+1 Full Test ( Public Model )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    20 x 1 = 20
  1. நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

    (a)

    கடனீந்தோர்

    (b)

    பணியாளர்

    (c)

    வாடிக்கையாளர்

    (d)

    அரசு

  2. திருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.

    (a)

    சொத்துகள்

    (b)

    பொறுப்புகள்

    (c)

    பற்று

    (d)

    வரவு

  3. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

    (a)

    வணிக தனித்தன்மை கருத்து

    (b)

    நிறுவன தொடர்ச்சி கருத்து

    (c)

    கணக்கியல் கால அனுமானம்

    (d)

    முன்னெச்சரிக்கை கொள்கை

  4. நடவடிக்கையின் தோற்றம் பெறுவது

    (a)

    குறிப்பேடு

    (b)

    ஆதார ஆவணங்கள்

    (c)

    கணக்கியல் சமன்பாடு

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  6. நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர். 

    (a)

    சரிக்கட்டுப்பதிவு 

    (b)

    இறுதிப் பதிவு 

    (c)

    தொடக்கப் பதிவு 

    (d)

    குறிப்பேடு 

  7. கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

    (a)

    அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.

    (b)

    இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

    (c)

    கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  8. பின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல ?

    (a)

    ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (b)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது உரிய குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுகிறது

    (c)

    வியாபாரத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது

    (d)

    மாற்றுச்சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும்போது மூன்று நாட்கள் சலுகை
    நாட்களாகக் கூட்டப்படுகின்றன

  9. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  10. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

    (a)

    வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு

    (b)

    வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு

    (c)

    ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை

  11. கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?

    (a)

    ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்

    (b)

    பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்

    (c)

    ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்

    (d)

    ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்

  12. கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும். 

    (a)

    விடுபிழை 

    (b)

    பகுதி விடுபிழை

    (c)

    முழுவிடுபிழை

    (d)

    இருமுறை பதிந்தபிழை

  13. குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது

    (a)

    அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்

    (b)

    ஆண்டுதோறும் குறையும்

    (c)

    ஆண்டுதோறும் அதிகரிக்கும்

    (d)

    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

  14. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது

    (a)

    கடந்த காலத்திற்கு

    (b)

    எதிர் காலத்திற்கு

    (c)

    நடப்பு காலத்திற்கு

    (d)

    எந்த காலத்திற்கும்

  15. வருவாயின வரவுகள் தொழிலில் ________________ கொண்டவை.

    (a)

    அடிக்கடி நிகழும் தன்மை

    (b)

    அடிக்கடி நிகழாத் தன்மை

    (c)

    நிலையானது

    (d)

    இவை எதுவுமில்லை

  16. வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்

    (a)

    எடுப்புகளை

    (b)

    பெறுதல்களை

    (c)

    பொறுப்புகளை

    (d)

    முதலினை

  17. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.

    (a)

    வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்

    (b)

    இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்

    (c)

    இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்

    (d)

    இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்

  18. இலாப நட்டக் கணக்கு வெளிப்படுத்துவது ________. 

    (a)

    நிறுவனத்தின் நிதிநிலை 

    (b)

    நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் 

    (c)

    மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  19. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.

    (a)

    உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்

    (b)

    ஆயத்த கணக்கியல் மென்பொருள்

    (c)

    உள்கட்டமைக்கள்கட்டமைக்கப்பட்ட மென்ென்பொருள்

    (d)

    திருத்தியமைக்கப்பட்ட்பட்ட கணக்கியல் மென்பொருள்

  20. ________ என்பது ஒரு குறிப்பிட்டச் செயலை செய்வதற்காகவும்,எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை பெறுவதற்காகவுமான படிப்படியான தொடர் அறிவுறுத்தலாகும். 

    (a)

    தரவு 

    (b)

    வன்பொருள் 

    (c)

    மென்பொருள் 

    (d)

    செயல்படுமுறை 

  21. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. தேய்மானம் என்றல் என்ன?

  23. கணக்கேடுகள் பராமரிப்பின் பொருள் தருக.

  24. ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  25. தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?

  26. ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. கீழ்க்கண்ட பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
    (அ) விற்பனை ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
    (ஆ) விற்பனை ஏட்டில் ரூ. 200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
    (இ) கொள்ள்முதல் ஏட்டில் ரூ. 300 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
    (ஈ) கொள்முதல் ஏட்டில் ரூ.400 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது

  28. ஒரு நிறுமம் ரூ. 1,80,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக
    ரூ. 10,000 செலவழித்தது. எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் இறுதி மதிப்பு
    ரூ. 15,000. ஆண்டுதோறும் நீக்கப்படவேண்டிய தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.

  29. கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
    (i) நிலைச்சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 10,000.
    (ii) பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை .
    (iii) புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொண்ட செலவு.
    (iv) தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை.

