காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

  (a)

  சமூகக் கணக்கியல்

  (b)

  காரியதரிசிகளின் கணக்கியல்

  (c)

  மேலாண்மைக் கணக்கியல்

  (d)

  பொறுப்பு கணக்கியல்

 2. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.

  (a)

  நிதிநிலைக் கணக்கியல்

  (b)

  மேலாண்மைக் கணக்கியல்

  (c)

  மனிதவளக் கணக்கியல்

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை

 3. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

  (a)

  வணிக தனித்தன்மை கருத்து

  (b)

  நிறுவன தொடர்ச்சி கருத்து

  (c)

  கணக்கியல் கால அனுமானம்

  (d)

  முன்னெச்சரிக்கை கொள்கை

 4. இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு

  (a)

  இந்திய மைய வங்கி

  (b)

  இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்

  (c)

  உச்ச நீதி மன்றம்

  (d)

  இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்

 5. கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.

  (a)

  சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்

  (b)

  சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்

  (c)

  பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்

  (d)

  முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்

 6. பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?

  (a)

  கட்டடம் கணக்கு

  (b)

  கொடுபட வேண்டிய சம்பள கணக்கு

  (c)

  மகேஷ் கணக்கு

  (d)

  பாலன் நிறுவனம்

 7. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  எடுப்புகள் கணக்கு

  (b)

  ரொக்கக் கணக்கு

  (c)

  முதல் கணக்கு

  (d)

  கொள்முதல் கணக்கு

 8. ஒரு தொழிலின் பொறுப்புகள் மதிப்பு ரூ.60,00/- அதன் உரிமையாளரின் முதல் ரூ.1,40,000 எனில் சொத்துக்களின் மதிப்பு

  (a)

  ரூ.1,40,000

  (b)

  ரூ.80,000

  (c)

  ரூ.60,000

  (d)

  ரூ.2,00,000

 9. சீனிவாசன் அவர்களுக்கு சரக்கு விற்பனை செய்ததற்கு பற்று வைக்க வேண்டிய கணக்கு. 

  (a)

  ரொக்கக் க/கு

  (b)

  சீனிவாசன் க/கு

  (c)

  விற்பனை க/கு

  (d)

  கடன் க/கு

 10. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

  (a)

  வரவு இருப்பு

  (b)

  பற்று இருப்பு

  (c)

  இருப்பு இன்மை

  (d)

  பற்றும் மற்றும் வரவு இருப்பு

 11. இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்

  (a)

  ஆள்சார் கணக்குகள் மட்டும்

  (b)

  சொத்துக் கணக்குகள் மட்டும் 

  (c)

  பெயரளவு கணக்குகள் மட்டும்

  (d)

  அனைத்து கணக்குகளும்

 12. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

  (a)

  அனைத்து சரக்குகளின் கொள்முதல்

  (b)

  அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

  (c)

  அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

  (d)

  அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

 13. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

  (a)

  கொள்முதல் ஏடு

  (b)

  விற்பனை ஏடு

  (c)

  கொள்முதல் திருப்ப ஏடு

  (d)

  உரிய குறிப்பேடு

 14. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது

  (a)

  மொத்த கொள்முதல்

  (b)

  ரொக்கக் கொள்முதல் மட்டும்

  (c)

  கடன் கொள்முதல் மட்டும்

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 15. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

  (a)

  ஒரு செலவு

  (b)

  ஒரு இலாபம்

  (c)

  ஒரு சொத்து 

  (d)

  ஒரு பொறுப்பு 

 16. நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு 

  (a)

  சரக்கீந்தோர் க/கு 

  (b)

  வாடிக்கையாளர் க/கு 

  (c)

  உரிமையர் க/கு 

  (d)

  வங்கி க/கு 

 17. சில்லறை ரொக்க ஏடு _________வகைப்படும் 

  (a)

  இரண்டு 

  (b)

  மூன்று 

  (c)

  நான்கு 

  (d)

  ஐந்து 

 18. ரொக்க  ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன

  (a)

  ரூ 1,950 வரவு இருப்பு

  (b)

  ரூ, 1,950 பற்று இருப்பு

  (c)

  ரூ, 1,950 பற்று இருப்பு

  (d)

  ரூ 2,050 வரவு இருப்பு

 19. ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது       

  (a)

  செல்லேட்டின் மேல்வரைப் பற்று       

  (b)

  செல்லேட்டின்படி வரவு இருப்பு 

  (c)

  ரொக்க ஏட்டின் படி மேல்வரைப் பற்று      

  (d)

  இவை ஏதுவுமில்லை 

 20. வங்கி அறிக்கையின்படி  இருப்பு ரூ 7,500 செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது  ரூ,1,500 ரொக்க ஏட்டின்  வங்கி பத்தியின் இருப்பு       

  (a)

  6,000 மேல்வரைப்பற்று    

  (b)

  9,000 மேல்வரைப்பற்று

  (c)

  9,000 சாதக இருப்பு 

  (d)

  6,000 சாதக இருப்பு 

 21. 7 x 2 = 14
 22. கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?

 23. குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர் 

 24. சொத்து கணக்கு என்றால் என்ன?

 25. செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?

 26. இருப்பாய்வு உடன்படுவது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.

 27. கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?

 28. வங்கிச் செல்லேடு என்றால் என்ன? 

 29. 7 x 3 = 21
 30. கணக்கியலின் பணிகளை விளக்குக.

