வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.

    (a)

    வங்கியரால்

    (b)

    வணிகத்தால்

    (c)

    வணிகத்தின் கடனாளிகளால்

    (d)

    வணிகத்தின் கடனீந்தோரால்

  2. வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது

    (a)

    வங்கி அறிக்கை

    (b)

    ரொக்க ஏடு

    (c)

    வங்கி அறிக்கை மற்றும் ரொக்க  ஏட்டின் வங்கி பத்தி

    (d)

    சில்லறை  ரொக்க  ஏடு

  3. வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது

    (a)

    வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்

    (b)

    வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்

    (c)

    வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  4. வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயாரிப்பவர்     

    (a)

    வங்கி 

    (b)

    வணிகத்தின் கடனீ ந்தோர்    

    (c)

    வங்கியின் வாடிக்கையாளர்   

    (d)

    பணியாளர்  

  5. ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.    

    (a)

    கழிக்கப்பட வேண்டும் 

    (b)

    கூட்டப்படவேண்டும்  

    (c)

    இரண்டும் இல்லை 

  6. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் வரவிருப்பு என்பது    

    (a)

    வங்கி அறிக்கையின்படி  பற்றிருப்பு     

    (b)

    வங்கி அறிக்கையின்படி  வரவிருப்பு  

    (c)

    ரொக்க ஏட்டின்படி சாதக இருப்பு  

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை  

  7. 2 x 2 = 4
  8. கூற்று (A): வங்கி அறிக்கை அல்லது செல்லேடு என்பது வங்கியின் ஏடுகளில் உள்ள வாடிக்கையானது கணக்கின் பிரதியாகும்.
    காரணம் (R): தற்காலத்தில் வாடிக்கையாளர் தன்னுடைய வங்கி அறிக்கையினை மின் அறிக்கை வாயிலாகவும் பெற முடியும்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  9. கூற்று (A): வங்கிச் சரிக்கட்டும் பட்டியலானது, நடவடிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வணிகத்தின் தேவையைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒரு முறை தயாரிக்கப்படலாம்.
    காரணம் (R): ரொக்க ஏடு மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் வேறுபட்டு இருக்கும் போது, சரிக்கட்டுதல் தேவைப்படுகிறது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  10. 5 x 2 = 10
  11. வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

  12. ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக

  13. நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பெறும் ஏதேனும் இரண்டு செலவுகளை தருக

  14. வங்கிச் செல்லேடு என்றால் என்ன? 

  15. செல்லேட்டில் அதிகமான இருப்பினை  விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை  வரிசைப்படுத்துக.       

  16. 5 x 3 = 15
  17. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

  18. மேல்வரைப்பற்று இருப்பாக இருந்தால் வங்கி வசூலித்த வட்டி ஏற்படுத்தும் விளைவு என்ன

  19. பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
    (அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ  25,000.
    (ஆ) மறுக்கப்பட்ட காசோலை  ரூ  250 குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை  ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
    (ஈ) வங்கிக் கட்டணம் ரூ  300 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) விடுத்த காசோலை ரூ  9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

  20. ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை? 

  21. பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான  உதயம் நிறுவனத்தின்  வங்கி செல்லேட்டில்  காணக்கூடிய  இருப்பினைக் காணக்கிடவும்.
    1.31 டிசம்பர்  2016 ரொக்க  ஏட்டின்படி  வங்கிமேல்வரைப்பற்று  ரூ 63,400
    2. 31  டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று  மீதான வட்டி  ரூ 1,600 செல்லேட்டில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
    3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
    4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை  விடுக்கப்பட்டும்  டிசம்பர்  31 வரை பணமாக்கப்பதவில்லை.
    5. ரூ 21,700 மதிப்புள்ள  காசோலைகள்  வங்கியில் செலுத்தப்பட்டு  . இன்னும் வசூலாகவில்லை.
    6. வங்கி வசூலித்த முதலீடுகள்  மீதான வட்டி  ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.                                               

  22. 3 x 5 = 15
  23. பின்வரும் விவரங்களிலிருந்து காமாட்சி நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) ரொக்க  ஏட்டின் படி பற்றிருப்பு ரூ.10,500
    (ஆ) வங்கியில் செலுத்திய காசோலை ரூ.5,500 வங்கியால் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ரொக்க  ஏட்டில் இரு முறை பதியப்பட்டது.
    (இ) விடுத்த காசோலை ரூ.7,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது குறித்து ரொக்க  ஏட்டில் பதிவு இல்லை.
    (ஈ) காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 வங்கியால் பற்று வைக்கப்பட்டது ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக வாடிக்கையாளர் செலுத்திய ரூ.1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  24. பின்வரும் விவரங்களைக் கொண்டு  2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டுபிடிக்கவும்

      விவரம் ரூ
    i) ரொக்க  ஏட்டின் படி மேல்வரைப்பற்று 20,000
    ii) செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 4,000
    iii) விடுத்த காசோலை  செலுத்துைகக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
    iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி வசூலித்த வாடகை   500
    v வங்கியால் பற்று செய்யசெய்யப்பட்ட மேல்வரைப்பற்று மீதான வட்டி 2,000
    vi) வங்கியால் தவறுதலாலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
    vii) 2017 டிசம்பர் 30 அன்று விடுத்த காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது 5,000
    viii) வங்கியில் செலுத்திய வாடிக்கையாளரின் காசோலை  வங்கியால் மறுக்கப்பட்டது. ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 2,000

     

  25. பின்வரும் தகவல்களைக் கொண்டு  வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
    (ஆ) விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
    (இ) செலுத்திய காசோலை  இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
    (ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
    (உ) வங்கிக் கட்டணம் ரொக்க  ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
    (ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Bank Reconciliation Statement Model Question Paper )

Write your Comment