வங்கிச் சரிகட்டும் பட்டியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக

  2. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

  3. வங்கியில் ரொக்கம்  செலுத்தும்போது ரொக்க  ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக

  4. மேல்வரைப்பற்று இருப்பாக இருந்தால் வங்கி வசூலித்த வட்டி ஏற்படுத்தும் விளைவு என்ன

  5. வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.

  6. கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக

      விவரம்  
    i) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று 10,000
    ii) செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 5,000
    iii) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 1,000
    iv) வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது 500
    v) வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி 1,000
    vi) வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை  300
  7. ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
    ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு  வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை  2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
    (இ) ரொக்க  ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
    (ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை  புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  8. பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
    (அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ  25,000.
    (ஆ) மறுக்கப்பட்ட காசோலை  ரூ  250 குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை  ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
    (ஈ) வங்கிக் கட்டணம் ரூ  300 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) விடுத்த காசோலை ரூ  9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.

  9. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    (i) வங்கி அறிக்கையின் படி இருப்பு 6,000
    (ii) டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் 2,000
    (iii) டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை 3,000
    (iv) வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 4,000
    (v) கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 1,000
    (vi) வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை  500
  10. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய ரொக்க  ஏட்டின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    1 வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று 6,500
    2 வங்கியில் செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படவில்லை 10,500
    3 விடுத்த காச�ோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000
    4 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது 500
    5 வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி 180
    6 சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 100

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Bank Reconciliation Statement Three Marks Questions )

Write your Comment