முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  2. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ 20,000.

    (a)

    தொடக்கச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    நீள்பயன் வருவாயினச் செலவு

  3. நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.

    (a)

    முதலினச் செலவுகள்

    (b)

    வருவாயினச் செலவுகள்

    (c)

    வருவாயின வரவுகள்

    (d)

    முதலின வரவுகள்

  4. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

    (a)

    கடந்த காலத்திற்கு

    (b)

    எதிர் காலத்திற்கு

    (c)

    நடப்பு காலத்திற்கு

    (d)

    எந்த காலத்திற்கும்

  5. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

    (a)

    வருவாயினச் செலவுகள்

    (b)

    முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவுகள்

    (d)

    முதலினச் செலவுகள்

  6. 3 x 2 = 6
  7. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  8. பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
    (i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
    (ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
    (iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
    (iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
    (v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.

  9. பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
    (i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
    (அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
    (ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
    (ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.

  10. 3 x 3 = 9
  11. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.

  12. முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.

  13. நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தரவும்.

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
    (i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
    (ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
    (iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
    (iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.

  16. பின்வரும் செலவுகளை முதலினம் அல்லது வருவாயினம் எனக் கூறவும்.
    (i) கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000.
    (ii) அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000.
    (iii) கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000.
    (iv) பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் Book Back Questions ( 11th Accountancy - Capital And Revenue Transactions Book Back Questions )

Write your Comment