தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் II Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

  (a)

  வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

  (b)

  இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

  (c)

  இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  (d)

  இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

 2. நிகர இலாபம்.

  (a)

  முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்

  (b)

  முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்

  (c)

  எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்

  (d)

  எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்

 3. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

  (a)

  அடக்க விலையில்

  (b)

  சந்தை விலையில்

  (c)

  அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

  (d)

  அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

 4. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

  (a)

  இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

  (b)

  இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  (c)

  மேற்கண்ட இரண்டிலும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 5. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

  (a)

  வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (b)

  பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  (c)

  வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

  (d)

  இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

 6. 3 x 2 = 6
 7. கொடுபட வேண்டிய செலவு என்றால் என்ன?

 8. கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?

 9. கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு 2018, மார்ச் 31 ம் நாளன்று சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
  (i) எடுப்புகள் மீதான வட்டி ரூ 50
  (ii) வாராக்கடன் ரூ 500 போக்கெழுதவும்
  (iii) அறைகலன் மீதான தேய்மானம் ரூ 1,000.

 12. இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?

 13. இறுதிக் கணக்குகளில் இறுதிச் சரக்கிருப்பு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை விளக்கவும்.

 14. 2 x 5 = 10
 15. 2016, மார் ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி

   விவரம்   பற்று ரூ   வரவு ரூ 
   பற்பல கடனாளிகள்           1,04,000  
   வாராக்கடன்  5,000  
   வாரா ஐயக்கடன் ஒதுக்கு          2,000

  சரிக்கட்டுதல்கள்:
  (i) கூடுதல் வாராக்கடன் ரூ 4,000
  (ii) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
  தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

 16. சென்னின் பேரேட்டிலிருந்து 2016, மார்ச் 31 க்கான பின்வரும் இருப்புகள் பெறப்பட்டன. அவரின் வியாபாரக் கணக்கினைத் தயாரிக்கவும்.

   விவரம்   ரூ   விவரம்   ரூ 
    சரக்கிருப்பு (1.4.2015)         10,000   விற்பனை       3,00,000
    கொள்முதல் 1,60,000   உள்திருப்பம்    16,000
    கூலி  30,000   வெளித்திருப்பம்    10,000
    உள்தூக்குக் கூலி 10,000   எரிவாயு மற்றும் எரிசக்தி     8,000
    உள் ஏற்றிச்செல் செலவு     8,000    

  கூடுதல் தகவல்கள்:
  (அ) 31.3.2016 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ரூ 20,000
  (ஆ) கொடுபட வேண் டிய கூலி ரூ 4,000
  (இ) முன்கூட்டிச் செலுத்திய எரிவாயு மற்றும் எரிசக்தி ரூ 1,000.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் II Book Back Questions ( 11th Accountancy - Final Accounts Of Sole Proprietors - II Book Back Questions )

Write your Comment