  30. தொடக்கச் சரக்கிருப்பு என்றால் என்ன?    

  31. மென்பொருள் என்றால் என்ன?

  32. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியலின் பண்புகளை எழுதுக.

  34. கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக

     (அ)   சொத்துகள்    =    முதல்    +    பொறுப்புகள் 
       ரூ 1,00,000   =  ரூ 80,000 + ?
     (ஆ)  சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ரூ 2,00,000 = ? + ரூ 40,000
    (இ) சொத்துகள்  = முதல்  + பொறுப்புகள் 
      ? = ரூ 1,60,000 + ரூ 80,000
  35. குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.

  36. இருப்பாய்வின் குறைபாடுகள் யாவை?

  37. சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.

  38. வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.

  39. கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
    (அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
    (ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது.

  40. குமார் என்பவர் ஏப்ரல் 1, 2015 அன்று ரூ. 80,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை வாங்கி அதை நிறுவுவதற்கு ரூ. 20,000 செலவிட்டார். பயனளிப்பு காலம் 8 ஆண்டுகள் முடிந்தபின், இறுதி மதிப்பு ரூ. 4,000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 செப்டம்பர் 2017 அன்று அவ்வியந்திரம் ரூ. 50,000-க்கு விற்கப்பட்டது. நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ல் கணக்குகள் முடிக்கப்படுகிறது எனக்கொண்டு இயந்திர கணக்கு தயாரிக்கவும்.

  41. இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?

  42. 31.3.2016 அன்றைய இருபாய்வின்படி பற்பல கடனாளிகள் ரூ 10,000.
    சரிக்கட்டுதல்: வாராக்கடன் ரூ 300 போக்கெழுதவும்.
    சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் 2016, மார்ச் 31 ஆம் நாளன்றைய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

  43. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    7 x 5 = 35
    1. ஆனந்த் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்யும் வியாபாரி. பின்வரும் நடவடிக்கைகளுக்கு ஜனவரி 2018 இல் குறிப்பேட்டினை தயாரிக்க.

       ஜனவரி      ரூ 
      1   வியாபாரம் தொடங்க ரொக்கமிட்டது     70,000
      2   X நிறுவனத்திடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது   30,000
      3   வங்கியில் செலுத்திய ரொக்கம் 40,000
      4   L நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கட்டடம் வாங்கியது   95,000
      5   அலுவலகப் பயனுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது   5,000
      6   ஆனந்தின் சொந்தப் பயனுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது   4,000
      7   தொண்டு நிறுவனங்களுக்காக துண்டுகள் வழங்கியது 3,000
      8   ஆனந்த் தமது சொந்த பயன்பாட்டிற்காக சட்டைகள் எடுத்து கொண்டது   12,000
      9   மாதிரிகளாக வழங்கிய சேலைகளின் மதிப்பு 3,000
      10   சரக்குகள் (மேசை விரிப்புகள்) அலுவலகப் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டவை 200
    2. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

      அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
      ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
      இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
      ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
    1. வாசு என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டினைப் பதிவு செய்து, அதனை பேரேட்டில் எடுத்து எழுதவும்.

      2017 நவ 1 கையிருப்பு ரொக்கம் ரூ.1,00,000; வங்கியிருப்பு ரொக்கம்: ரூ.30,000
      2 வாசு, ஜோதி என்பவருக்கு சரக்கு விற்று உடனடியாக
      காசோலை பெறபெறப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது
      ரூ.25,000
      4 கழிவு பெற்றது ரூ.5,000
      8 வாசுவின் காப்பீட்டு முனைமத்தை வங்கி நேரடியாகச் செலுத்தியது ரூ.15,000
      15 வங்கியில் ரொக்கம் செலுத்தியது ரூ.30,000
      20 சொந்த செலவுகளுக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ.45,000
    2. பியர்ல் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

      விவரம் ரூ விவரம் ரூ
      முதல் 44,000 முதலீடு மீதான வட்டி 2,000
      பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 சுங்க வரி 3,000
      கூலி 800 கணிப்பொறி 20,000
      எடுப்புகள் 4,000 விற்பனை 72,000
      கொள்முதல் 75,000 தொடக்கச் சரக்கிருப்பு 10,200
    1. பின்வரும் நடவடிக்கைகளை இராம் வீட்டு உபயோகப்பொருள் நிறுவனத்தின் ஜூலை 2017 க்கான கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க. அதற்குரிய பேரேட்டு கணக்குகளையும் தயார் செய்யவும்:

      வியாபாரத் தள்ளுபடி 10%

      2017  
      ஜுலை 5 கண்ணன் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது
        50 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 500 வீதம்
        10 மாவரைரைக்கும் இயந்திரங்கள் ஒன்று ரூ. 3,000 வீதம்
      ஜூலை 6 சிவா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது
        25 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,250 வீதம்
      ஜூலை 10 பாலன் விற்பனையகத்திடம் கடனுக்கு வாங்கியது
        20 மாவரைரைக்கும் இயந்திரங்கள் ஒன்று ரூ. 2,500 வீதம்
        10 மின்னம்மிகள் ஒன்று ரூ. 3,000 வீதம்
        வியாபாரத் தள்ளுபடி 10%
        அனுப்புகைச் செலவுகள் ரூ. 1,000
      ஜூலை 20 குமாரிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஒரு நகல் எடுக்கும் இயந்திரம் ரூ. 35,000
    2. 2017, ஜுன் மாதத்தின் ராஜேஸ்வரியின் முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதியவும்.

