தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  7 x 1 = 7
 1. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

  (a)

  ஆண்டுதோறும் அதிகரிக்கும்

  (b)

  ஆண்டுதோறும் குறையும்

  (c)

  அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்

  (d)

  ஆண்டுதோறும் மாறக்கூடியது

 2. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

  (a)

  இலாப நட்டக் கணக்கு

  (b)

  நிலைச் சொத்து கணக்கு

  (c)

  தேய்மானக் கணக்கு

  (d)

  வங்கி கணக்கு

 3. தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

  (a)

  காலப்போக்கு

  (b)

  பயன்பாடு

  (c)

  வழக்கொழிவு

  (d)

  அ, ஆ மற்றும் இ

 4. ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?

  (a)

  காலப்போக்கு

  (b)

  தேய்வு மற்றும் உராய்வு

  (c)

  தொழில்நுட்ப மாற்றங்கள்

  (d)

  மேற்கூறியவற்றில் ஏதுமில்லை

 5. சொத்தின் இறுதி மதிப்பு என்பது, பயனளிப்புக் காலத்தின் ____________ அச்சொத்திலிருந்து கிடைக்கும் தொகையாகும்.

  (a)

  ஆரம்பத்தில்

  (b)

  இறுதியில்

  (c)

  மத்தியில்

  (d)

  இவைகளில் ஏதுமில்லை

 6. வருமான வரி விதிக்கும் அதிகாரிகள் ஏற்கும் முறை _________.

  (a)

  நேர்க்கோட்டு முறை 

  (b)

  ஆண்டுத் தொகை முறை 

  (c)

  குறைந்து செல் மதிப்பு முறை 

  (d)

  இவை எதுவுமில்லை 

 7. மறுமதிப்பீடு தேய்மான முறை ________சொத்துக்களுக்கு பயன்படுகிறது?

  (a)

  பொறிவகை 

  (b)

  இயந்திரம் 

  (c)

  விடுகருவிகள் 

  (d)

  இவை எதுவுமில்லை 

 8. 5 x 1 = 5
 9. வழக்கொழிவு

 10. (1)

  விடு கருவிகள்

 11. ஆண்டுத்தொகை முறை

 12. (2)

  புதிய கண்டுபிடிப்புகள்

 13. ஈடுநிதி முறை

 14. (3)

  குத்தகை

 15. ஆண்டுத்தொகை முறை

 16. (4)

  உயர்ந்த மதிப்புள்ள சொத்துகள்

 17. மறுமதிப்பீட்டு முறை

 18. (5)

  முதலீட்டுகளிலுருந்து பெறப்படும் வட்டி

  8 x 2 = 16
 19. ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள், மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

 20. கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

  இயந்திரம் வாங்கிய விலை ரூ. 2,00,000
  மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் ரூ. 50,000
  எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 15,000
  எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 வருடங்கள்
 21. தேய்மானம் என்றால் என்ன?

 22. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் கணக்கிட உதவும் சூத்திரங்கள் யாவை?

 23. தேய்மான நிதிமுறை என்றால் என்ன?

 24. நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.

 25. தேய்மானத்தின் வரைவிலக்கணம் தருக.

 26. மறு மதிப்பீட்டு முறை குறிப்பு வரைக.

 27. 4 x 3 = 12
 28. தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?

 29. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

 30. குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.

 31. தேய்மானத்தின் இயல்புகள் யாவை?

 32. 2 x 5 = 10
 33. இராமு நிறுவனம் ஜூலை 1, 2016-ல் இயந்திரம் ஒன்றை ரூ. 14,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ரூ. 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணை முறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தந்து இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மான கணக்கினைத் தயாரிக்கவும்.

 34. ஜுலை 1, 2015 ஒரு நிறுவனம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - தேய்மானக் கணக்கியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Depreciation Accounting Model Question Paper )

Write your Comment