விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. இளம் உயிரிகளை ஈனும் விலங்குகள் _______.

    (a)

    முட்டையிடுபவை 

    (b)

    தாயுள் முட்டை பொரித்துக்குட்டி ஈனுபவை 

    (c)

    குட்டி ஈனுபவை 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  3. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  4. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் ________.

    (a)

    பாலிலி இனப்பெருக்கம் 

    (b)

    கன்னி இனப்பெருக்கம் 

    (c)

    பாலினப் பெருக்கம் 

    (d)

    'அ' மற்றும் 'ஆ' இரண்டும் 

  5. கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

    (a)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (b)

    ‘உ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    'உ ' சரியானது ஆனால் 'கா' தவறானது 

    (d)

    'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை

  6. 2 x 2 = 4
  7. எவ்வுயிரினத்தில் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  8. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  9. 2 x 3 = 6
  10. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  11. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  12. 2 x 5 = 10
  13. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
    அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
    ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

  14. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

Write your Comment