+1 Full Test Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.

    (a)

    கணக்கு

    (b)

    நடவடிக்கை

    (c)

    சான்றுச்சீட்டு

    (d)

    இடாப்பு

  3. இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு

    (a)

    முக்கியத்துவ மரபு

    (b)

    பண மதிப்பீட்டுக் கருத்து

    (c)

    முன்னெச்சரிக்கை மரபு

    (d)

    நிகழ்வு தீர்வு / கருத்து

  4. சுகுமார் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.

    (a)

    சுகுமார் க/கு

    (b)

    ரொக்க க/கு

    (c)

    கொள்முதல் க/கு

    (d)

    வங்கி க/கு

  5. ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்

    (a)

    வரவு இருப்பு

    (b)

    பற்று இருப்பு

    (c)

    இருப்பு இன்மை

    (d)

    பற்றும் மற்றும் வரவு இருப்பு

  6. முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும். 

    (a)

    தொடக்க இருப்பு 

    (b)

    இறுதி இருப்பு

    (c)

    இலாபங்கள் 

    (d)

    நட்டங்கள் 

  7. பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது

    (a)

    வியாபாரக்ாபாரக் கணக்கு

    (b)

    இருப்பாய்வு

    (c)

    குறிப்பேடு

    (d)

    இலாபநட்டக் கணக்கு

  8. விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?

    (a)

    அனைத்து சரக்குகளின் விற்பனை

    (b)

    அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை

    (c)

    அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை

    (d)

    அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை

  9. தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.

    (a)

    சாதாரண ரொக்க ஏடு

    (b)

    இருபத்தி ரொக்க ஏடு

    (c)

    முப்பத்தி ரொக்க ஏடு

    (d)

    சில்லறை ரொக்க ஏடு

  10. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

    (a)

    செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

    (b)

    விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

    (c)

    வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

    (d)

    ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

  11. அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்ள்முதல் கணக்கு

    (b)

    அறைகலன் கணக்கு

    (c)

    அதியமான் கணக்கு

    (d)

    இவை ஏதுமில்லை

  12. ______________ கணக்காளரின் ஒருமுகப்படுத்தல் இல்லாததாலும், கவனமின்மையாலும் நிகழ்வதாகும். 

    (a)

    பகுதி விடுபிழை

    (b)

    செய்பிழை

    (c)

    விதிப்பிழை

    (d)

    விடுபிழை

  13. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

    (a)

    இலாப நட்டக் கணக்கு

    (b)

    நிலைச் சொத்து கணக்கு

    (c)

    தேய்மானக் கணக்கு

    (d)

    வங்கி கணக்கு

  14. வங்கி வைப்புகள் மீதான வட்டி

    (a)

    முதலின வரவு

    (b)

    வருவாயின வரவு

    (c)

    முதலினச் செலவு

    (d)

    வருவாயினச் செலவு

  15. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  16. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

    (a)

    ஓர் நடப்புச் சொத்து

    (b)

    ஓர் நீர்மைச் சொத்து

    (c)

    புலனாகும் சொத்து

    (d)

    புலனாகாச்சொத்து

  17. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.

    (a)

    வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (b)

    பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

    (c)

    வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்

    (d)

    இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்

  18. 1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.   

    (a)

    ரூ 30,000

    (b)

    ரூ 5,00,000

    (c)

    ரூ 4,70,000

    (d)

    ரூ 5,30,000

  19. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது

    (a)

    கணினி அமைப்பு செயலிழத்தல்

    (b)

    துல்லியத்தன்மை

    (c)

    பலதுறைப் புலமை

    (d)

    தேக்ககம்

  20. கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________. 

    (a)

    உரிமையாளர் 

    (b)

    பணியாளர்கள்  

    (c)

    பயனாளிகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  21. II. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. இடாப்பு என்றால் என்ன? 

  23. கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.

  24. குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?

  25. ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.

  26. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
    (அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
    (ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.

  28. ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?

  29. கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
    (i) நிலைச்சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 10,000.
    (ii) பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை .
    (iii) புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொண்ட செலவு.
    (iv) தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை.

  30. வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

  31. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  32. III.ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

  34. பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.

     (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது       ரூ 60,000
     (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது   ரூ 20,000
     (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது       ரூ 15,000
     (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது   ரூ 500
  35. குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.

  36. முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்

    விவரம் ரூ விவரம் ரூ
    விற்பனை 35,000 தணிக்கைக் கட்டணம் 1,000
    வட்டி செலுத்தியது 350 நகர நுழைவு வரி 8,000
    உள் திருப்பம் 2,500 நிலம் 90,000
    தேய்மானம் 2,400 முதல் 60,000
    அலுவலக வாடகை 2,000 வங்கி மேல்வரைப்பற்று 11,250
  37. எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.

  38. வங்கியில் ரொக்கம்  செலுத்தும்போது ரொக்க  ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக

  39. அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்

  40. தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?

  41. சொத்துகள் மற்றும் பொறுப்புகளை குழுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் என்றால் என்ன?

  42. 2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
    (i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
    (ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
    (iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
    (iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
    (v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    7 x 5 = 35
    1. மேரி என்ற அரிசி வியாபாரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். அவருடைய குறிப்பேட்டில் 2018 மார்ச் மாதத்திற்கான நடவடிக்கைகளை பதிவு செய்க.

