துணை ஏடுகள் - I மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது

    (a)

    அனைத்து சரக்குகளின் கொள்முதல்

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்

    (d)

    அனைத்து சொத்துக்களின் கொள்முதல்

  2. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

    (a)

    கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

    (b)

    விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

    (c)

    கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

    (d)

    விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

  3. நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு

    (a)

    கொள்முதல் ஏடு

    (b)

    விற்பனை ஏடு

    (c)

    கொள்முதல் திருப்ப ஏடு

    (d)

    உரிய குறிப்பேடு

  4. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

    (a)

    ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (b)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

    (c)

    வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (d)

    மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை
    நாட்களாகக் கூட்டப்படுகின்றன

  5. எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது

    (a)

    விற்பனை ஏடு 

    (b)

    கொள்முதல் ஏடு

    (c)

    முறையான குறிப்பேடு 

    (d)

    எந்திரம் கணக்கு

  6. கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.

    (a)

    சரிக்கட்டுப் பதிவுகள்

    (b)

    திருத்தப் பதிவுகள்

    (c)

    மாற்றுப் பதிவுகள்

    (d)

    குறிப்பேட்டுப் பதிவுகள்

  7. மறுப்புச் சான்றிதழை வழங்குபவர்

    (a)

    பொதுக்குறிப்பர்

    (b)

    எழுதுநர் 

    (c)

    எழுதுப்பெறுநர் 

    (d)

    செலுத்தப் பெறுநர்

  8. மாற்றுச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள தொகையைப் பெறுபவர் ______.

    (a)

    எழுதுப் பெறுநர்

    (b)

    எழுதுநர்

    (c)

    செலுத்தப் பெறுநர்

    (d)

    உரிமையர்

  9. வியாபாரத் தள்ளுபடியின் நோக்கம்

    (a)

    விற்பனையை அதிகப்படுத்துவது

    (b)

    குறைந்த விலையில் பொருட்களை விற்பது

    (c)

    ரொக்க விற்பனையை ஊக்கப்படுத்துதல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  10. மாற்றுச்சீட்டின் மீது வழங்கப்படும் சலுகை நாட்கள்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  11. 5 x 2 = 10
  12. ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.

  13. கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?

  14. கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?

  15. துணை ஏடுகள் என்றால் என்ன? 

  16. வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?    

  17. 5 x 3 = 15
  18. கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.

  19. துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?

  20. மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?    

  21. குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு  

  22. விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.

  23. 3 x 5 = 15
  24. பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:

    2017
    மார்ச் 1
    மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம்
      2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம்
      இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக
    மார்ச்  7 இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம்
      10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம்
    மார்ச் 21 காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
      10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம்
      15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம்
      இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250
      இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக.
    மார்ச் 25 சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து
      2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம்
    அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது.
  25. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
    5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
    12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
    18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
    20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
  26. பின்வரும் நடவடிக்கைகளை மின்சாதனங்களை விற்பனைச் செய்யும் சுபஸ்ரீ மின் பொருள் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஏப்ரல் 5  கார்த்திக் மின் பொருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது.
    10 மின் தேய்ப்பான் ஒன்று ரூ.2,500 வீதம்
    5 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.2,000 வீதம்
    ஏப்ரல் 19   கேதான் மின் பொருளகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
    3 மின்சார நீர்சூடேற்றி  ஒன்று ரூ.6,000 வீதம்
    ஏப்ரல் 25 போலார் மின் பொருள் விற்பனையகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
    10 மின் விசிறிகள் ஒன்று ரூ.2,000 வீதம்
    ஏப்ரல் 29 M நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது.
    10 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.3,000 வீதம்

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் Unit 6 துணை ஏடுகள் - I மாதிரி வினாத்தாள் ( 11th Accountancy Unit 6 Subsidiary Books - I Model Question Paper )

Write your Comment