+1 Full Test Question Model

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியில்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

  20 x 1 = 20
 1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  இலயனல் ராபின்ஸ்

  (c)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (d)

  சாமுவேல்சன்

 2. "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு" என்னும் நூல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _______.

  (a)

  1930

  (b)

  1936

  (c)

  1988

  (d)

  1990

 3. கொடுக்கப்பட்டதேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

  (a)

  தேவை விரிவு மற்றும் சுருக்கம்

  (b)

  தேவை இடப்பெயர்வு

  (c)

  தேவை கூடுதல் மற்றும் குறைதல்

  (d)

  மேற்காண் அனைத்தும்

 4. விலைத் தேவை நெகிழ்ச்சி ________வகைப்படும்.

  (a)

  இரண்டு 

  (b)

  மூன்று 

  (c)

  நான்கு 

  (d)

  ஐந்து 

 5. உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.

  (a)

  உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு

  (b)

  உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (c)

  உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு

  (d)

  உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு

 6. விலை மாற்றத்தினால் அளிப்பில் ஏற்படும் மாற்ற விகிதம் ______ எனப்படும்.

  (a)

  தேவை விதி 

  (b)

  அளிப்பு நெகிழ்ச்சி 

  (c)

  தேவை நெகிழ்ச்சி 

  (d)

  உற்பத்தி 

 7. வெளியுறு செலவுகள் மற்றும் உள்ளுறு செலவுகளின் கூடுதல் ---------- செலவாகும்.

  (a)

  சமூக

  (b)

  பொருளாதார

  (c)

  பண

  (d)

  மாறா

 8. விலையின் மற்றொரு பெயர்______

  (a)

  சராசரி வருவாய்

  (b)

  இறுதிநிலை வருவாய்

  (c)

  மொத்த வருவாய்

  (d)

  சராசரி செலவு

 9. முதல் நிலை விலை பேதம் காட்டுதல் ______ எனவும் அழைக்கப்படுகிறது. 

  (a)

  முழு பேதம் காட்டுதல் 

  (b)

  நிறைகுறை பேதம் காட்டுதல் 

  (c)

  இரண்டும் 

  (d)

  எதுவுமில்லை 

 10. இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்

  (a)

  நிலம்

  (b)

  அமைப்பு

  (c)

  மூலதனம்

  (d)

  உழைப்பு

 11. MRP=_________.

  (a)

  MPP x MR 

  (b)

  MPP \(\div \) MR 

  (c)

  MPP - MR 

  (d)

  MPP + MR 

 12. ஜிக்மே- சிங்யே-வாங்கக் என்பவர் "மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு"என்ற தொடரை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ______.

  (a)

  1970

  (b)

  1971

  (c)

  1972

  (d)

  1973

 13. 1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

  (a)

  10

  (b)

  12

  (c)

  14

  (d)

  16

 14. நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.

  (a)

  காப்பீட்டுத் துறை

  (b)

  வங்கித்துறை

  (c)

  அ மற்றும் ஆ

  (d)

  போக்குவரத்துத் துறை

 15. எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்தது?

  (a)

  1965

  (b)

  1970

  (c)

  1975

  (d)

  1980

 16. சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு _____ மிக முக்கியம்.

  (a)

  உடல்நலம்

  (b)

  தொழில்நுட்பம்

  (c)

  செல்வம்

  (d)

  மேற்காணும் அனைத்தும்

 17. எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?

  (a)

  சண்டிகர்

  (b)

  பாண்டிச்சேரி

  (c)

  இலட்சத்தீவு

  (d)

  அந்தமான் நிக்கோபர் தீவுகள்

 18. 2012-2013 களில் நடைமுறையில் இருந்த கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை _____________ 

  (a)

  5500

  (b)

  5600

  (c)

  5676

  (d)

  5675

 19. நிலையான மதிப்பின் வகையீட்டுக்கெழு மதிப்பு ______________ ஆகும்.

  (a)

  ஒன்று

  (b)

  பூஜ்யம்

  (c)

  எண்ணிலி (infinity)

  (d)

  எண்ணிலியல்ல

 20. Qd = Qs என்பது ________ 

  (a)

  சமநிலையின்மை 

  (b)

  சமநிலை 

  (c)

  குறைந்த புள்ளி 

  (d)

  உயர்ந்த புள்ளி 

 21. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

  7 x 2 =14
 22. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

 23. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?

 24. பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

 25. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

 26. பகிர்வுச் சார்பு என்றால் என்ன?

 27. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

 28. மற்ற முறைகளிலிருந்து நில உடைமை முறையை வேறுபடுத்துவதற்கான அம்சங்களைக் கூறு.

 29. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

 30. தமிழ்நாட்டின் அணுமின் நிலையங்கள் எவை?

 31. அளிப்புச் சார்பு கொடுக்கப்பட்டுள்ளபோது அளிப்பு நெகிழ்ச்சி கெழு காண சூத்திரம் என்ன?

 32. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

  7 x 3 = 21
 33. நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.

 34. மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?

 35. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

 36. பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டை சுருக்கமாக விவரி.

 37. இந்தியாவில் உடல்நலம் பேனுதலின் பல முறைகளை விளக்குக.

 38. 1948 ன் தொழிற்கொள்கையின் தீர்மானம் பற்றி விவரி.   

 39. குளிர் பதனக் கிடங்கு பற்றி விவரிக்க.

 40. ஊரக வேலையின்மையை நீக்குவதற்கான வழிமுறைகளை கூறுக.

 41. தமிழ்நாடு துறைமுகங்கள் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக.

 42. 10x1 + 6x2 = 60
  12 x1 - 4 x2 =16 என்ற அமைப்பின் தீர்வு காண்க.

 43. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

  7 x 5 = 35
  1. பொருளியலின் தன்மை மற்றும் எல்லையை விவரி

  2. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

  1. அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி

  2. குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி

  1. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

  2. கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.

  1. இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.

  2. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

  1. பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?

  2. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

  1. ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.

  2. மக்கள் தொகையின் தரமான அம்சங்களை விவரி

  1. ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உற்பத்தி செய்ய ஒவ்வொரு மாதத்தின் மொத்தச் செலவுகளை தயாரிப்பாளர் ஒருவர் TC(Q) = 128 + 60Q + 8Q2 என மதிப்பிடுகிறார். இறுதிநிலை செலவு, சராசரி செலவு, மாறாச் செலவு, மாறும் செலவு, சராசரி மாறாச் செலவு, சராசரி மாறும் செலவு ஆகியவற்றைக் காண்க.

  2. பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது  பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத  பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும்  Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
   அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
   ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
   இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
   [பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( 11th standard Economics model full test question paper )

Write your Comment