இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது

  (a)

  நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்

  (b)

  வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்

  (c)

  நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

  (d)

  வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்

 2. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து

  (a)

  பண மதிப்பீட்டுக் கருத்து

  (b)

  அடக்கவிலை கருத்து

  (c)

  வணிகத்தனித்தன்மை கருத்து

  (d)

  இரட்டைத்தன்மை கருத்து

 3. சொத்து கணக்கு கையாள்வது

  (a)

  தனிப்பட்ட நபர்கள்

  (b)

  செலவுகள் மற்றும் இழப்புகள்

  (c)

  சொத்துகள்

  (d)

  வருமானம் மற்றும் இலாபங்கள்

 4. உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  எடுப்புகள் கணக்கு

  (b)

  ரொக்கக் கணக்கு

  (c)

  முதல் கணக்கு

  (d)

  கொள்முதல் கணக்கு

 5. பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.

  (a)

  கூட்டுதல்

  (b)

  எடுத்தெழுதுதல்

  (c)

  குறிப்பேட்டில் பதிதல்

  (d)

  இருப்புக் கட்டுதல்

 6. கு.ப.எ. என்பது

  (a)

  பேரேட்டு பக்க எண்

  (b)

  குறிப்பேட்டு பக்க எண்

  (c)

  சான்று சீட்டு எண்

  (d)

  ஆணை எண்

 7. இருப்பாய்வு என்பது ஒரு

  (a)

  அறிக்கை

  (b)

  கணக்கு

  (c)

  பேரேடு

  (d)

  குறிப்பேடு

 8. பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்

  (a)

  குறிப்பேடு

  (b)

  நாளேடு

  (c)

  இருப்பாய்வு

  (d)

  இருப்பு நிலைக் குறிப்பு

 9. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

  (a)

  கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

  (b)

  விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

  (c)

  கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

  (d)

  விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

 10. விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்

  (a)

  பற்றுக் குறிப்பு

  (b)

  வரவு குறிப்பு

  (c)

  இடாப்பு

  (d)

  ரொக்க இரசீது

 11. ரொக்க ஏடு ஒரு

  (a)

  துணை ஏடு

  (b)

  முதன்மை ஏடு

  (c)

  உரிய குறிப்பேடு

  (d)

  துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

 12. சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு

  (a)

  ஒரு செலவு

  (b)

  ஒரு இலாபம்

  (c)

  ஒரு சொத்து 

  (d)

  ஒரு பொறுப்பு 

 13. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

  (a)

  வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு

  (b)

  வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு

  (c)

  ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று

  (d)

  மேற்கூறிய ஏதுமில்லை

 14. இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்

  (a)

  விதிப்பிழைகள்

  (b)

  அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்

  (c)

  குறைவாகக் கூட்டுதல் பிழைகள்

  (d)

  பகுதி விடு பிழைகள்

 15. நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,

  (a)

  ஆண்டுதோறும் அதிகரிக்கும்

  (b)

  ஆண்டுதோறும் குறையும்

  (c)

  அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்

  (d)

  ஆண்டுதோறும் மாறக்கூடியது

 16. சொத்தின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் காலப்போக்கில் அதிகரிக்கும் போது பின்வரும் தேய்மான முறைகளுள் எது சிறந்தது?

  (a)

  நேர்கோட்டு முறை

  (b)

  குறைந்து செல் இருப்பு முறை

  (c)

  தேய்மான நிதி முறை

  (d)

  ஆண்டுத் தொகை முறை

 17. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்

  (a)

  வருவாயினச் செலவுகள்

  (b)

  முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்

  (c)

  நீள்பயன் வருவாயினச் செலவுகள்

  (d)

  முதலினச் செலவுகள்

 18. வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்

  (a)

  எடுப்புகளை

  (b)

  பெறுதல்களை

  (c)

  பொறுப்புகளை

  (d)

  முதலினை

 19. பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?

  (a)

  ரொக்கம்

  (b)

  சரக்கிருப்பு

  (c)

  அறைகலன்

  (d)

  முன்கூட்டிச் செலுத்திய செலவு

 20. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.

  (a)

  இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்

  (b)

  இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

  (c)

  மேற்கண்ட இரண்டிலும்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 21. 7 x 2 = 14
 22. கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.

 23. ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?

 24. பேரேடு என்றால் என்ன?

 25. இருப்பாய்வு என்றால் என்ன?

 26. இடாப்பு என்றால் என்ன?

 27. சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?

 28. முழு விடு பிழை என்றால் என்ன?

 29. 7 x 3 = 21
 30. கணக்கியலின் பொருளை விளக்குக.

 31. ‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.

 32. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

   (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
   (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
   (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
   (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
 33. பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

 34. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக

 35. இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?

 36. முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.

 37. 7 x 5 = 35
 38. பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
  (i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
  (ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
  (iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
  (iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
  (v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
  (vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400

 39. கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்

  2015 மார்ச் 1 சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது ரூ.5,000
  7 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 300
  15 வட்டி பெற்றது 1,800
 40. பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.

