வங்கிச் சரிகட்டும் பட்டியல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.

  (a)

  வங்கியரால்

  (b)

  வணிகத்தால்

  (c)

  வணிகத்தின் கடனாளிகளால்

  (d)

  வணிகத்தின் கடனீந்தோரால்

 2. ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் பற்றிருப்பு என்பது

  (a)

  வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு

  (b)

  வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு

  (c)

  ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று

  (d)

  மேற்கூறிய ஏதுமில்லை

 3. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல

  (a)

  காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு

  (b)

  சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

  (c)

  வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது

  (d)

  சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

 4. வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க  ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?

  (a)

  3,000 மேல்வரைப்பற்று

  (b)

  3,000 சாதகமான இருப்பு

  (c)

  1,000 மேல்வரைப்பற்று

  (d)

  1,000 சாதகமான இருப்பு

 5. பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?

  (a)

  செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது

  (b)

  விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது

  (c)

  வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை

  (d)

  ரொக்க  ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த

 6. 3 x 2 = 6
 7. வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?

 8. ரொக்க  ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக

 9. கீழ்கண்ட வாக்கியத்திற்கு ஒரு வார்த்தையில் விடை தருக
  (அ) வங்கியால் அளிக்கப்படும் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
  (ஆ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு
  (இ) ரொக்க  ஏட்டின் படி இருப்பு மற்றும் வங்கி அறிக்கையின் படி இருப்பு வேறுபடுவதற்கான காரணங்களை பட்டியலிடும் அறிக்கை

 10. 3 x 3 = 9
 11. ‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?

 12. வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.

 13. பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக

    விவரம் ரூ
  (i) வங்கி அறிக்கையின் படி இருப்பு 6,000
  (ii) டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் 2,000
  (iii) டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை  இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை 3,000
  (iv) வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை 4,000
  (v) கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 1,000
  (vi) வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை  500
 14. 2 x 5 = 10
 15. பின்வரும் தகவல்களிலிருந்து 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயாரித்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ
  1 ரொக்க ஏட்டின் படி இருப்பு 15,000
  2 செலுத்திய காசோலை  இன்னும் வரவு வைக்கப்படாதது 1,000
  3 2017 டிசம்பர் 31-க்கு முன்னர் விடுத்த காசோலை  ரொக்க ஏட்டில் பதியப்பெற்று அந்நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில் 1,500
  4 வங்கியால் நேரடியாகப் பெற்ற பங்காதாயம் 200
  5 வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பெற்ற வாடகை 1,000
  6 வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை ரொக்க ஏட்டில் பதியப்படவில் 1,200
  7 2017 டிசம்பர் 30 அன்று வங்கியால் செய்யசெய்யப்பட்ட தவறுதலான பற்று 500
  8 இணைய வங்கி வாயிலாக செலுத்தியது ரொக்க ஏட்டில் இரு முறை பதிவு செய்யப்பட்டது 300
 16. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ரஹீம் நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
  (அ) ரொக்க  ஏட்டின் படி மேல்வரைப்பற்று ரூ  2,500
  (ஆ) ரொக்க  ஏட்டின் பற்று பக்கம் ரூ  700 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
  (இ) நிகழ் நேர மொத்த  தீர்வகம் (RTGS) வழியாக வங்கியில் பெறப்பட்ட தொகை ரூ  2,00,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
  (ஈ) 2018 மார்ச் 29 அன்று விடுத்த இரு காசோலை  ரூ  1,800 மற்றும் ரூ  2,000-இல் இரண்டாவது காசோலை  மட்டுமே செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
  (உ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய சிற்றுந்து மீதான காப்பீட்டு முனைமம் ரூ.1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணக்குப்பதிவியல் - வங்கிச் சரிகட்டும் பட்டியல் Book Back Questions ( 11th Standard Accountancy - Bank Reconciliation Statement Book Back Questions )

Write your Comment