பேரேடு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்

    (a)

    நிதி நிலைமையை அறிய

    (b)

    இலாபம் அல்லது நட்டத்தை அறிய

    (c)

    நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய

    (d)

    ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.

  2. ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    கூட்டுதல்

    (b)

    எடுத்தெழுதுதல்

    (c)

    குறிப்பேட்டில் பதிதல்

    (d)

    இருப்புக் கட்டுதல்

  3. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

    (a)

    வரவு இருப்பு

    (b)

    பற்று இருப்பு

    (c)

    இருப்பு இன்மை

    (d)

    பற்றும் மற்றும் வரவு இருப்பு

  4. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  5. குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பகுதி _______.  

    (a)

    பே.ப.எ.பத்தி    

    (b)

    கு.ப.எ.பத்தி 

    (c)

    விவரப் பத்தி 

    (d)

    குறிப்புப் பத்தி 

  6. 2 x 2 = 4
  7. கூற்று (A) : பேரேட்டு ஒரு முதன்மையான கணக்கேடாக கருதப்படுகிறது.
    காரணம் (R) : இது ஆள்சார் சொத்து மற்றும் பெயரளவு கணக்குகள் ஆகிய எல்லா கணக்குகளையும் உள்ளடக்கிய ஒரு ஏடாகும்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  8. கூற்று (A): கணிணி முறையில் கணக்கு பதிவியல் பின்பற்றப்படும் போது, வணிக நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டால் பேரேட்டுக் கணக்கு தானாகவே தயாரிக்கப்பட்டுவிடும்.
    காரணம் (R): விற்பனை கொள்முதல் இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  9. 2 x 2 = 4
  10. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
    (அ) குறிப்பேடு - முதன்மைப்பதிவேடு
    (ஆ) விற்பனை ஏடு - துணை ஏடு
    (இ) ரொக்க ஏடு - முதல் மூலபதிவேடு
    (ஈ) பேரேடு - தோற்றப்பதிவேடு

  11. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
    (அ) பேரேட்டுக் கணக்கு - T வடிவம்
    (ஆ) குறிப்பேட்டுக் கணக்கு - முதல் பிரிவு
    (இ) இருப்பாய்வு - மூன்றாவது படிநிலை
    (ஈ) ரொக்கக் கணக்கு - பற்றுக்குறிப்பு

  12. 6 x 2 = 12
  13. பேரேடு என்றால் என்ன?

  14. பற்று இருப்பு என்றால் என்ன?

  15. வரவு இருப்பு என்றால் என்ன?

  16. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.

    2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000
    1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000
    30 அறைகலன் விற்றது 400
  17. கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன? 

  18. இருப்பாய்வு என்றால் என்ன? 

  19. 5 x 3 = 15
  20. குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.

  21. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

  22. பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.

  23. தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.

    2018 ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.3,00,000
    2 வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது ரூ.2,00,000
    5 சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது ரூ.10,000
    15 புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது ரூ.5,000
    22 சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது  
    25 Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது ரூ.30,000
  24. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

    ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
    3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
    25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
  25. 4 x 5 = 20
  26. பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

    ஜாய் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
    நாள் விவரம் பே.ப.எ. பற்று ரூ. வரவு ரூ.
    2017 ஜூன் 1 ரொக்கக் க/கு.                                                                                                                   ப   45,000  
      சரக்கிருப்பு க/கு                                                                                                                ப   50,000  
      சோகன் க/கு                                                                                                                      ப   35,000  
      அறைகலன் க/கு                                                                                                              ப   50,000  
      ராம்                                                                                                                                க/கு     20,000
      ஜாய் முதல் க/க                                                                                                                 
    (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது)
        1,60,000
  27. 2017, ஏப்ரல் 1 அன்று குமரன் என்பவரது ஏடுகளில் பின்வரும் இருப்புகள் இருந்தன.
    சொத்துகள்: ரொக்கம் ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.40,000; ரோஹித் என்பவரிடமிருந்து தொகை பெற வேண்டியது ரூ.10,000; அறைகலன் ரூ.10,000; பொறுப்புகள்: அனுஷ் என்பவருக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.40,000; குமரன் முதல் கணக்கு ரூ.1,20,000 மேலே கொடுக்கப்பட்டுள்ள தொடக்கப்பதிவுகளை பேரேட்டில் எடுத்தெழுதுக.

  28. கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்தெழுதவும்.

    2017 அக் 18 வியாபார செலவுகளை ரொக்கமாக செலுத்தியது ரூ.1,000
    25 தபால் தலைகள் ரொக்கத்திற்கு வாங்கியது 100
    30 கழிவு பெற்றது 6,000
    30 வாடகை ரொக்கமாக செலுத்தியது 4,000
  29. பின்வரும் நடவடிக்கைகளை கணேசன் என்பவரது ஏடுகளில் குறிப்பேட்டில் பதிவு செய்து, பேரேட்டுக் கணக்குகளிலும் எடுத்து எழுதுக

    2017 அக் 1 தொழில் ரொக்கத்துடன் தொடங்கியது ரூ.25,000
    5 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 12,500
    10 அறைகலன் வாங்கி காசோலை கொடுத்தது 2,000
    15 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 5,000
    19 வாசு என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,000
    22 சொந்தப் பயனுக்காக சரக்குகள் எடுத்துக்கொண்டது 500

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - பேரேடு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Ledger Model Question Paper )

Write your Comment