 31. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

 32. அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?

 33. இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?

 34. பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவுக் கணக்குகளாக வகைப்படுத்துக்க.
  அ] முதல்
  ஆ] கொள்முதல் 
  இ] வணிக நற்பெயர்
  ஈ] பதிப்புரிமை
  உ] லதா
  ஊ] ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  எ] மின்கட்டணம்
  ஏ] பங்காதாயம்
  ஐ] கொடுபட வேண்டிய வாடகை
  ஒ] ரமேஷ் 

 35. வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 36. 2016 மார்ச் 31 - ல் சுதா நிறுவனத்தின்  ரொக்க ஏடு  ரூ 3,000 வங்கி ரொக்க  இருப்பைக் காட்டியது.ஆனால் வங்கியில் பணம் பெற  முன்னிலைப்படுத்தப்படாத  காசோலைகள்  ரூ 370, ரூ 350 மற்றும் ரூ 200 ஆகும்  மற்றும்  820 மதிப்புள்ள  காசோலைகள் வங்கியில் செலுத்தியும் பணமாக்கப்படவில்லை.அந்நாளில்  வங்கி  அறிக்கையின் படியான  இருப்பைக் கணக்கிடுக.                

 37. 7 x 5 = 35
 38. திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.

  ஜனவரி 2018   ரூ
  1 திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000
  2 ரொக்கக் கொள்முதல் செய்தது 10,000
  5 மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது 6,000
  7 வங்கியில் செலுத்தியது 5,000
  10 அறைகலன் வாங்கியது 2,000
  20 சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது 5,000
  25 ரொக்க விற்பனை 3,500
  26 மோகனுக்குச் செலுத்தியது 3,000
  31 ஊதியம் வழங்கியது 2,800
 39. பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  ஜாய் என்பவரின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
  நாள் விவரம் பே.ப.எ. பற்று ரூ. வரவு ரூ.
  2017 ஜூன் 1 ரொக்கக் க/கு.                                                                                                                   ப   45,000  
    சரக்கிருப்பு க/கு                                                                                                                ப   50,000  
    சோகன் க/கு                                                                                                                      ப   35,000  
    அறைகலன் க/கு                                                                                                              ப   50,000  
    ராம்                                                                                                                                க/கு     20,000
    ஜாய் முதல் க/க                                                                                                                 
  (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது)
      1,60,000
 40. பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாக பேரேட்டில் எடுத்து எழுதவும்.

  2017 ஜூலை 1 சங்கர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.1,00,000
  5 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
  9 கூலி ரொக்கமாக கொடுத்தது ரூ.6,000
  19 சம்பளம் ரொக்கமாக கொடுத்தது ரூ.8,000
  23 விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது ரூ.4,000
 41. பின்வரும் விபரங்களைக்கொண்டு இராபர்ட் அறைகலன் நிறுவனத்தின் 2017 ஜூன் மாதத்திற்கான கொள்முதல் ஏடு, கொள்முதல் திருப்ப ஏடு மற்றும் பேரேட்டுக் கணக்குகளை பதிவு செய்க.

  2017  
  ஜூன் 1 பாலு நிறுவனத்திடம் ஒன்று ரூ. 150 வீதம் 20 நாற்காலிகள் கடனுக்கு வாங்கியது
  ஜூன் 13 சுபாஷிடமிருந்து கடனுக்கு வாங்கியது
    ஒன்று ரூ. 3,100 வீதம் 2 அலமாரிகள்
    ஒன்று ரூ. 1,500 வீதம் 10 மேசைகள்
    ஒன்று ரூ. 200 வீதம் 15 நாற்காலிகள்
    கழிக்க : 10% வியாபாரத்தள்ளுபடி
    கூட்டுக: ரூ. 220 சரக்குதூக்குக்கூலி
  ஜூன் 21 பழுதடைந்து இருந்ததால் பாபாலு நிறுவனத்திற்கு 2 நாற்காலிகள் திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை
  ஜூன் 24 சன்ரைஸ் நிறுவனத்திடம் கடனுக்கு வாங்கியது
    ஒன்று ரூ.1,300 வீதம் 25 அலமாரிகள்
  ஜூன் 27 மௌலியிடம் கடனுக்கு வாங்ாங்கியது
    ஒன்று ரூ. 3,275 வீதம் 10 நிர்வாக மேசைகள்
  ஜூன் 29 பழுதடைந்த மூன்று அலமாரிகள் சன்ரைஸ் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன, ரொக்கம் பெறப்படவில்லை
 42. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

  2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
  5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
  12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
  18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
  20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
 43. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு ராபர்ட் என்பவரின் ஏடுகளில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.

  2017 செப்   ரூ
  1 கையிருப்பு ரொக்கம் 230
    முன் பண மீட்புக்காக காசோலை பெற்றது 2,270
  2 அஞ்சல் செலவு செய்தது 314
  8 இரயில் கட்டணம் செலுத்தியது 280
  10 கணிப்பொறி பழுது பார்த்தது 405
  12 அச்சுக் கட்டணம் செலுத்தியது 500
  16 வாடிக்கையாளாளர்களுக்கு சிற்றுண்டி கொடுத்தது 72
  20 பேனா மற்றும் மை வாங்கியது 183
  22 பயணச் செலவுக்கு கொடுத்தது 75
 44. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
  [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
  [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
  [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
  [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
  [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Quaterly Model Question Paper )

Write your Comment