20. இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?

 21. 1 x 10 = 10
 22. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  1. பம்பாய்
  2. கல்கத்தா
  3. சென்னை
  4. அகமதாபாத்
  5. லக்னோ
  6. கான்பூர்
  7. சூரத்
  8. லாகூர்
  9. பூனா
  10. அலகாபாத்

*****************************************

Reviews & Comments about இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி வினாத்தாள்

Write your Comment