       மார்ச்       ரூ 
      1   சிபி என்பவரிடமிருந்து அரிசி மூட்டைகள் கடன் கொள்முதல் செய்தது     20,000
      2   இணைய வங்கி மூலமாக மின்கட்டணம் செலுத்தியது 500
      3   சிபியிடமிருந்து வாங்கிய சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட 5,000
      4   சொந்தப் பயன்பாட் டிற்காக எடுத்த அரிசி மூட்டைகள் மதிப்பு 1,000
      5   விளம்பரக் கட்டணம் செலுத்தியது 2,000
      6   மனோ என்பவருக்கு சரக்கு கடனுக்கு விற்றது 20,000
      7   மனோ என்பவரால் சரக்கு திருப்பியனுப்பப்பட்டது 5,000
      8   மனோவிடமிருந்து பெற வேண் டிய தொகை மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது  
    2. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

      அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
      ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
      இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
      ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
    1. கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதுக.

      2016 செப் 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.80,000
      7 ரூபன் என்பவரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 10,000
      10 ஹேமா என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 42,000
      22 ஹேமாவிற்கு திருப்பிய சரக்கு 2,000
      23 ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது 10,000
    2. பின்வரும் இருப்புகள் பாஸ்கர் என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவருடைய இருப்பாய்வு தயாரிக்கவும். இருப்பாய்வு சமன்படாவிட்டால் வேறுபாட்டினை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்

        ரூ   ரூ
      தொடக்கச் சரக்கிருப்பு 40,000 கடனாளிகள் 25,000
      முதல் 90,000 உள்தூக்குக் கூலி 16,500
      விற்பனை 1,77,200 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
      சம்பளம் 12,000 கழிவுப் பெற்றது 5,550
      செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 9,450 வங்கி ரொக்கம் 17,000
      தொலைபேசிக் கட்டணம் 2,350 அறைகலன் 19,000
      கடனீந்தோர் 16,000 பொறி இயந்திரம் 55,800
      கொள்முதல் 85,000 பழுதுபார்ப்புச் செலவு 550
    1. பின்வரும் நடவடிக்கைகளை எழுது பொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.

      2017  
      ஜனவரி 1 அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ரூ. 150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள்.
      ஜனவரி 2 ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ரூ. 360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்றது.
      ஜனவரி 10 பழைய செய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ரூ. 620
      ஜனவரி 15 இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 170 வீதம் 10 வரைவு அட்டைகள்
      ஜனவரி 20 கனி விற்பனையகத்திற்கு ஒன்று ரூ. 1,520 வீதம் 4 எழுது மேசைகளை ரொக்கத்திற்கு விற்றது
    2. கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.

      2017 ஜூலை    ரூ
      1 காசாளரிடமிருந்து முன்பணம் பெற்றது 2,000
      7 மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது 100
      8 வெள்ளைவெள்ளைத் தாள்கள் வாங்கியது 50
      10 ஆட்டோ ரிக்ஷா கட்டணம் கொடுத்தது 200
      15 கூலி கொடுத்தது 300
      18 தபால் செலவுகள் செய்தது 100
      21 எழுது பெருள்கள் வாங்கியது 450
      23 தேநீர் செலவுகள் செய்தது 60
      25 துரித அஞ்சல் செலவு செய்தது 150
      27 சிற்றுண்டி செலவுகள் செய்தது 250
      31 ஏற்றிச் செல் செலவுகள் செய்தது 150
    1. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சிவா நிறுவனத்தின் டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
      (அ) ரொக்க  ஏட்டின் படியான வரவிருப்பு ரூ 12,000
      (ஆ) ரூ  1,200 மதிப்புள்ள காசோலை  விடுத்து செலுத்துகைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது தவறுதலாக ரொக்க ஏட்டில் ரூ  2,100 என வரவு வைக்கப்பட்டது.
      (இ) வங்கி அறிக்கையின் பற்றுப் பக்கம் ரூ  100 குறைவாகக் கூட்டப்பட்டது

    2. பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
      [அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
      [ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
      [இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
      [ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
      [உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
      [ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.         

    1. பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
      (அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
      ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை

    2. ஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.

    1. பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
      (i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
      (ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
      (iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
      (iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
      (v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.

    2. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

      விவரம் ரூ விபரம் ரூ
      மொத்தம் இலாபம் 50,000 வட்டி பெற்றது 2,000
      அலுவலக வாடகை 10,000 தள்ளுபடி பெற்றது 3,000
      அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் 8,000 வெளிதூக்குக் கூலி 2,500
      தள்ளுபடி கொடுத்தது 12,000 அலுவலக கட்டடம் மீதான காப்பீடு 3,500
      விளம்பரம் 4,000 பொதுச் செலவுகள் 3,000
      தணிக்கைக் கட்டணம் 1,000 உள் ஏற்றிச் செல் செலவு 1,000
    1. சங்கீதாவின் ஏடுகளில் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்க.

       விவரம்   ரூ   விவரம்   ரூ 
        முதல்     20,000   சம்பளம்         6,600
        பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு     8,000   நிறுவுகைச் செலவுகள்    4,500
        செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு     10,500   விளம்பரம் 2,300
        கொள்முதல் 75,000   அறைகலன் 10,000
        விற்பனை 95,000   வங்கி ரொக்கம் 3,200
        தொடக்கச் சரக்கிருப்பு 12,000   இதர வரவுகள் 600
        எடுப்புகள் 4,500    

      சரிக்கட்டுதல்கள்:
      (அ) மார்ச் 31, 2018 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,200
      (ஆ) சங்கீதாவின் வருமானவரி செலுத்தியது ரூ 800
      (இ) எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டுக்கு அனுமதிக்கவும்.
      (ஈ) மேலாளருக் குரிய கழிவு, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% தரப்பட வேண்டும்.

    2. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
      1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
      2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
      3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
      4. Practical Auditing – B N Tandon - 30 Nos.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழுத் தேர்வு ( 11th std Accountancy Full Test Question )

Write your Comment