முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
    (ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
    (iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000.

  2. பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
    (i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
    (ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
    (iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.

  3. பின்வரும் செலவினங்கள் முதலினம், வருவாயினம், மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளா எனக் கூறுக.
    (i) புதிய இயந்திரம் வாங்கியதற்கான ஏற்றிச்செல் கட்டணம், மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 1,000
    (ii) அலுவலக வாடகைச் செலுத்தியது ரூ 2,000
    (iii) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ரூ 5,000
    (iv) ஐந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் மீதான வாடகை, ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படுகிறது.

  4. பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
    (i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
    (ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
    (iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
    (iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
    (v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.

  5. பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
    (i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
    (அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
    (ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
    (ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.

  6. கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
    (i) நிலைச்சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 10,000.
    (ii) பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை .
    (iii) புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொண்ட செலவு.
    (iv) தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை.

  7. வருவாயினச் செலவு என்றால் என்ன?

  8. வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.

  9. நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?

  10. செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Capital And Revenue Transactions Two Marks Questions Paper )

Write your Comment