      2017 ஜூன்   ரூ
      1 ரொக்க இருப்பு 30,000
        வங்கி இருப்பு 2,55,000
      5 சொந்த செலவிற்கு வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம் 7,500
      7 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 9,000
      8 நிர்மலாவிடமிருந்து பெற்ற காசோலை ரூ 9,900
      அவருடைய கணக்கு ரூ 10,000 முழுவதும் தீர்த்துக் கொள்ளப்பட்டது
       
      10 நிர்மலாவின் காசோலை வங்கிக்கு அனுப்பப்பட்டது  
      11 தனலெட்சுமி என்பவருக்கு சரக்குகளை கடனாக விற்றது 7,000
      16 நிர்மலாவின் காசோலை மறுக்கப்பட்டு திருப்பப்பட்டது  
      25 அலுவலகச் செலவுகளுக்காக வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ரொக்கம் 5,000
      28 செல்லதுரை என்ற வாடிக்கையாளர் எடுப்பு அட்டையைப்
      பயன்படுத்தி நமது கணக்கில் செலுத்தியது
      10,000
      30 பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் செலுத்திய ரொக்கம் 15,000
      30 வங்கி வரவு செய்த வட்டி  100
      30 ஆவின் நிறுவனத்திற்கு நிகழ்நேர மொத்த தீர்வகம் (RTGS) மூலம் பணம் செலுத்தியது  2,00,000
    1. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு  வீரா நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்க
      (அ) வங்கி அறிக்கையின் படியான வரவிருப்பு ரூ 6,000
      (ஆ) தேசிய மின்னணு பணப்பரிமாற்றம் (NEFT) வாயிலாக வங்கியால் பெறப்பட்ட தொகை  ரூ 3,500 ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
      (இ) மறுக்கப்பட்ட காசோலை  தொகை  ரூ 2,500 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
      [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
      [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
      [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
      [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

    1. பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
      (அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
      (ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
      (ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
      (உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
      ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை

    2. இராமு நிறுவனம் ஜூலை 1, 2016-ல் இயந்திரம் ஒன்றை ரூ. 14,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ரூ. 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணை முறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தந்து இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மான கணக்கினைத் தயாரிக்கவும்.

    1. பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
      (i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
      (ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
      (iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
      (iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000.

    2. வியாபாரி ஒருவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்ப்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.

      விவரம் ரூ விவரம் ரூ
      விற்பனை 72,250 கொள்முதல் 32,250
      தொடக்கச் சரக்கிருப்பு 7,600 விற்பனைத் திருப்பம்  1,250
      கொள்முதல் திருப்பம் 250 வாடகை 300
      அலுவலக அச்சு எழுது பொருள் செலவு 250 சம்பளம் 3,000
      இதரச் செலவுகள் 200 விற்பனை தொர்பான பயணச்
      செலவுகள்
      1,800
      விளம்பரம் 500 கழிவு செலுத்தியது 150
      பொதுச் செலவுகள் 2,500 அலுவலகச் செலவுகள் 1,600
      பங்காதாயம் பெற்றது 2,500 கூலி 2,600
      பழைய அறைகலன் விற்றதில் நட்டம் 300 முதலீடுகள் விற்றதில் ஏற்பட்ட இலாபம் 500
    1. திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.

       விவரம்   ரூ   விவரம்   ரூ 
        மொத்த இலாபம்       1,00,000   வட்டி பெற்றது        6,000
        வாடகை செலுத்தியது   22,000   வாராக்கடன் 2,000
        சம்பளம் 10,000   வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016)      4,000
        கழிவு (வ) 12,000   பற்பல கடனாளிகள் 40,000
        தள்ளுபடி பெற்றது 2,000   கட்டடம் 80,000
        காப்பீட்டு முனைமம் செலுத்தியது  8,000    

      சரிக்க ட்டுதல்க ள்:
      (அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
      (ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
      (இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
      (ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
      (உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
      (எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000.

    2. கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
      1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
      2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
      3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
      4. Practical Auditing – B N Tandon - 30 Nos.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு மாதிரி வினாத்தாள் பகுதி- 1 ( 11th Accountancy Model full portion Question Paper Part- 1 )

Write your Comment