  கணக்கின் பெயர் ரூ கணக்கின் பெயர் ரூ
  கொள்முதல் 1,00,000 விற்பனை 1,50,000
  வங்கிக் கடன் 75,000 கடனீந்தோர் 50,000
  கடனாளி 1,50,000 ரொக்கம் 90,000
  சரக்கிருப்பு 35,000 முதல் 1,00,000
 41. பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் கொள் முதல் ஏடு, கொள் முதல் திருப்ப ஏடு, விற்பனை ஏடு, விற்பனைத்திருப்ப ஏடு ஆகியவற்றில் பதிவு செய்க.

  2017  
  ஜனவரி 1 பிரித்தி நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
    25 மேசை விசிறிகள் ஒன்று ரூ. 1,400 வீதம்
    10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம்
    ஆட்டோ கட்டணம் ரூ. 100 சேர்க்க்க்கவும்
  ஜனவரி 5 ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்றது
    10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம்
    20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம்
    வியாபாரத்தள்ளுபடி 10% குறைக்கவும்
  ஜனவரி 10 பிருந்தா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது
    10 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 1,300 வீதம்
  ஜனவரி 18 பிரித்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது
    5 மேசை விசிறிகள் குறைபாட்டுடன் இருந்தன. அதற்கான்கான ரொக்கம் பெறப்படவில்லை
  ஜனவரி 20 சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது.
    10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,200 வீதம்
    வியாபாரத்தள்ளுபடி 5% நீக்கவும்
  ஜனவரி 21 ஷீலா விற்பனையகித்திடமிருந்து 3 மின் தேய்ப்பான்கள் குறைபாடு காரணமாக திருப்பி வந்தது. அதற்கான ரொக்கம் செலுத்தப்படவில்லை
  ஜனவரி 23 எலிசபெத் நிறுவனத்திடமிருந்து 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரூ. 4,700 வீதம் கடனுக்கு வாங்கப்பட்டது
  ஜனவரி 25 பவானி நிறுவனத்திற்கு கடனுக்கு விற்றது 7 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம்
  ஜனவரி 27 சத்யா மின் பொருளகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 சேதமடைந்த மின் விசிறிகளுக்கான ரொக்கம் பெறப்படவில்லை.
 42. 2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

  மே   ரூ 
  1 கையிருப்பு ரொக்கம்  40,000
  5 ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம்  4,000
  7 கூலி ரொக்கமாக  கொடுத்தது 2,000
  10 சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 6,000
  15 ரொக்கத்திற்கு விற்பனை செய்த 9,000
  18 கணிப்பொறி வாங்கியது 15,000
  22 சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது 5,000
  28 சம்பளம் கொடுத்தது 2,500
  30 வட்டிப் பெற்றது 500
 43. சிவா என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார, இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

   விவரம்   ரூ   விவரம்   ரூ 
    சரக்கிருப்பு (01.01.2016)          9,000   வாராக்கடன்        1,200
    கொள்முதல்  22,000   இதரச் செலவுகள்   1,800
    விற்பனை 42,000   அளித்த தள்ளுபடி 1,700
    கொள்முதல் மீதான செலவுகள்    1,500   விற்பனை மீதான செலவுகள்   1,000
    வங்கிக் கட்டணம் செலுத்தியது  3,500   அலுவலக அறைகலன் மீதான பழுது பார்ப்புச் செலவுகள் 600

  சரிக்கட்டுதல்கள்:
  (அ) 31.12.2016 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ரூ 4,500
  (ஆ) மேலாளர் அவருக்குரிய கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெறுகிறார்.

 44. அஜித் அவர்களின் கீழ்க்காணும் இருப்பாய்வு மற்றும் சரிக்கட்டுதல்களிலிருந்து 2016, மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

   விவரம்   பற்று ரூ   விவரம்   வரவு ரூ 
    தொடக்கச் சரக்கிருப்பு         15,000   முதல்      25,000
    அறைகலனும் பொருத்துகைகளும்     30,000   வெளித் திருப்பம்     1,000
    கொள்முதல் 40,000   செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு    10,000
    விற்பனைத் திருப்பம் 2,000   விற்பனை 1,24,000
    உள்தூக்குக் கூலி 10,000   வாரா ஐயக்கடன் ஒதுக்கு 500
    அலுவலக வாடகை 23,000   கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு 100
    பற்பல கடனாளிகள் 20,100    
    வங்கியிருப்பு 19,600    
    வாராக்கடன் 900    
    1,60,600   1,60,600

  சரிக்கட்டுதல்கள்:
  (அ) கணக்காண்டு இறுதியில் சரக்கிருப்பு ரூ 8,000
  (ஆ) கூடுதல் வாராக்கடன் ரூ 100
  (இ) பற்பல கடனாளிகள் மீது 2% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
  (ஈ) பற்பல கடனாளிகள் மீது 1% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Accountancy - Term II Model Question Paper )

Write your Comment