முதன்மைப் பதிவேடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.

     (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது        ரூ 80,000
     (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது        ரூ 10,000
     (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது   ரூ 6,000
     (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்   ரூ 8,000
  2. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  3. பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
    (அ) முதல்
    (ஆ) கட்டட ம்
    (இ) உள் ஏற்றிச் செல் செலவு
    (ஈ) ரொக்கம்
    (உ) தள்ளுபடிப் பெற்றது
    (ஊ) வங்கி
    (எ) கொள்முதல்
    (ஏ) சந்துரு
    (ஐ) கொடுபட வேண் டிய கூலி.

  4. கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.

  5. கணக்கு என்றால் என்ன? கணக்குகளை வகைப்படுத்தி, தகுந்த உதாரணங்களுடன் கூறுக.

  6. ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.

  7. உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?

  8. குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.

  9. இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.

  10. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

     (அ)   சொத்துகள்    =    முதல்    +    பொறுப்புகள் 
       ரூ 1,00,000   =  ரூ 80,000 + ?
     (ஆ)  சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ரூ 2,00,000 = ? + ரூ 40,000
    (இ) சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ? = ரூ 1,60,000 + ரூ 80,000

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதன்மைப் பதிவேடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Accountancy - Books Of Prime Entry Three Marks Questions )

Write your Comment