பிழைத் திருத்தம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. விதிப்பிழை எழுவது

  (a)

  ஒரு நடவடிக்கை முழுவதும் விடுபடும்போது

  (b)

  ஒரு நடவடிக்கை பகுதி விடுபடும்போது

  (c)

  முதலினம் மற்றும் வருவாயினத்தை வேறுபடுத்தாத போது

  (d)

  பேரேட்டில் தவறாக எடுத்து எழுதுதல் மற்றும் தவறாகக் கூட்டும்போது

 2. இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது

  (a)

  பகுதி விடு பிழை

  (b)

  விதிப் பிழை

  (c)

  முழு விடு பிழை

  (d)

  இருமுறை பதிந்த பிழை

 3. செங்குட்டுவனால் சரக்கு திருப்பித் தரப்பட்டு சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டு ஆனால் ஏடுகளில் பதிவேதும் செய்யப்படவில்லை. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

  (a)

  செங்குட்டுவன் கணக்கு

  (b)

  விற்பனைத் திருப்பக் கணக்கு

  (c)

  வெளித் திருப்பக் கணக்கு

  (d)

  கொள்முதல் திருப்பக் கணக்கு

 4. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

  (a)

  கொள்முதல் கணக்கு

  (b)

  அனாமத்துக் கணக்கு

  (c)

  கடனீந்தோர் கணக்கு

  (d)

  மேற்கண்டது ஏதும் இல்லை

 5. கீழ்க்கண்ட பிழைகளில் எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?

  (a)

  கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

  (b)

  நரேந்திரனால் சரசரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.

  (c)

  அகிலாவால் ரூ.900 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  (d)

  ரவிவர்மனுக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது

 6. 3 x 2 = 6
 7. கீழ்க்காணும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
  (அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகையை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதும் போது ரூ.100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
  (ஆ)கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத் தொகையைகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.200 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
  (இ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.300 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
  (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.400 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது

 8. பிழைத் திருத்தம் என்றால் என்ன?

 9. முழு விடு பிழை என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
  (அ) ஆனந்துக்கு ரூ.1,000 த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
  (ஆ) இயந்திரம் பழுதுபார்ப்புக்கு ரூ.400 செலுத்தியது, தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
  (இ) காந்திராஜ்-க்கு ரூ.2,000 சம்பளம் செலுத்தியது, பேரபேரேட்டில் தவறாக அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

 12. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் போது கண்டறியப்பட்டன. திருத்தப் பதிவுகளைத் தருக.
  (அ) புவனா ரூ.100 மதிப்புள்ள சரக்கினைத் திருப்பியளித்தார். இது சரக்கிருப்பில் சேர்க்கப்பட்டும், கணக்கு ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
  (ஆ) மணிக்கு ரூ.475 க்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.745 எனப் பதிவு செய்யப்பட்டது.
  (இ)சந்தியாவிடமிருந்து பெற்ற ரூ.500 க்கான காசோலை மறுக்கப்பட்டது, படிகள் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
  (ஈ) சந்த உபயோகத்திற்காக உரிமையாளரால் ரொக்கம் ரூ.300 எடுக்கப்பட்டது, கூலி கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

 13. இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?

 14. 2 x 5 = 10
 15. பின்வரும் பிழைகள் இருப்பா்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டவை. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
  (அ) அனிதாவுக்கு ரூ.50 செலுத்தியது தவறாக வனிதாவின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
  (ஆ) ரூ.500-க்கு அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
  (இ) நடராஜனிடமிருந்து கடனுக்கு ரூ.750-க்கு சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  (ஈ) இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

 16. (அ) கடனுக்கு மேகலாவுக்கு ரூ.102-க்கு சரக்கு விற்றதற்கான பதிவு பேரேட்டில் மேகலாவின் கணக்கில் ரூ.120 என எடுத்து எழுதப்பட்டது.
  (ஆ) அளித்த தள்ளுபடிப் பத்தியின் மாதக் கூட்டுத்தொகை ரூ.100 பேரேட்டில் பெற்ற தள்ளுபடிக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டது..
  (இ) மன்னன் ரூ.275 செலுத்தியது கண்ணன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
  (ஈ) அலுவலக உபயயோகத்திற்காக எழுதுபொருள் வாங்க ரூ.26 ரொக்கம் செலுத்தியதற்கான ரொக்க ஏட்டில் உள்ள பதிவு பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
  (உ) கொள்முதல் ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - பிழைத் திருத்தம் Book Back Questions ( 11th Accountancy - Rectification Of Errors Book Back Questions )

Write your Comment