முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. சொத்து கணக்கு கையாள்வது

    (a)

    தனிப்பட்ட நபர்கள்

    (b)

    செலவுகள் மற்றும் இழப்புகள்

    (c)

    சொத்துகள்

    (d)

    வருமானம் மற்றும் இலாபங்கள்

  3. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  4. இருப்பாய்வு என்பது ஒரு

    (a)

    அறிக்கை

    (b)

    கணக்கு

    (c)

    பேரேடு

    (d)

    குறிப்பேடு

  5. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

    (a)

    பற்றுக் குறிப்பு

    (b)

    வரவு குறிப்பு

    (c)

    இடாப்பு

    (d)

    ரொக்க இரசீது

  6. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  7. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  8. 6 x 2 = 12
  9. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.

  10. கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?

  11. சொத்து கணக்கு என்றால் என்ன?

  12. இருப்பாய்வின் படிவம் தருக

  13. வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?

  14. வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

  15. 7 x 3 = 21
  16. கணக்கியலின் முக்கியத்துவத்தினை விரிவாக விளக்குக

  17. கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  18. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

  19. கீழ்க்கண்ட இருப்பாய்வில் சில பிழைகள் உள்ளன. அவற்றைவற்றை சரிசெய்து மீண்டும் ஒரு இருப்பாய்வைத் தயாரிக்கவும்.

    31-03-2017 -ஆம் நாளைய இருப்பாய்வு
    கணக்கின் பெயர் பற்று ரூ வரவு ரூ
    கட்டடம் 60,000  
    இயந்திரம் 17,000  
    கொள்முதல் திருப்பம் 2,600  
    வாராக்கடன் 2,000  
    ரொக்கம் 400  
    பெற்றெற்றத் தள்ளுபடி 3,000  
    வங்கி மேல்வரைப்பற்று 10,000  
    கடனீந்தோர் 50,000  
    கொள்முதல் 1,00,000  
    முதல்   72,800
    பொருத்துகைகள்   5,600
    விற்பனை   1,04,000
    கடனாளிகள்   60,000
    வட்டி பெற்றெற்றது   2,600
    மொத்தம் 2,45,000 2,45,000
  20. எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.

  21. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக

  22. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய ரொக்க  ஏட்டின் படியான இருப்பைக் கண்டறிக

      விவரம் ரூ
    1 வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று 6,500
    2 வங்கியில் செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படவில்லை 10,500
    3 விடுத்த காச�ோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000
    4 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது 500
    5 வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி 180
    6 சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 100
  23. 4 x 5 = 20
  24. பின்வரும் நடவடிக்கைகளை ஜவுளி வியாபாரம் செய்யும் மனோகர் அவர்களின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.

     2018
     மார்ச் 
       ரூ 
    1   மனோகர் வியாபாரம் தொடங்க கொண்டு வந்த ரொக்கம்        60,000
    2   ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 10,000
    3   ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 25,000
    6   கமலே சிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 15,000
    8   ரொகத்திற்கு சரக்கு விற்பனை செய்தது 28,000
    10   ஹரிக்கு கடனுக்கு சரக்கு விற்பனை செய்தது 10,000
    14   கமலேசிற்கு செலுத்திய ரொக்கம் 12,000
    18   வாடகை செலுத்தியது 500
    25   ஹரியிடமிருந்து பெற்ற ரொக்கம் 8,000
    28   சொந்தப் பயன்பாட்டிற்காக பணம் எடுத்தது 4,000
  25. பானு என்பவரது ஏடுகளில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்து எழுதவும்.

    2018 செப் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.90,000 வ
    5 வாடகைப் பெற்றது 4,000
    12 கோபுவிடமிருந்து 6 மேஜைகளை ரொக்கத்திற்கு வாங்கியது 6,000
  26. ராஜேஷ் என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் இருப்புகளைக் கொண்டு 31.3.2017 ஆம் நாளுக்குரிய இருப்பாய்வைத் தயாரிக்கவும்

      ரூ   ரூ
    பெறுதற்குரிய  மாற்றுச்சீட்டு 13,000 எடுப்புகள் 7,000
    வங்கிக் கட்டணம் 750 பற்பல கடனாளிகள் 17,100
    பயணச் செலவுகள் 350 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 12,000
    பெற்றத் தள்ளுபடி 1,300 முதல் 25,900
    கையிருப்பு ரொக்கம் 1,000    
  27. கீழே  கொடுக்கப்பட்டுள்ள  விவரங்களிலிருந்து ஜான் வியாபார நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்.
    (அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ 4,000
    (ஆ) ரொக்க  ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 மார்ச் 26 அன்று வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 2,000, 2018 ஏப்ரல் 4 அன்று வங்கி அறிக்கையில் பதியப்பட்டது
    (இ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வங்கியால் பெறப்பட்ட தொகை  ரூ 5,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஈ) ஜான் நிறுவனத்தின் கணக்கில் ரூ 3,000 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது குறித்த தகவல்கள் எதுவும் தெரியப்படுத்தவில்லை
    (உ) 2017 மார்ச் 29 அன்று வரை வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்பட்ட மாற்றுச்சீட்டு ரூ 4,000 குறித்த தகவல்கள் ஏதும் ஜான் நிறுவனத்திற்கு தரப்படவில்லை
    (ஊ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய மின்சாரக்ன்சாரக் கட்டணம் ரூ 900 ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதிவதற்கு பதிலாக ரொக்கப்பத்தியில் தவறுதலாக பதியப்பட்டது.
    (எ) ரொக்க  விற்பனை தவறுதலாக ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்தியில் பதியப்பட்டது ரூ 4,000

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term 1 Model Question Paper )

Write your Comment